(Reading time: 21 - 41 minutes)

ள்ளிரவு முடிந்திருந்தது, அந்த பிரபல பப்பிலிருந்து வெளியே வந்த ரிஷி தன் கார் நோக்கி நடந்தான்,  அவனுக்கு பின்னால் ஓடிவந்த அவன் பணியாளன் ஒருவன், “ரிஷி சார், நான் உங்களை வீட்டில விட்டுறேன், சாவியக்குடுங்க!”. ரிஷிக்கு கோபம் வந்தது. “கோபி, எத்தனையோ நாள் போதையில தனியாதானே வண்டிய ஓட்டிட்டு போயிருக்கேன் ஒன்னும் பயமில்ல வீடு பக்கம் தானே!”

 “சார், அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும்,  இன்னிக்கு என்னமோ கொஞ்சம் பயமாயிருக்கு, வழக்கத்தைவிட உங்களுக்கு சரக்கு…அதுமட்டுமில்லாம..” கோபி தயங்கினான்.

“ஓ, என் ஃபிரன்சு யாரும் கூடயில்லன்னு பாக்குறீயா, கோபி சீ ஐயம் ஸ்டெடி ஐ கேன் டிரைவ் மைசெல்ஃப்” தெளிவாக சொன்னான் ரிஷி

“சார், உங்க புது வண்டிய நான் டிரைவ் பன்னினதில்ல சொ, இன்னிக்கு நான் உங்க வண்டிய ஓட்டலாம்னு நினைச்சேன், பரவாயில்ல சார், நீங்க பத்திரமா போங்க!” கோபி சாதுவாக சொல்ல, ரிஷி புன்னகைத்தான். “கேடி கோபி, இப்படி சொன்னா உன்னையே வண்டி ஓட்ட சொல்லுவேனு தெரிஞ்சு வச்சிருக்க, ம்ம்.. ஐ லைக் யுவர் டியூட்டி கான்சியஸ்” கார் சாவியை கோபியிடம் கொடுத்தான், முன்னால் ஏறி சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். கோபி காரை நிதானமாக ஓட்டினான். சாலையின் மின் விளக்குகளின் ஒளி அவன் முகத்தில் விழ, காவ்யாவின் நினைவு தானாக வந்து அவன் உள்ளத்தை நனைத்தது, அவளுடைய இளமையும் துடிப்பும் அவனை ஏதோ செய்ய, இன்னிக்கு மிஸ் ஆயிட்ட டீ, பட் ஐ வில் கெட் யூ சூன், என மனதிற்குள் எண்ணிக்கொண்டான். அவன் உறங்காததுகண்டு கோபி, “சார், உங்கக்கிட்ட ஒன்னு சொல்லனும்!”

“ம்ம், சொல்லு!”

“உங்க ஃபிரன்சு நடவடிக்க கொஞ்சம் சரியில்ல சார், பப்பில கூட பொண்ணுங்கக்கிட்ட அவங்க…நடந்துக்கிற விதம் சரியில்லங்க …”

“கோபி.. ஷட் அப், என் ஃபிரன்ச பத்தி எனக்கு தெரியும், உன் வேலைய மட்டும் நீ பாரு..” – ரிஷி

“சார், இதுவும் என் வேலை தான், உங்களை பத்திரமா பாத்துக்கதான் அப்பாவும் அத்தையும் எனக்கு சம்பளம் கொடுக்கிறாங்க, உங்க ஃபிரன்ஸ் உங்க முன்னாடி நடந்துகிற மாதிரி நீங்க இல்லாதப்ப அப்படி நடக்கிறதில்லை.! அதுவும் பொண்ணுங்க விசயத்தில ரொம்ப மோசம் சார், அவங்கக் கூட நீங்க இருந்து எந்த ஆபத்திலயும் மாட்டிக்காதிங்க சார்!” – கோபி

“கோபி, அவனுங்க கொஞ்சம் பணத்தாசை பிடிச்சவனுங்க, மத்தபடி பப்பில குடிச்சுட்டு ஆடுவானுங்க.. நீ சொல்றத வச்சுப் பாத்த அந்த பொண்ணுங்களுக்கும் அதில விருப்பம் இருந்திருக்கும் அப்படி இல்லாட்டி ஏன் பப்புக்கு வர்றாங்க..! இதோட என் ஃபிரன்சைப்பத்தி பேசுறத விடு!” – ரிஷி கோபமும் எரிச்சலுமாக சொன்னான். கோபிக்கு வருத்தமாக இருந்தது. ரிஷியிடம் இப்போது பேசி பயனில்லை எனத்தோன்றியது, அவன் சீரான வேகத்திக் காரை இயக்கினான்.

