(Reading time: 21 - 41 minutes)

ல்லம்மா, எனக்கு அம்மா ஞாபகம் வரக் கூடதுன்னு அப்பா அம்மாவ பத்தி எங்கிட்ட எதுவும் பேசமாட்டாங்க, அம்மாவோட ஃபோட்டோ எதுவும் அவங்க எங்கிட்ட காண்பிச்சதில்ல, நானும் அவங்கிட்ட அடம் பிடிச்சதில்ல, இன்னும் சொல்லப்போனா அதுக்கு அவசியமும் இல்ல, அப்பாவாவும் அம்மாவாவும் அவங்க என்ன பார்த்துக்கிட்டதால எனக்கு அம்மா இல்லன்னு ஒரு நாளும் தோணுனதில்ல!” தர்ஷினியின் வார்த்தைகளின் தாக்கத்தில் அனைவரும் மௌனமாயினர். அந்த சுழ்நிலையை மாற்ற எண்ணி காவ்யா, “ஓகே, சிவா ப்ரோ ஃப்ளாஷ்பேக்கெல்லாம் இருக்கட்டும், எங்களுக்கு ஏதாச்சும் குடிக்க குடுப்பீங்களா இல்ல அப்படியே ஓல்டு ஸ்டோரீஸ் மட்டும் சொல்லி பேக்  செய்து அடையார் அனுப்பீருவீங்களா?” என்று கேட்க,

அவன் புன்னகைத்தவனாய், “ஒரு நிமிடம் என்று உள்ளே சென்றான்!” செண்பகத்திற்கு தர்ஷினியைப் பிடித்துப்போயிற்று, அவளது பள்ளி படிப்பு, கல்லூரி, விலாசம் என்று ஒன்று விடாது கேட்டு தெரிந்துகொண்டார். தர்ஷினியும் அவரது கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்துக்கொண்டே விஷ்ணுவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்களில் அழகிய பூ வேலைபாடமைந்த கண்ணாடித்தட்டில் நீண்ட இரு கண்ணாடி ட்ம்பளரில் ஆரஞ்சு ஜூசுடன் வந்தான் சிவா. அவன் நீட்டிய தட்டில் இருந்து இருவரும் எடுத்துகொள்ள, தர்ஷினியின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான். தர்ஷினி நிமிரவே இல்லை. காவ்யாவின் பொறுமை எல்லை கடந்து விட்டது. “ப்ரோ, அப்புறம் உங்க வொய்ஃப்ப கண்ணுலயே காண்பிக்க மாட்றீங்க?” என்றாள்.

சவா திரும்பி விஷ்ணுவைப் பார்த்தான் , அவள் பொம்மையோடு விளையாடிக்கொண்டிருந்தாள், செண்பகம் வருத்தத்துடன் பெருமூச்சு விட்டாள். சிவா காவ்யாவைப்பார்த்து, “அவ இப்ப உயிரோட இல்ல, ஷி ஸ் நொ மோர்!” என்றான் அந்த வார்த்தைகளில் ஒரு வறட்சி இருந்தது.

“சாரி, ப்ரோ, எங்களுக்கு தெரியாது, சாரி ஆன்ட்டி!” என்றாள் காவ்யா.

