(Reading time: 11 - 21 minutes)

"...லூசு!"-சிறிது தொலைவில் பெட்டியோடு நின்றிருந்த வருண் குரல் கொடுத்தான்.

"என்ன?"

"பெட்டியை யாரு உங்க அப்பனா வந்து எடுத்துட்டு போவான்!"-இயல்பிலே ஒருவருக்கும் மரியாதை அளிக்கும் குணம் அவனிடம் துளியும் இல்லாததால் அதை கீதா பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"போடா!"-அவனை திட்டிவிட்டு தன் தமக்கையின் பக்கம் திரும்பினாள் கீதா.

"ஐ கால் யூ பேக்!"-என்று இணைப்பை துண்டித்துவிட்டு வந்தான் சிவா.

"ஏ...வாலு!நீ எப்படி இங்கே?"

"நான் வர போறது உங்களுக்கு தெரியாது?"

"வருண் வருவது தெரியும்!கீதாக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்ல வேணாம்னு சொன்னான்!நீ வருவது தெரியாதே!"-அவர்கள் பேசிக் கொண்டிருக்க இரு பெட்டிகளை தூக்க முடியாமல் தூக்கி வந்தான் வருண்.

"ப்ரோ!அதை வைங்க!டேவிட்,பெட்டியை எடுத்துட்டு போய் மேலே வை!"-அவன் உத்தரவிட,இரு பெட்டிகளையும் ஒரே அடியாய் தூக்கிக் கொண்டு சென்றான் அந்தத் திடக்காத்திரமான ஆண்மகன்.

"என்ன ப்ரோ?"

"முடியலை ப்ரோ! 1வாரத்துக்கு டிரஸ் எடுத்துட்டு வாடின்னா இங்கேயே செட்டில் ஆக போறா மாதிரி கொண்டு வந்திருக்கா!"-அவன் பெருமூச்சுகளோடு கூற சிரித்துவிட்டான் அவன்.

"வாங்க!"-இருவரையும் வரவேற்று அமர வைத்தான்.

"என்ன விஷயம் வருண்?திடீர் திக் விஜயம்?"

"பேப்பர் சப்மிஷனுக்காக வந்தேன் கீதா!நிம்மதியா ஒரு வாரம் இருந்துட்டு போகலாம்னு பார்த்தா,இதோ இந்த ராட்ஸஸி கூடவே வந்து உயிரை எடுக்குறா!"

"டேய்!நான் ராட்ஸஸியாடா?"

"ஆமான்டி!இப்போ என்னங்கிற?"

"உன்னை..."

"ஏ...ஏ...சண்டை போடாதீங்க!"-இடைமறித்தான் சிவா.

"ஆனா ப்ரோ!எல்லோருக்கும் சனி 7 1/2 வருஷம் தான்!எனக்கு மட்டும் ஆயுசு முழுக்க கூடவே இருக்க போகுது!"-மீண்டும் அடுத்த பிரளயம் வெடிப்பதற்குள் தலைப்பை மாற்றினான் சிவா.

"சரி...இரண்டு பேரும் போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க!சாப்பிடலாம்!டேவிட்,அவங்கவங்க ரூமை காட்டு!"

"சண்டாளி!நீ ஊருக்கு வா இருக்கு!"-கறுவியப்படி சென்றான் வருண்.

"சரிதான் போடா!"என்று சென்றாள் ஆராத்யா.

"ஏன் என்கிட்ட சொல்லலை?"-இதழ் மலர நின்றிருந்தவனிடம் வினவினாள் கீதா.

"சர்ப்ரைஸ்!"-என்றவன் கண்ணடிக்க,சட்டென அவள் முகத்தில் ஒரு மாற்றம் ஒரு நொடியில் ஒரு முறை வந்து மறைந்தது.

"லூஸிக்கிட்ட சீக்கிரம் குக் பண்ண சொல்லு!நான் போய் ஒரு கால் பண்ணிட்டு வந்துடுறேன்!"-என்று படியேறி தன்னறைக்கு ஓடினான் சிவா.

அவள் முகத்தில் மென்மையான புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது.

மிக மென்மையான புன்னகை!!!

"ப்போ!அந்த ராஜகுமாரன் என்ன பண்ணான் தெரியுமா?"-பார்வதி கதை கூறியப்படி இருக்க,அவள் மடியில் அமர்ந்துக் கொண்டு ஆர்வமாக கதைக் கேட்டு கொண்டிருந்தான் விஷ்வா.

"என்ன பண்ணான்?"

"தப்பு பண்ணவங்க மன்னிப்பு கேட்டதால அவங்களை மன்னித்து விட்டுட்டான்!அப்பறம்,அந்த ஊர்ல எல்லாரும் சந்தோஷமா வாழ்ந்தாங்க!"

"ஐ...!"-அவனது பால்நிலா முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது.அவனது புன்னகையை கண்டவள் அவனை வாரி அணைத்துக் கொண்டாள்.

"இன்னொரு கதை!இன்னொரு கதை!"-அவன் வேண்டுதற்கும்,வாயிலில் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.வந்த அந்த கரும் நிற வாகனம் தந்தையுடையது என்பதை உணர்ந்தவன் ஆர்வமாய் பார்த்தான்.அதிலிருந்து புன்னகையோடு இறங்கி வந்தான் ருத்ரா.

"அப்பா!"-உடனடியாக பார்வதியை தியாகித்து,ஓடி சென்று தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்தான் அவன்.தந்தை மற்றும் தனயனின் சங்கமத்தை கண்டவளின் முகத்தில் மலர்ச்சி குடிக்கொண்டது.

என்றுமில்லாமல் தன் புதல்வனின் முகத்தில் தெரிந்த பூரிப்பு ருத்ராவினை அகமகிழ வைத்தது.

அவன் தன் மகனை தூக்கினான்.தூக்கி சில நொடிகள் அவன் மனம் திடுக்கிட்டது.

"என்னடா?தூக்க முடியலை?குண்டாயிட்ட?"

"குண்டாகலை!நான் ஸ்ட்ராங்காயிட்டேன்!"

"ஸ்ட்ராங்காயிட்டியா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.