கார் கிழக்கு கடற்கரை சாலையோரம் சென்றது, குறுக்குவழியில் உள்ள ஒரு சந்தின் வழியே செல்லும்போது, தூரத்தில் ஒரு பெண் ஓடிவந்தாள்.. வெள்ளை சேலையில் கலைந்த முடியில் தூரத்தில் அவளைப் பார்க்கும்போது கோபிக்கு சிறிது அச்சமாக இருந்தது, அந்த குப்பத்தின் வழியே கார் ஓட்டிக்கொண்டு போன அவனது நண்பர்கள் சந்தித்ததாக சொன்ன பல மோகினிப்பிசாசுகளின் கதை அப்போது ஞாபகம் வந்தது..  அவன் அவளைக்கடந்து காரை மெதுவாக செலுத்தினான், அதுவரை கண்களை மூடி கார் சீட்டில் சாய்ந்திருந்த ரிஷி, ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கண்களை விழிக்கவும் கார் அந்த பெண்ணைக் கடக்கவும் சரியாக இருந்தது. காரின் பின்னால் கையை அசைத்து காரை நிறுத்துமாறு சாடைக்காட்டிக்கொண்டே ஓடி வந்த அந்தப் பெண்ணின் உருவம் கார் கண்ணாடி வழியே ரிஷியின் கண்களில் விழ, அவன், “வண்டிய நிறுத்து!” என கோபிக்கு கட்டளையிட்டான். சிறிது தூரம் சென்று வண்டியை நிறுத்தியவன், “சார், இன்னேரத்துல ஒரு பொண்ணுக்காக வாண்டிய நிறுத்தி ஏதாவது பிரச்சனை ஆயிடும் சார், இது ஏதவது பணம் பிடுங்கும் கோஷ்டியாயிருக்கும் இல்லாட்டி…ஏதாவது…” என அவன் சொல்ல தயங்கியதை ரிஷி முடித்தான்.

“இல்லாட்டி பேய் பிசாசா இருக்கும்னு நினைகிற.. ச்சீ!..கீழ இறங்கு அப்படி அந்த பொண்ணு யாருன்னு தான் பாத்துறுவோம்!” ரிஷி காரிலிருந்து இறங்கவும் அந்தப் பெண் மூச்சிரைக்க ஓடி அவர்கள் அருகே வரவும் சரியாக இருந்தது. வெண் புடவையில், பாதி கலைந்த கூந்தல் இடையைத்தாண்டி தொங்க, வேற்று விருவிருத்து, பயந்து மூச்சு வாங்கி அவன் அருகில் வந்தாள். கோபியையும் ரிஷியையும் மாறி மாறி பார்த்துவிட்டு, ரிஷியிடம், “சார், நான் ஒரு ஆபத்தில மாட்டிக்கிட்டேன் என்ன வீட்டில விட்டுறமுடியுமா ப்ளீஸ், என அவள் பதறும் போதே, தூரத்தில் ஒரு ஜீப் வந்து நின்றது. அதை பார்த்ததும் பயந்து ரிஷியின் பின்னே அவள் பதுங்க, அந்த ஜீப்பைவிட்டு குதித்து இறங்கினர், சிலர்.  ரிஷி பாதி போதையில் எதிரே நடந்து வருவது யாரென பார்த்துக்கொண்டே திரும்பி தன் பின்னே பதுங்கி நின்ற பெண்ணை பார்த்தான், அவள் பாதி அச்சத்தில் நடுங்கிய வாரே அவர்களைப் பார்த்துக்கொண்டே பயத்தில் ரிஷியின் கைகளைப்பற்றிக் கொண்டாள், ரிஷி கோபியைப் பார்க்க, அவன் குனிந்து வண்டியின் உள்ளிருந்து ஒரு நீள கம்பியை எடுத்தான்.  வானத்தில் ஒரு மின்னல் கீற்று வந்து போனது… விழிகள் விரித்து ரிஷி பார்க்கும் போது அவர்களை நெருங்கி வந்தனர் ரிஷியின் நண்பர்கள்,  கோபிக்கு புரிந்துபோனது, அவன் கையிலிருந்த கம்பியை இருக பற்றிக்கொண்டான். எதிரே நின்ற கோபியையும் ரிஷியையும் அவன் பின்னே சொல்லவொன்னா அச்சத்தோடு நின்ற அந்த பெண்ணையும் நெருங்கியது அந்த இளம் பெண்களை சூறையாட துணியும் வேட்டை நாய்கள், மீண்டும் ஒரு மின்னல் கீற்று வானத்தைக் கிளறியது…

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.