(Reading time: 10 - 20 minutes)

சப்பான உண்மை இதுதான். நம் வாழ்க்கையில் அவசியமில்லா குப்பைகளை, நம் மூளையில் கொட்டுவதால்தான் மனித சமூகம் வீழ்ந்துக் கொண்டிருக்கிறது.

தேவையற்ற எண்ணங்கள்கூட ஒரு வகையில் நோய்தான்!

உடலில் நோய் வந்தால் நாம் எப்படி அவதிப்படுகிறோம், அதுமாதிரிதான் இதுவும்! நீங்கள் யோசித்துப் பார்த்தால் உங்களுக்குப்  புரியும். தேவையற்ற சிந்தனைகளினால் நாம் பலமுறை மனவருத்தமோ அல்லது  துயரங்களையோ நிச்சயமாக நம் வாழ்வில் சந்திருப்போம்.

அவ்வண்டியின் பாட்டு மற்றவர்களுக்குப் பிடித்ததுப் போல் அவளுக்குப் பிடிக்கவில்லையோ அல்லது அவளுக்குச் சிறந்த சங்கீத ஞானம் இல்லாததாலோ ?

உற்று நோக்கிக் கொண்டே இருந்தாள் அவ்விரவில்,ஊர்ந்து செல்லும் இரயிலில் ஊண் உறக்கம் கொள்ளாமல்!

 (அவளின் பயணம் தொடரட்டும் நாம் அவளைப் பிறகு சந்திப்போம். சரி, வாருங்கள்.நாம் முதலில் ஆரம்பித்த இடத்திற்கேப் போவோம்.வழியில் இரு இடங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.அவற்றையும் கண்டுவிட்டு செல்லலாம்)

இடம்: ஆந்திரப் பிரேதசம்

போனில் நடக்கும் உரையாடல்

ஜகஜீத் : இன்னும் இரண்டு நாளில் அங்க இருப்பேன் . அதுக்குள்ள நான் சொன்ன வேலை முடிஞ்சிருக்கனும்.என்ன நான் சொல்லறது உனக்குப் புரியுதா?

எதிர்முனை: நீங்கள் சொன்ன வேலையை முடிச்சிட்டு வந்து , உங்ககிட்டப் பேசுறேன் ஜி.

ஜகஜீத் : ம்.முதல் நீ சொன்னத செஞ்சிக் காட்டு. இந்த தடவையும் முன்னமாதிரி, விட்டுட்டு வந்த? என்ன செய்வேனு உனக்கே புரியும்.

எதிர்முனை: இல்ல ஜி.இந்த சமயம் எல்லாம் சரியா முடிஞ்சிடும்.

ஜகஜீத் : ம்.நானே உன்ன மறுபடி கூப்பிட்டுப் பேசற வரைக்கும்,நீ என்னை எந்த வகையிலும் தொடர்புக் கொள்ளாதே.

எதிர்முனை: ஓகே ஜி.

உங்கள எங்க இருந்தாலும் பிடிக்காம விட மாட்டேன். என்கிட்ட இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது. பெரிய ஆளுங்களையே கலங்கடிப்பேன், நீங்களெல்லாம் எம்மாத்திரம்? என்று உரக்கக் கத்தினான் ஜகஜீத் தனியாக.

இவ்வாறு அவன் தனியாகப் பேசுவது,இதவே முதல் முறை.இதுவரை அவன் தொழிலில் இந்த மாதிரியானப்  பிரச்சனை என்றும் வந்ததில்லை.

இவன் காக்கும் கருவியா இல்லை அழிக்கும் ஆயுதமா? விடை காலத்திடம்.

இடம்: கேரளா

பார்த்துப் போவியாடா மா? என்று கேட்டார் முதியவர்.

பயப்படாதீங்க தாத்தா, நான் பத்திரமாப் போயிடுவேன் என்று கூறினாள் அவள்.

போன உடனே , எனக்குப் போன் பண்ணுமா? என்று கூறினார் முதியவர்.

சரி தாத்தா. நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க என்று கூறினாள்.

பேருந்தில் அமர்ந்திருந்திருந்தவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் மற்றும் குழப்பங்கள்.இப்படி ஏகப்பட்ட சிந்தனையில் தாக்கப்பட்டிருந்தாள். எப்படி பிரச்சினையிலிருந்து வெளிவருவது என்று கேள்விகள் மனதை நிரப்பிக் கொண்டன.

விடியலைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவளின் வாழ்வில் விடியல் என்று வரும்?

உலக வங்கியின் கணக்குப்படி ஒரு நாளைக்கு $ 1.90 அதாவது நம் இந்திய பண மதிப்புப்படி 123 ரூபாயில் அல்லது அதற்கும் குறைவாக, தங்களின் தின தேவையை சந்திப்பவர்கள் வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்கள்.

அங்ஙனம் பார்க்கையில் 2016 வருடம், உலகில்9.6% மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். அதாவது நம்மில் 10 பேரில் ஒருவர் தன்னுடைய தினத் தேவையை 1.9 டாலரில் பூர்த்திச் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இப்பணத்தைக் கொண்டு தங்களின் அடிப்படைத் தேவையை அம்மக்களால் பூர்த்திச் செய்ய இயலுமா? அதுவும் விலைவாசி எகிறிவரும் இக்காலத்தில் அது இயலுமா?

உலக  மக்களின் முன்னேற்றம்?நமது உண்மை வளர்ச்சி?

இதையறிந்தப் பொழுது என்னில் தோன்றிய கேள்விகள் பல.கண்டிப்பாக அவற்றை உங்களிடம் நான் பகிரப் போவதில்லை. உங்களுக்கும் இதைப்படிக்கும் பொழுது  நிச்சயம் எனக்கு தோன்றியதில் சிறிதேனும் தோன்றும் என்று நம்புகிறேன்.

கிடைக்கும் என்ற நம்பிக்கையில்

அலைகிறேன்

என் எண்ணங்களை நாடி

குழம்பியது தான் மிச்சம்!

மிச்சத்திலாவது

ஏதேனும் மிஞ்சுமா?

நண்பர்களே! இந்த அத்தியாயத்தோடு பெரும்பாலானவர்களின் அறிமுகம் முடிந்து விட்டது.சில நபர்களைக் கதையின் ஓட்டத்தில் சந்திப்பீர்கள்.கதை இனிமேல் எளிமையாகப் போகும்.இதில் வரும் அனைவருமே சாதாரண மக்கள், அதே சமயம் முக்கியமானவர்கள். உங்களுக்கு யார் பிடிக்கிறதோ? அவர்களே உங்களின் நாயக நாயகிகள். ஏதேனும் கூற  வேண்டும் என்றால் தயங்காமல் சொல்லுங்கள். நன்றி.

விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...

Episode 01

Episode 03

{kunena_discuss:1124}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.