(Reading time: 10 - 19 minutes)

“ஆமாம்.. இருந்தாலும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. .அதான் கேட்டேன்..”

“அது சரி.. நீங்க ஏன் அதையே நினைச்சுட்டு வரீங்க ? “ என்று வினவ

முகம் சிவக்க தன் நாக்கை கடித்தவள் .. “பல்பு வாங்குரீயே மலர் நீ.. இப்படியா உளறுவ ? இவர் என்ன நினைச்சுக்கிட்டாரோ தெரியலையே ” என்று எண்ணினாள். 

இருவருமே ஹெல்மெட் அணிந்து இருந்ததால் மற்றவரின் முகம் தெரியவில்லை.. ஆனால் மலரின் ஹெல்மெட் கிளாஸ் எடுத்து விட்டு இருந்ததால் அவளின் கண்களின் மூலம் அவளின் தவிப்பு புரிந்தது செழியனுக்கு .. அவன் மனதில் அப்போது தோன்றியது

“சப்பா... என்ன கண்ணுடா இது... ? உள்ளத்து உணர்வுகளை அப்படியே வெளிலே காமிக்குதே?”  என்ற எண்ணம் தான்.

அவன் கண்கள் அவளின் கண்களையே ஊடுருவ, அவன் கிளாஸ் அணிந்து இருந்ததால் மலருக்கு அது தெரியவில்லை.. சற்று நேரம் தவித்தவள்,

“அந்த பாட்டு என்னோட favourite .. நீங்க பாடினதும் உங்கள பிரபுவா நினைச்சேன்.. ஆனால் உங்க நதியா யாரா இருக்கும்னு அப்பலேர்ந்து கற்பனை பண்றேன்.. ஆனால் எதுவும் செட் ஆக மாட்டேன்குது.. அதான் அத உங்க கிட்டேயே கேட்கலாம்ன்னு “ என்று இழுக்க,

“ஓ.. என்னோட நதியா யாருன்னு தெரியனுமா.. ? சீக்கிரம் சொல்றேன்.. உங்க கிட்டே சொல்லாம விட மாட்டேன்.. ஒகே வா ?”

மலர் சரி என்று தலை ஆட்டினாள்..

“வாங்க போகலாம்..” என்று செழியன் அழைக்க , இருவரும் கிளம்பினர்..

பிறகு வீடு வர, மலர் செழியனை வீட்டிற்குள் அழைத்தாள்.. முதலில் தயங்கியவன், பின் உள்ளே வந்தான்.

தனி வீடுதான்.. என்றாலும் பழமையும் , புதுமையும் கலந்து இருந்தது மலரின் வீடு.. முதலில் சற்று பெரிய கேட்... ஒரு கார் உள்ளே நிற்கும் அளவு போர்டிகோ.. அதே அளவு வீட்டை சுற்றி தோட்டம்.. போர்டிகோவின் மறு புறம் ஒரு நடுத்தர அளவில் மர ஊஞ்சல் ..

போர்டிகோவை தாண்டியதும் ஒரு சின்ன வரண்டா.. வரண்டா அழகான சிமெண்ட் தரையில் ரெட் oxide போடப்பட்டு இருந்தது.. அதில் சிறிதாக நான்கு மூங்கில் chair... நடுவில் ஒரு சின்ன மூங்கில் டீபாய்.. ஒருபுறம் செருப்பு விட ஒரு சட்டத்..

அதற்கு பின் ஹால்.. ஹாலில் மத்தியில் சோபா செட் போடப்பட்டு இருக்க, ஒரு சுவரில் LED டிவி.. டிஷ் connection உடன்.. அதன் அருகில் ஷோ கேஸ் இருக்க, அழகான சின்ன சின்ன கலை பொருட்களோடு கொஞ்சம் போடோஸ் இருந்தது..

ஹால் ஒருபுறம் மூன்று அறைகள் இருக்க, மற்றொரு புறம் பாதி வரை சுவர் தடுத்து இருக்க dining ஹால் மற்றும் சமையல் அறை வாசல் இருந்தது..

ஹால் வாசல் நேர் எதிர் புறமாக மாடிப்படி இருக்க, பார்ப்பதற்கு சின்ன சிட் அவுட் மாதிரி ஒன்று இருந்தது.. அதில் இரண்டு கதவுகள் தெரிய அதுவும் ரூம் என்று தோன்றியது..

இத்தனையும் வாசலில் இருந்து உள்ளே வந்து ஹால் சோபாவிற்கு வருவதற்குள் நோட்டம் விட்டு விட்டான் செழியன்..

சுந்தரம் பாட்டி யார் வந்து இருக்கிறது என்று பார்க்க, செழியன் அவர் அருகில் வந்து

“வணக்கம் பாட்டிமா” என்று பேச ஆரம்பித்தான்.

“தம்பி யாரு?” என்று வினவ,

“என்ன பாட்டி.. என்னை நினைவு இல்லியா? உங்க பேத்தியோடு வேலை பார்கிறேன்.. அன்னிக்கு கூட ஹோடேலில் பார்த்தேனே..? என.

“ஆமாம்.. தம்பி.. இப்போ நினைப்பு வருது.. ஒருக்கா தானே ஒன்னிய பார்த்தேன். அதா சட்டுன்னு நினைப்பு வரல. சுவமா இருக்கீயளா?” என்று வினவ,

அதற்குள் உள்ளே சென்று தன் அன்னையை அழைத்து வந்த மலர், பாட்டி பேசுறது செழியனுக்கு புரிகிறதோ இல்லையோ என்று,

“சாரி.. பாட்டி.. நீங்க நல்லா இருக்கீங்களா அப்படின்னு கேட்குறாங்க.. அவங்க சவுத்லே இருந்தவங்க.. சட்டுன்னு இங்கே உள்ள வார்த்தைகள் வர மாட்டேன்குது..” என்று கூற,

“இட்ஸ் ஓகே. மலர்.. எனக்கு புரியுது “ என்றவன், “வணக்கம் ஆன்டி.. எப்படி இருக்கீங்க..” என்று மலரின் அம்மாவை விசாரித்தான்.

அவரும் பதில் கூறி, அவனை காபி சாப்பிடுமாறு கூற, மறுத்தாலும் விடாமல் எடுத்து வர சென்றார்.

அதற்குள் மலர் செழியன் இருவரும் ஏதோ காலேஜ் சம்பந்தமாக பேச ஆரம்பித்து இருந்தனர். அவர்கள் பேசுவது புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தார் சுந்தர வடிவு.

வள்ளி காபி எடுத்து வரும்போது வேலனும் வந்து விட, வீட்டிற்குள் கேட்ட பேச்சுக் குரலில் யார் என்று பார்த்தவர், செழியனை கண்டதும்

“ஹலோ professor சார்..வாங்க .. “ என்று வரவேற்றார்..

அவர் வரவும் எழுந்து கொண்ட மலர், சற்று தள்ளி நின்று கொண்டாள்.

“அப்பா. எங்க கூட வேலை பார்க்கிற செந்தில் சார்க்கு கல்யாணம்.. அதற்கு பார்ட்டி என்று சொல்லி இருந்தேன் இல்லியா? பார்ட்டி முடிந்து நான் தனியாக வரவே எனக்கு துணையாக வந்தார்..” என்று கூற,

“ஏன் சார்.. உங்களுக்கு சிரமம்.. மலர் போன் செய்தால் நானே வந்து கூப்பிட்டுக் கொண்டு இருப்பேனே..” என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.