(Reading time: 15 - 29 minutes)

தன்னையும் திவ்யாவையும் குறித்து கேட்டுக் கொண்டிருந்த அவள் கேள்விகளை வெற்றிகரமாக பேச்சை திசை திருப்பிய ஜீவன்....... முன் தினத்தின் நிச்சயதார்த்த நிகழ்வில் வந்து நின்றான்.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அனி நேத்து என் அண்ணனுக்கு என்கேஜ்மென்ட்…. சும்மாவே என் அண்ணா ரொம்ப ஹேன்ட்சம் இதில நேத்திக்கு என் அண்ணா என்னா சார்மிங்கா இருந்தான் தெரியுமா?

காரணம் இல்லாம இவன் இப்படி பேசமாட்டானே தம்பியின் முகத்தில் பதிந்தது ரூபனின் கண்கள்.

ஹாலில நிறைய பொண்ணுங்க என் அண்ணனைப் பார்த்து விட்ட பெருமூச்சில ஏசி காத்துக் கூட சூடாகிடுச்சு.. ஆனா என்னச் செய்யிறது எங்க அண்ணணுக்கு நிச்சயம் ஆன பொண்ணுதான் அங்க இருந்ததிலேயே ரொம்ப சுமார்.

அடப்பாவி என்னதிது இவன் என் வாழ்க்கையில விளக்கேத்தாட்டும் பரவாயில்லை கொள்ளி கம்பை வைச்சிடுவான் போலவே ரூபன் திகைக்க ஜீவன் தன் பேச்சை நிறுத்தவே இல்லை.

எங்க சாய்ஸா இருந்தா நல்லா அழகா பொண்ணை பார்த்திருப்போம்,……… என்னச் செய்ய எல்லாம் அவனே தேடிக்கிட்டது……...என இழுத்து முடித்தவன் வராத பெருமூச்சை இழுத்து விட்டான்.

எப்படில்லாம் பேசறடா…………திறந்தவாய் மூடாமல் உறைந்தான் ரூபன்.

இங்கப்பாரு நான் உன்னைப் பத்தி மட்டும் தான் பேசறதுக்கு போன் பண்ணேன் நீ உங்க அண்ணனைப் பத்தி பேசிட்டிருக்கிறதா இருந்தா போனை வைக்கிறேன் போ…….அவளின் குரலில் இருந்த ஆதங்கத்தை ஜீவன் உணர்ந்தானோ இல்லையோ ரூபனுக்கு உள்ளூர ஏதோ செய்தது.

போ போ உன் அண்ணனுக்கு வேற பொண்ணப் போய் பார்த்துக்கோ….. பெரிய அண்ணன்.. பொருமினாள்.

ஏ என்ன எங்க அண்ணனைப் பத்தி கொறைச்சு சொல்லிட்டு இருக்க நீ…..

உனக்கென்ன தெரியும் எனக்கு தான் கஷ்டமாயிருக்கு. நான் நம்ம வீட்டில அங்க இருக்கப்போ தினம் அத்தான்ட பேசறதுக்கு போவேன் என் கிட்ட பேசவே மாட்டாங்க….சரி பரவால்லன்னு நேத்து………. எனச் சொல்லி பேச்சை மாற்றிய விதத்தில் அந்த கடிதம் குறித்து சொல்ல வந்து திணறுகிறாள் என்று ரூபனுக்கு புரிந்தது.

நேத்து… எடுத்துக் கொடுத்தான் ஜீவன்.

இல்ல நேத்து நான் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் போனாவது பண்ணுவாங்கன்னு நினைச்சேன் அதுவும் செய்யலை. அவங்களுக்கு பனிஷ்மென்ட் நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். விடமாட்டேன் என்றவள் குரல் பரிதாபத்திலிருந்து வில்லி டோனுக்கு மாறியிருந்தது.

அதுவரை அவளின் பேச்சைக் கேட்டு ரொம்பவே நோகடித்து விட்டோமோ என்றெண்ணிக் கொண்டிருந்த ரூபனின் முகம் அவள் பனிஷ்மென்ட் எனவும் தானாகவே மலர்ந்தது.

பனிஷ்மென்ட் என்னன்னு சொல்லு நான் அண்ணனுக்கு சொல்ல மாட்டேன். ரூபனைப் பார்த்து கண்ணடித்தவனாக ஜீவன் அனிக்காவிடம் கேட்க

அதெல்லாம் சொல்ல முடியாது என்றவளை பேசி பேசிக் கரைத்தான், அவளும் ஒருவழியாக சொன்னாள்.

மேரேஜ் அன்னிக்கு சர்ச்ல பாதர் ……………..இந்த திருமணத்துக்கு சம்மதமான்னு? கேப்பார்ல……

ம்ம்… ஆமாம் என ஜீவன் சுவாரஸ்யமாக கேட்க ,

ரூபனோ இவள் ஏதோ பெரிய ஆப்பாக வைக்க யோசித்திருக்கிறாள் என கதிகலங்கினான்.

அப்படி கேட்கும் போது நான் "இல்லை ஃபாதர், இந்த ஆளோட திருமணம் செய்யிறதுக்கு நான் சம்மதிக்கலை நோ" ன்னு சொல்லிடுவேன்…. எப்பூடி……… என்றாள் வில்லியாக

ஜீவன் பெரிய குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்து இருந்தான்.

அப்புறம் அத்தான் என் கிட்ட ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணுவாங்களா? ரொம்ப பிகு பண்ணிட்டு சரின்னு சொல்லுவேன்.

சூப்பர் ஐடியால்ல……….சிலாகித்தவளும் அவனோடு சேர்ந்து சிரித்தாள். அவர்கள் போனில் பேசி முடியவும்

ஏற்கெனவே சாப்பிட்டு முடித்திருந்த ரூபன் அவசரமாய் ஜீவனிடம் ஒரு சில வேலைகளை ஒப்படைத்து விட்டு எங்கோ செல்வது போல புறப்பட்டுச் சென்றான்.

நீ எங்கப் போறன்னு எனக்கு தெரியுமே என்று எண்ணியவாறே அவனைப் பார்த்திருந்தான் ஜீவன்.

காரில் ஏறி அமர்ந்தவனுக்கு மறுபடியும் வாசிக்க தோன்றவும் எத்தனையாவது முறையாகவோ தன் பையிலிருந்த கடிதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருந்தான்.

சாரி அத்தான்…….. இப்படித்தான் ஆரம்பித்திருந்தது அந்த கடிதம்.

நான் செஞ்சது எல்லாமே தப்புத்தான். அதுக்காக நீங்க என் கிட்ட பேசாம இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

அன்னிக்கு நீங்க பீச்ல கேட்டவுடனே எனக்கு உடனே பதில் சொல்ல வரலை ரொம்ப மிரண்டுட்டேன். அப்புறமா கூட நீங்க என்னை பார்க்கும் போதெல்லாம் என் கிட்ட பதில் எதிர்பார்க்கிறது புரியும் ஆனா எதுவும் சொல்லத்தான் எனக்கு தைரியம் வரலை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.