(Reading time: 21 - 41 minutes)

காவ்யாவின் கார் சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது. தர்ஷினி, கார் கண்ணாடி வழியே விழியைப் பதித்திருந்தாள், தவிர அவள் உள்ளம் அங்கே இல்லை. அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை வெளியேப் பார்த்துக்கொண்டே துடைத்துக்கொண்டாள். அவள் பக்கம் திரும்பாமலே தர்ஷினியின் நிலையை நன்று உணர்ந்த காவ்யாவோ, மனதில் ஆயிரம் கேள்விகள் ஓட, மெதுவாக மௌனம் கலைத்தாள். “இப்படி கண்ணாடிய பாத்து அழுறதுக்கு, அவர் கூப்பிட்ட உடனே வீட்ட சுத்திப்பாக்க போயிருக்கலாம், அப்படியே அவர் கிட்ட தனியாவும் பேசிருக்கலாம், அப்படி அப்படி செஞ்சிருந்தா, இப்படி இப்படி ஃபீல் பன்ன வேண்டாம்ல” – காவ்யா புன்னகையுடன் தர்ஷினியின் முகத்தைப்பார்த்துக் கூறினாள்.

இப்போது பெண்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“இது சரிவாராது காவீ, நாம அங்க போயிருக்கக்கூடாது!” – தர்ஷினி

காவ்யாவின் முகம் மெல்லிய அதிர்ச்சியைக் காண்பிக்க, அவள் மெதுவாக வண்டியை ஓரம் கட்டினாள். “போச்சுடா, இப்ப வேதாளம் ஏன் முருங்க மரம் ஏறுதாம்? அதான் ரூட் க்ளியரா இருக்கே.. ஓ மேம் சாருக்கு கொஞ்ச வயசாயிட்டுன்னு யோசிக்கீங்களோ?” என்று தர்ஷினியை வேண்டுமென்றே சீண்டினாள் காவ்யா.

லேசான முறைப்புடன், “ஹலோ, அவருக்கு அப்படி ஒன்னும் வயசாகல, ஹீ ஸ் ஸ்மார்ட்! பாவம் அவரே தனியா குட்டி பெண்ண வச்சுகிட்டு கஷ்டபடுறாரு!” லேசான புன்னகையும் வெட்கமும் அவள் முகத்தில் தெரிந்தது…

“ஐயோடா!”  - காவ்யா

“ஏண்டி என்ன ஆச்சு?” –தர்ஷினி

“இந்த உலகத்தில யார வேணும் நாலும் நம்பலாம், ஆன காதல் வந்து பொலம்புறவங்கள மட்டும் நம்பவேக் கூடாது!” கண்கள் சிமிட்டி சிரித்தாள் காவ்யா

ஒரு நொடி தோழியின் கிண்டலை இரசித்துவிட்டு மீண்டும் மௌனமானாள் தர்ஷினி.

“ஹேய் என்ன ஆச்சு உனக்கு, உண்மையிலேயே நீ எதுக்கு வருத்தப்படுற? இப்ப என்னதாண்டி உனக்கு பிரச்சன?”

“இல்ல காவீ, அவரோட ரிலேஷன் நான்னு அவருக்கு முன்னாலேயே தெரிஞ்சிருக்கு, அதான் கோவில்ல வச்சு அவர தேங்காவால அடிச்சப்பக்கூட அவர் என்னத் திட்டல!” இதை சொல்லும்போது அந்த சம்பவம் ஞாபகம் வந்து இருவரும் இதழ்கள் விரிய சிரித்தனர்.

“அதென்னவோ உண்மை, வேர யாராவதுன்னா நம்ம இரண்டுபேத்தையும் உண்டு இல்லன்னு ஆக்கிருப்பாங்க, ஆன அப்பவே அட்வகேட் சார் க்ளீன் போல்டு! யப்பா வச்சக்கண்ண வாங்கவே இல்ல.. ஹீ ஸ் ன் லவ் வித் யூ தர்ஷூ!” – காவ்யா மென்னையாக கடைசி வாக்கியத்தை சொல்ல, தர்ஷினி முகம் சிவந்தது, உண்மையில் அப்படியிருக்கக்கூடாதவென அவள் உள்ளம் ஏங்கியது. அடுத்த நொடி அவனை அடைவது அவ்வளவு எளிதல்ல என உள்ளம் சொல்ல மீண்டும் முகம் வாடினாள்.

