(Reading time: 25 - 50 minutes)

ல்லா பேசுறீங்க தம்பி! நீங்க உட்காருங்க… இதை கொடுத்துட்டு வரேன்”

“மைத்ரீ! தம்பிய கவனிச்சுட்டு அங்க வா” என்று மகளிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார் வடிவு.

மைத்ரீயின் குழப்பம் இன்னும் குறைந்திருக்கவில்லை.  மாறாக அதிகரித்திருந்தது.  ராகுலின் தன்னை ஒருமையில் பேசியது இவளின் குழப்பத்தை கூட்டியிருந்தது.  அவனை உட்கார வைத்தவள்,

“நான் போய் ஜெய்ய கூப்பிடறேன்!” என்றுவிட்டு தியாவை அவனிடமிருந்து வாங்கி கொண்டு நண்பனைத் தேடிச் சென்றாள்.

சற்று முன் ராகுல் சொல்ல அவள் கேட்டது மனதை வெகுவாக குழப்பியிருந்தது.  அவள் கேட்டது நிஜமா அல்லது கற்பனையா? அது நிஜமாயிருந்தாலும் அவன் எந்த தைரியத்தில் அப்படி சொல்லாம்? அன்றும் மாலில் இவளிடம் வம்பிழுத்தான்.  இருமுறை தனக்கு உதவியிருக்கிறான் தான்.  அதற்காக தன்னிடம் அவன் இப்படி பேசுவதெல்லாம் சரியா?

‘அந்த வார்த்தைகள் கற்பனையா? அப்படியிருக்க நான் ஏன் இவ்வளவு கேவலமாக கற்பனை செய்தேன்.  எனக்கு அவர் உதவியதால் இப்படியெல்லாம் கனவு காண்கிறேனோ?’ பொதுவாக எல்லோருக்குமே அவரவருக்கு பிடித்த ஏதோ ஒன்று தான் கற்பனையாக எழும்.  அப்படியானல் ராகுலின் அந்த வார்த்தைகளை அவளுக்கு பிடித்திருக்கிறதோ? மனதிலெழுந்த எண்ணத்தால் அதிர்ந்த மைத்ரீயோ தன்னை தானே கடிந்தாள்.  குழம்பியிருந்தவள் ஜெய்யிடம் ராகுலின் வரவை சொல்ல மறந்தாள்.

காஷை கவனிப்பதும் சந்திரசேகருக்கு உதவுவது சமையல் பொறுப்பை நல்ல கேட்ரிங்க் சர்வீஸ்க்கு கொடுத்திருந்தாலும் அது சரியாக செய்யபடுதிறாதா என பல வேலைகளுக்காக பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தான் ஜெய்.

இதற்கிடையிலும் அவ்வப்போது கைப்பேசியை எடுத்துப் பார்க்க தவறவில்லை.  இத்தனை நாட்களாக சரயூவிடம் பேசாமல் தன்னை தானே கட்டுபடுத்தியிருந்தாலும் இன்று தன்னை அழைப்பாள் இல்லையென்றால் ஒரு மெஸ்ஸெஜாவது அனுப்பாவாள் என்று எதிர்ப்பார்த்திருந்தான்.

டைனிங்க் ஹாலில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தவன் ஃபோன் அலறவும், அழைப்பது சரயூவாக இருக்குமென்று கைபேசியைப் பார்த்தவனுக்கோ ஏமாற்றம்.  அழைத்தது ராகுல் என்றது அது.  ‘ஒருவேளை சரூ அண்ணனோடு வந்திருக்கலாமே’ என்று நினைத்தவன் தன் ஏமாற்றத்தை பின்னுக்கு தள்ளி அவசரமாக ராகுலின் அழைப்பை ஏற்றான்.

“ஹெலோ சஞ்சய்!”

“ஹாய் ராகுல்! எங்க இருக்கீங்க? உங்களை இன்னும் காணலையே.. கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் ஆரம்பிக்க போகுது..”

“நான் மண்டபத்துக்கு வந்து ரொம்ப நேரமாச்சு.  உன் ஃப்ரெண்ட், அவங்க அம்மாவையெல்லாம் பார்த்து பேசிட்ட.. உன்னைதா பார்க்கவே முடியல”

“ஸாரி பாஸ்! டைனிங்க் ஹாலை பார்க்க வந்த.  இதோ வரேன்”

சரயூ வரவில்லையா? ஃபெஸ்ட்கு போவதால் இங்கு வரவில்லையா? இத்தனை நாட்கள் பிரிவு தன் காதலை அவளுக்கு உணர்த்தியிருக்கும், இன்று தன்னை பார்க்க ஓடிவருவாளென்று நினைத்தது தன் முட்டாள் தனமோ என்ற எண்ணமே மனதின் பாரத்தை கூட்டியது.  கனத்த மனத்தோடு ராகுலை காணச் சென்றான் ஜெய்.

ராகுல் பேசும்போது தங்கையை பற்றி சொல்லாதபோதும் அவள் அங்கிருப்பாளோ என்ற கடைசி நம்பிக்கையும் இறந்து போனது, மண்டபத்தின் வலது புறம் தனியாக அமர்ந்திருந்த ராகுலை கண்டபோது.

வலுகட்டாயமாக வரவழைத்த புன்னைகையோடு ராகுலை நெருங்கி அவனை வரவேற்றான் ஜெய்.

ராகுலை ஆதர்ஷிடம் அறிமுக படுத்தி மற்ற உபசாரங்களை முடித்தவன் சரயூவைப் பற்றி ராகுலிடம் விசாரித்தால் என்ன என்று தோன்றவும் மறுகணமே அவள் போட்டியில் கலந்து கொள்வதால் இங்கு வரமுடியவில்லை என்ற பதிலையே சொல்வான் என்ற எண்ணமே கசப்பாக இருந்தது.  அவனிடம் ஏதும் விசாரிக்காது வேறு வேலையிருப்பதாக சொல்லி திரும்பியவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை.

மண்டபத்தினுள் வந்து கொண்டிருந்தாள் சரயூ.

அவளின் வருகை சில்லென்ற தென்றாலாய் இவனை தழுவியது.  ‘சரூ வந்துட்டா!’ என்று உரக்க சொல்லி துள்ளி குதிக்க துடித்தது மனம்.  இத்தனை நாள் அவளை பார்க்காது ஏங்கிய அவனுள்ளம் இப்போது அவளை கண்களால் பருகிக்கொள்ள தவரவில்லை.  மெய்மறந்து அவளைப் பார்த்திருந்தவனை கலைத்தது அவனது கைப்பேசி.

இப்படியா ஜொள்ளு விடுவ ஜெய்? யாராவது பார்த்திருந்தா என்னாயிருக்கும்? என்று மனம் அவனை கேட்கவும் ஜெய் ஒரு மெல்லிய புன்னகையை அதற்கு பதிலாக்கிவிட்டு அழைப்பை ஏற்றான்.

“சொல்லு மைதி!” அவனிடத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.

ராகுலினால் குழம்பியிருந்த மைத்ரியோ அதை கவனிக்காமல், “ராகுல் வந்திருக்காங்க ஜெய்.. உங்கிட்ட சொல்ல மறந்துட்ட.  அவங்களை போய் பாருடா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.