(Reading time: 9 - 17 minutes)

அண்மையில் தான் அவர்களின் காதலுக்கு பச்சைக் கோடி காட்டினார் வரதராஜன். அன்றைய நாளின் மகிழ்வில் திளைத்தாள் மைத்ரேயி.

ஹாலில், தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தார் வேணுகோபாலன்.வழக்கம் போலவே மகனை சீண்டிக் கொண்டிருந்தார் அருணாச்சலம் தாத்தா.அவர் எதிரே துளைக்கும் பார்வையுடன் அமர்ந்தான் சகிதீபன். அவன் செல்ஃபோனில் இருந்து மெசேஜ் ஒன்று விஷ்வானிகாவின் ஃபோனை அடைந்தது.

வருணின் மீது இருந்த தன் காதலை விஷ்வானிகா சொன்னதுமே, “லைஃப்ல ரிவர்ஸ் சைக்காலஜி ரொம்ப முக்கியம் விஷ்வா.. உன்னையே நான் அப்படித்தானே கரை சேர்த்தேன்?”என்றுரைத்து தனது உண்மைகளை போட்டு உடைத்தான் சகிதீபன்.

தனக்கு இதுதான் வேண்டுமென தெளிவாக பேசிய தங்கையைப் பார்த்த்தும் இனியும் இந்த கோப நாடகம் தேவையில்லை என்று முடிவெடுத்தான் சகி. மறுநொடியே அவளை “விஷ்வா”என்று அழைத்த்தோடு நிறுத்தாமல் தனது மனதில் புதைத்த உண்மைகளைக் கொட்டினான். தமையனை கட்டிக் கொண்டு அழுதாள் விஷ்வா.

“அவ்வளவு பாசமா அண்ணா உனக்கு? இதுக்குத்தான் என்னை வெறுக்குற மாதிரி நடிச்சியா? பாவம் நீ! ஐ லவ் யூண்ணா”என்று அவள் விசும்பிட, ஆதரவாய் அவள் தலையைக் கோதினான் சகி.

“அதெல்லாம் முடிஞ்சகதை  விஷ்வா..இனி நட்த்தி வைக்க நிறைய விஷயம் இருக்கு.. அதுல முக்கியமான ஒன்னு  தாத்தாவோட மனசுல இருக்கும் அந்த ரகசியத்தை கொண்டு வரனும்”

“ஆமா சாம்பவி பாட்டி பாவம்..”

“எல்லாருக்கும்  ஒரு சர்ப்ரைஸ் தரலாம்.இதில் உனக்கும் எனக்கும் நிறைய வேலை இருக்கு..”

“என்ன பண்ணனும்னு சொல்லுண்ணா”

“முதல்ல நீ ஊட்டிக்கு போ.. உனக்கும் வருணுக்கும் ஊடல்னு நம்ப வை சாம்பவி பாட்டியை.!”

“ம்ம்”

“அபி அண்ணா ஏற்கனவே ஊட்டியில் ந்ந்திதாவின் அம்மா வீட்டில் இருக்கான்! மாயாவும் இந்த திட்ட்த்தில் நமக்கு உதவ ஊட்டிக்கு வருவாள்..”

“பாட்டிக்கு சந்தேகம் வரதா?”

“கண்டிப்பா வரும்..அதுக்காகத்தான் உன்னை அங்கே அனுப்பறேன்..”

“புரியல..”

“ஊட்டியில நடக்க விருக்கும் கல்யாண ஏற்பாடு தாத்தா பாட்டிக்குத்தான்..ஆனா பாட்டியைப் பொறுத்தவரை உனக்கும் வருணுக்கும் சர்ப்ரைஸ் நிச்சயதார்த்தம் நடக்குறதா அவங்க நினைப்பாங்க.. சரியா””என்று சகி தன் திட்ட்த்தை விளக்கிட, ஊட்டியை அடைந்திருந்தாள் விஷ்வா.

 கியின் மெஸெஜை பார்த்த்துமே வேணுகோபாலுக்கு ஃபோனை போட்டாள் விஷ்வா.

தாத்தாவைத் தவிர அனைவருமே சகியின் இந்த திட்ட்த்தை அறிந்தே இருந்தனர்.

“வினிம்மா”

“அப்பா”

“என்னடா இந்த நேரத்துல ஃபோன்?”

“அப்பா நீங்க எல்லாரும் உடனே கிளம்பி ஊட்டிக்கு வாங்க” என்று அவள் உரைக்கவும் போலியான பதட்ட்த்துடன்

“என்னமா யாருக்கு என்னாச்சு?” என்றார் வேணு.

“சாம்பவி பாட்டி..”என்று அவள் இழுக்கவும்

“சாம்பவி அம்மாவுக்கு என்ன?”என்று வேணு பதற தாத்தாவின் முகத்தில் அதிர்ச்சி.

ஒரே நொடியில் வெடுக்க ஃபோனை பிடுங்கியவர்

“பவிக்கு என்னாச்சு?”என்றார்.

சகிதீபன்,சாரதா, வேணுமூவரும் அவரின் தவிப்பை நேரடியாகவே பார்த்தனர். சாம்பவி பாட்டிமீது அவர் வைத்திருந்த நேசமானது அம்பலமானது.

“ஏக்சிடண்ட் ஆச்சு தாத்தா”என்று விஷ்வா விசும்ப தாத்தாவோ “பவி!!”என்று அலறினார். சில நொடிகள்தான்! அதன்பின் நம்பிக்கை நிறைந்த குரலில்,

“பவிக்கு ஒன்னும் ஆகாது! எனக்காகவே வாழ்நதவ அவ! என்னை விட்டுட்டு போக மாட்டா! “என்று உளறினார் தாத்தா.மேலும்

“நீ பயப்படாதேம்மா”என்றார்.

ஃபோனை உடனே வைத்தவர் மற்ற மூவருடன் ஊட்டிக்குகிளம்பினார்.

போகும் வழியில் சகியின் கேள்வி கனைகளினால் அவர்களின் காதல் கதையும் வெளிவந்தது.!

சாம்பவி பாட்டியை மனதார விரும்பியிருந்தார் அருண் தாத்தா.அவருக்காக எதையும்செய்திடுமளவு நேசம் நிறைந்திருக்க, ஜாதி எனும்கூறிய வாள் அவர்களின் உறவை வெட்டிப் போட்ட்து.அன்று பிரிந்தவர்கள் அதன்பின் இணையாமல் போனது காலத்தின் சதி!

அந்த சதியை மாற்றிட்த்தான் இத்தனை நாடகம் ஆடினான் சகிதீபன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.