“தர்ஷீ, என்னப்பாரு!” – காவ்யா

அவளது மென்மையான மனம் வாடி கண்ணீர் துளிர்க்க காவ்யாவின் முகத்தைப்பார்த்தாள் தர்ஷினி. அவள் கண்ணங்களில் வடிந்த கண்ணீரை துடைத்துவிட்டு காவ்யா தர்ஷினியிடம், “எது எப்படினாலும் சரி, அவர் அட்வகேட்டா இருக்கட்டும், அவங்க அப்பா பெரிய பணக்காரரா இருக்கட்டும், அவங்க தர்ஷூவோட மாமா மகனா இருக்கட்டும், யாராயிருந்தாலும் அவரு இந்த இளவரசிக்கிட்ட மாட்டிக்கிட்ட அடிமை தான் அதில மாற்றமேக் கிடையாது. திருவாளர் சிவாவுக்கும் இளவரசி தர்ஷினிக்கும் விவாகம் சீக்கிரமே கைக்கூடும்” என காவ்யா தர்ஷினியின் நாடியைப் பிடித்துக் கூற, தர்ஷினிக்கு சிரிப்பு வந்தது..

“அப்படியா நான் இளவரசியா?.. அப்ப விஷ்ணு?”

தர்ஷினியின் இந்தக் கேள்விக்கு அவளை முறைத்துவிட்டு வண்டியை துவக்கினாள்.

காவ்யாவிற்கு நன்றாக தெரியும் தர்ஷினியின் மனதில் சொல்லமுடியாத ஏதோ ஒரு காரணமிருக்கிறது என்று, எனினும் தர்ஷினியின் விருப்பம் நிறைவேற வேண்டுமென அவள் உள்ளம் வேண்டிக்கொண்டது.  தர்ஷினியின் இல்லம் அருகே வந்ததும் காவ்யா அவளிடம், “தர்ஷூ, உண்மைய சொல்லு ஏன் அவசரமா அங்கயிருந்து கிளம்பின? உண்மையிலேயே இது உனக்கு சரிவராதுனு தோணுதா?”

தர்ஷினி காவ்யாவின் முகத்தை ஒரு கனம் பார்த்துவிட்டு தொடர்ந்தாள், “காவீ, உனக்கே தெரியும் அம்மாவும் அப்பாவும் விருப்பப்பட்டு கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க, அம்மா வீட்ல இந்த கல்யாணத்திற்கு பயங்கர எதிர்ப்பு அதெல்லாம்மீறி தான் அவங்க கல்யாணம் நடந்தது, சிவா என்னோட அம்மா சைடு ரிலேஷன்ங்கிறது சந்தோஷமாவும் இருக்கு, அதே நேரம் வருத்தமாவும் இருக்கு, இன்னும் கொஞ்ச நேரம் அங்க இருந்தா என்னோட அம்மாவையோ அப்பாவையோ அவங்க ஏதாவது தப்பா சொன்னா நிச்சயம் என்னால அத தாங்க முடியாது! அதான் சீக்கிரமா கிளம்பலாம்னு சொன்னேன் காவீ!”

காவ்யா, தர்ஷினியின் தோளைத்தட்டினாள், “உன்னால மட்டும் தான் இப்படி உன்னோட விருப்பத்தையும் மீறி எல்லாத்தையும் யோசிக்க முடியும், பட் சிவா ப்ரோவும் சரி அவங்க அம்மாவும் சரி ரொம்பவே மென்மையாதான் தெரியுறாங்க!”

“ம்ம், ஆமா காவீ, அப்பா எங்கிட்ட அம்மாவபத்தியோ அவங்க ரிலேஷன் பத்தியோ அதிகம் ஷேர் பன்னல ஆன அவங்க சில நேரம் சொன்னத வச்சு அம்மாவோட ரிலேஷன் ரொம்ப ஹார்ஷ் டைப்புனு நான் நினைச்சுக்கிட்டேன்.. இப்ப சிவாவ பார்த்ததும் அப்படி இல்லனு தோணுது, ஆனா நான் அவங்க ரிலேஷன்னு தெரிஞ்ச ஒரே காரணத்தினாலதான் அவங்க எங்கிட்ட ஃப்ரீயா பேசுறாங்கன்னு நினைக்குபோது கஷ்டமா இருக்கு காவீ!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.