(Reading time: 10 - 20 minutes)

ப்பொழுது உங்களுக்கே புரிந்திருக்கும் இவன் எப்படி பட்டவனென்று!

(இந்த ஆதிதான் இதையும் சொல்லனும் போல! ஆனா இந்த பாஸ் பன்றது சரியில்லை.க்கும்..என்ன பார்க்குறீங்க நண்பர்களே! ஏன் கெட்டவனைப்பற்றி இவ்வளவு விரிவா சொல்லியிருக்காங்க என்றா?

நாம் தோழனைப் பற்றி தெரிந்து கொள்கிறோமோ இல்லையோ,ஆனால் கண்டிப்பாகப் பகைவனைப் பற்றி அறிந்தே ஆக வேண்டும். தோழன், நாம் உரைக்காமலே எந்த நிலையிலும் கைக்கொடுப்பான்.ஆனால் பகைவன் எப்பொழுது நம்மை தாக்கலாமென்று சந்தர்ப்பம் தேடுபவன். நேர்மையானப் பகைவனுடன் போரிடும் அக்காலத்திலே நயவஞ்சகர்கள் இருந்தார்களென்றால்! இக்காலத்தில் சொல்லவும் வேண்டுமா?

இவனை இங்கேயே விட்டுவிட்டு நாம் போகலாம்!அடுத்த இடத்திற்கு  வாருங்கள்.

இடம்: மகாராஷ்திரா

காமத்திபுரா-ஆசியாவிலேயே விலைமாதர் விடுதிகள் அதிகமாக இருக்கும் இரண்டாவது இடம் . இங்கு குற்றத்திற்குப் பஞ்சமில்லை.

கனவுகளின் நகரம்என்று அழைக்கப்படும் மும்பையில்தான் இவ்விடம் உள்ளது!

இந்தியாவில் 1.2 மில்லியன் குழந்தைகள் இது போன்ற விடுதியில்  சிக்கியுள்ளனர்.

விலைமாதர்கள்,அவர்களிடம் செல்லும் நபர்கள்,அவ்விடுதியின் உரிமையாளர்,இடைதரகர்கள்,விலைமாதர்கள் கூடே வாழ்பவர்கள், ஆள்களைக் கடத்துபவர்கள் மற்றும் மீட்கப்பட வேண்டியவர்கள் ஆகிய இவ்வனைவரும் இச்செயலில் சம்பந்தப்படுபவர்கள்.

நாம் பார்க்கும் இவ்விடம் மூன்று அடுக்குக்களைக் கொண்ட கட்டிடம்.உள்ளே நுழைந்தால், பலதரப்பட்ட மனிதர்கள் பல்வேறு உணர்ச்சிகளைத் தங்கள் முகத்தில் பிரதிப்பலித்தப்படி திரிகிறார்கள்.

அங்கு ஒரு அறையில் நடக்கும் சம்பவம்.

இப்படி அழுதுக்கொண்டே இருந்தால் சரியாகிவிடுமா பெரியக்கா? என்று மென்மையாக கேட்டாள் நிஷிதா.

என்னால் முடியவில்லை, வயதும் ஆகிவிட்டது இனி எப்படி என் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன்? ஏற்கெனவே அந்த சத்துரு என் பெண் மேல் குறி வைத்துள்ளான். இதிலிருந்து என் பிள்ளைகளை எப்படி காப்பது நீயே சொல்? என்றுரைத்தாள் ஹேமா.

கவலைப்படிந்த முகத்துடன் அவளை நோக்கி,”டாக்டர் என்ன சொன்னார்கள் அக்கா? என்று கேட்டாள்.

விரக்தியுடன் அவளைப் பார்த்து, நாட்கள் நெருங்குகிறது நிஷி! நான் எவ்வளவுநாள் உயிருடன் வாழ்வேனென்று என்று அவர்களாலேயே கணிக்க முடியவில்லை. என்னைப் பற்றி எனக்கு கவலை இல்லை.என் பிள்ளைகளை மட்டும் இச்செயலில் நுழைந்து விடாமல் காப்பாற்றி விட்டால், அதுவே எனக்கு மரணத்தை எதிர்நோக்கும் வல்லமையைத் தரும். என் எண்ணம் நிறைவேறுமா நிஷி? என்று கேட்டாள்.

தன் மனத்துயரங்களை மறைத்துவிட்டு, உங்களுக்காக என்னால் முடிந்தவற்றை நிச்சயம் செய்வேன் அக்கா,நீங்கள் சற்று நேரம் உறங்குங்கள் என்று கூறியபடி வேளியேறினாள்.

(அங்கொருத்திப் பிள்ளையைக் கொடுமைப்படுத்தி உடல்வளர நினைக்க, இங்கொருத்தி தன் இறுதி மூச்சு அடங்குவதற்குள் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற நினைக்க, மனித மனங்களின் எண்ணங்களையும் செய்கைகளையும் என்னவென்று சொல்ல!)

இடம்: புதுடில்லி

பார்ப்பவர்களுக்கு அங்கு அமர்ந்திருக்கும் பெண், உண்மையில் பெண்ணா இல்லை சிலையா? என்னும் கேள்வியைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தாள்.

ஒருவேளை மிகப்பெரியப் பேரழகியோ? என்றால் அது இல்லை!

பின்..

இமைகளின் அசைவு அவள் உயிரோடு  இருக்கும் பெண் என்பதை நிறுபிக்கிறது.

ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்றும் தோன்றவில்லை, வீழ்ந்த சோகத்தில் திணருவதுப் போலவும் தெரியவில்லை.நானும் இங்கு இருக்கிறேன் என்பது போல் இருந்தாள்.

இனி என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் , வருவது வரட்டும் என்னும் மனநிலையில் இருக்கும் உடல்மொழியுடன் வீற்றிருந்தாள்.

சிந்தனை இல்லா வெற்றுப் பார்வைக் கொண்டவளைப் பற்றி, சிந்தித்துக் கொண்டிருந்தனர் அவளுடன் அந்தப் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் பயணியர்.

இந்த மனித உயிர்கள் மிகவும் விசித்திரமானவர்கள். பிற உயிர்களை அராய்ந்து அவர்களின் பண்புகளை விளக்கும் இவர்களை, ஆராய்ந்துக் கொண்டு போனால் அவை முடிவே இல்லாமல் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.

யாரென்று அறியாத இவளைப் பற்றி வீணாக எண்ணிக் கொண்டிருக்கும் இவர்கள், எதை முக்கியமாக எண்ண வேண்டுமா? அதை மறந்து விடுவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.