தர்ஷினிக்கு பேச்சே வரவில்லை, அவளது எண்ணப்போக்கு அவளுக்கே விசித்திரமாய் இருந்தது, இதை அறிந்துகொண்டதில் வருத்தம் கொள்ளாது அவள் மன ஏன் நிம்மதி அடைகிறது?  தன் மனம் சென்ற போக்கில் தவரில்லை, சிவா எந்த பெண்ணுக்கும் உரிமையானவன் அல்ல என்ற விசயம் உண்மையில் அவளை மகிழ்வித்தது. அதேநேரம்  விஷ்ணுவை நினைத்து வருத்தமும் தோன்றியது. மென்மையான அவள் உள்ளம் சிவாவுடன் விஷ்ணுவையும் ஏற்றுக்கொண்டது.  சிவாவின் உணர்வுகள் பிரதிபளிக்காத கண்களை அவள் பார்த்தாள், சிவாவும் தர்ஷினியைப்பார்த்தான் இருவருக்கும் ஒருவர் உள்ளத்தை ஒருவர் உணர்ந்துகொள்ள மௌனமே போதுமானதாய் இருந்தது. செண்பகம் காவ்யாவிடம், “பரவாயில்லம்மா, நாங்க அந்த கடுமையான வலியான நாட்களை தாண்டிட்டோம்!”என்றார் மெதுவாக தர்ஷினியின் முகத்தைப்பார்த்தாள். அவள் இன்னும் தலையைத்தாழ்த்தி இமைகளை மூடி கண்களில் திரண்டிருந்த ஒன்றிரண்டு கண்ணீர்துளிகளை மறைக்கமுயன்றாள். சில நிமிட அமைதிக்குப் பிறகு, செண்பகம், “சிவா இரண்டு பேரையும் கூட்டிட்டு போய் வீட்ட சுற்றிக்காட்டு!” என்றார். “ஆமாம்மா, என்றவாரே, வாங்க காவ்யா, வா தர்ஷினி” என்றான். அதற்குள் தர்ஷினி, இல்லங்க இப்பவே லேட் ஆயிடுச்சு, காவ்யா, அங்கிள் கேட்ட டாக்குமென்ட வாங்கிட்டு நாம கிளம்புவோமா?” என்றாள். காவ்யா விழிகளை விரித்து தர்ஷினியைப் பார்த்தாள். “இவள புரிஞ்சுக்கவே முடியலையே.., சிவா கல்யாணமானவன்னு தெரிஞ்சும் இங்க வரனும்னு நினைச்சா, இப்ப தான் ரூட் கிளியர் ஆயிடுச்சே, அப்ப ஏன் பேக் அடிக்கிறா?” அவள் யோசிக்கி, சிவா, “காவ்யா சிஸ், நான் அந்த டாக்குமென்ட சார்கிட்ட டேரைக்ட்டா குடுத்துக்கிறேன். பட் இரண்டுபேரும் இங்க டின்னர் சாப்பிட்டுட்டு தான் கிளம்பணும்!” என்றான் தர்ஷினியைப் பார்த்தவாரே!

“இல்லங்க, இன்னோரு நாள், வர்றோம்” என்றாள் தர்ஷினி சிவாவின் முகத்தைப்பார்த்து, அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்த ஏமாற்றம் அவளை அலைக்களித்தது, இருந்தும் அவள் மனம் பல சிந்தனைகளில் சிக்குண்டு இருந்தது. அவன் சரி என்பதுபோல் தலையசைத்தான்.  இருவரும் கிளம்பினர். தர்ஷினி விஷ்ணுவை அள்ளி அவள் கன்னங்களில் முத்தமிட்டாள், விஷ்ணு தன் இரண்டு கைகளையும் தர்ஷினியின் இரு கன்னங்களில் பதித்து மென்மையாக அவள் முகத்தைப்பார்த்தாள். “நீ நாளைக்கும் வர்றீயா? விளையாட?” என்றாள். “ம்ம்.. வர்றேன்!” என்று பதிலளித்துவிட்டு செண்பகத்திடம் விடைப்பெற்று வெளியே வந்தனர், சிவாவின் தோளில் சாய்ந்துகொண்டு இருவருக்கும் கையசைத்தாள் விஷ்ணு, சிவாவின் கண்கள் தர்ஷினியை விட்டு அரைநொடிக் கூட விலகவில்லை, உண்மையில் அவன் செய்வதறியாது நின்றான். விஷ்ணுவோடு அவனைப்பார்த்தப் பின்னும் தன்னைத்தேடி வந்தவளைப் பார்த்து அவன் மனம் குதுகளித்தது, அவளிடம் தனிமையில் பேசக்கிடைத்த உன்னத சந்தர்ப்பத்தை அவளே இப்போது உடைத்தெரிந்து விட்டாள், அவளே நெருங்கி வந்தாள், அந்த நெருக்கத்தை உடைத்து அவளே விலகியும் செல்கிறாள்.. அவன் மனம் துடித்தது, அவளை சந்தித்தது முதல் அவனை அறியாது அவன் உள்ளம் தர்ஷினியின்  மென்மையான குனத்தையும் எளிமையில் மிளிர்ந்த அவள் அழகையும் இரசிக்கத்தான் செய்தது. கசப்பான அவன் கடந்தகாலம் தந்த வலியனைத்தும் அவளை சந்தித்தது முதல் மறையத்தான் செய்தது. விஷ்ணுவோடு பேசிக்கொண்டே அவன் வீட்டின் உள்ளே வந்தான், தர்ஷினி அமர்ந்திருந்த இடத்தில் ஒரு வண்ண துணிப்பையிருந்தது, அவன் பிரித்துப்பார்த்தான், அழகான வேலைபாடமைந்த சில்க் காட்டன் புடவை, அவனுக்கு புரிந்தது தன் மனைவிக்கென அவள் வாங்கியது, முதல் முறையாக தர்ஷினியை சந்தித்தபோது இளவம் பஞ்சு புடவையில் பெண்மைமிளிர நின்றவளின் முகம் ஞாபகம் வந்தது. அவன் தனக்குள் சொல்லிக்கொண்டான், “தர்ஷினி, யூ ஆர் மைன்”!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.