(Reading time: 9 - 17 minutes)

சிலமணி நேரங்களுக்கு பின்,

ஆடம்பரம் இல்லாது எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் சாம்பவி பாட்டியின் கையை இறுக பற்றியிருந்தார் அருண் தாத்தா.

நம்பமுடியவில்லை அவரால்!எந்த பெண்ணை உயிராக நேசித்தாரோ? பெற்றோரின் பேச்சைக் கேட்டு எந்த பெண்ணை பிரிந்தாரோ அவரே மீண்டும் தனக்கு மனைவியாம்!அதுவும் பேரப்பிள்ளைகளின் திட்ட்த்தினால்!

அபி-நந்து,சகி-மாயா, விஷ்வா-வருண் என அனைவரும் அவரவர் ஜோடியுடன் தாத்தா பாட்டியின் காலில் ஆசிப்பெற்றனர்.

“என்ன ஓல்டு மேன் ..எப்படி நம்ம திட்டம்?”என்று சகி கண்ணடிக்க, அவனிடம் தோற்று விட்ட்தை சொல்ல விரும்பாத தாத்தா,

“அய்யே ..கொஞ்சம் சுமார்தான்”என்றார்.

“பாருங்க பாட்டி இவரை!” என்று சகி சலித்து கொள்ளவும் அவர் தோளில் சாய்ந்து கொண்டார் சாம்பவி பாட்டி. முதுமையிலும் அழியாது மிளிர்ந்தது அவர்களின் காதல்!

“இதுதான் தாத்தா வாழ்க்கை.. சும்ம சாதி சம்ப்ரதாயம்னு இன்னும் எத்தனை காலம் பிரிஞ்சு இருப்ப்பீங்க? உங்களை பிரிச்சவங்களே மறைஞ்சு போயாச்சு.. இனி இருக்குறகாலத்தை சேர்ந்தே வாழுங்க!”என்று சகி அறிவுரை கூற

“விட்டா இப்படியே வசனம் பேசி என்னை காசி ராமேஸ்வரம் அனுப்பலாம் பார்க்குறியா? ஒழுங்கா ஹனிமூனுக்கு மொரிசியஸ்போக டிக்கேட் போடு”என்று தாத்தா சிரிக்க, அங்கும் சிரிப்பலை எழுந்தது.

“டேய் கருவாயா! என்னை மறந்துட்டியில்ல??” அந்த சிரிப்பின் ஊடே அவளின் குரல் கேட்க அனைவரின் முகத்திலும் கேள்வியின் பாவம் நிறைந்திருக்க, “ஹேய் மைதாமாவு” என்று ஆர்ப்பரித்தான் சகிதீபன். மறுநொடியே அவளின் பந்தயம் ஞாபகத்திற்கு வர,அவன் அருணை பார்க்க,

“எனக்கு அட்வைஸ் பண்ணியே.!இப்போ உன் காதலை நீ காப்பாத்து” என்று தாத்தா கண்ணடிக்க,சகியின் கண்களில் ஸ்ரீராம் சிக்கிட, தான்யாவின் வாழ்க்கையில் விளக்கேற்றும் பொறுப்பை அவன் கையில் திணிக்க அவசர திட்டமொன்றை தீட்டினான் சகிதீபன்!ஹீ ஹீ

அவனது திட்டம் ஜெயம் ஆனாதா என்பதை சஸ்பென்ஸ்ல நிறுத்துவோமாக!

வணக்கம் ப்ரண்டஸ். மூங்கில் குழலானதே கதை மூலமாக என் மனதில் தோன்றிய பல உணர்வுகளை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.. குறிப்பாக

“சிந்திக்கிறேன் சகிதீபன்” என்பது எனது எண்ணங்களின் பிரதிபலிப்பாகும்.

சில சூழ்நிலைகளுக்கு வளைந்து போகும்நிலை வந்த்தால் கதையை இங்கேயே முடிக்கிறேன்..மீண்டும் இவர்களை உங்கள் முன் நிறுத்திட,சிலபலமாதங்கள் அவசியம். இக்கதைக்கு நீங்கள கொடுத்த ஆதரவுக்கு நன்றி.

எனது எல்லா முயற்சிகளுக்கும் துணை நின்று தட்டி கொடுக்கும் சில்சீக்கு மிக்க நன்றி. பாய்..

முற்றும்!

Episode # 25

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.