(Reading time: 10 - 19 minutes)

“இதுலே என்ன சிரமம் அங்கிள்.. எங்கள நம்பி தான் நீங்க அனுப்பி வைக்குறீங்க.. அவங்கள பத்திரமா உங்க வீட்டிலே விடறதும் எங்க பொறுப்பு தானே.. அதோட நான் எங்க வீட்டிற்கு இதை தாண்டிதான் போயாகனும்.. சோ நான் கொண்டு விட வந்தேன்..”

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. உங்கள பத்தி நிறைய சொல்லிருக்கா மலர்.. தினமும் எதாவது சொல்லிட்டு தான் அடுத்த வேலையே..”

“என்னை பத்தி என்ன அங்கிள்,  சொல்லிருக்காங்க? ரெண்டு பேருமே காலேஜ் விஷயங்கள் தாண்டி பேசினது இல்லியே..?” என,

அதுதான் சார். உங்க கிளாஸ் , உங்க knowledge, பசங்க கிட்டே உங்க appraoch, காலேஜ்லே உங்க புகழ்.. ன்னு வாய திறந்தா மூட மாட்டா. அவளோட ஆசையே.. அவளும் உங்கள மாதிரி நல்ல பேர் எடுக்கணும் அப்படின்றதுதான்.. .” என,

செழியன் மனதிற்குள் குத்தாட்டம் போட்டுக் கொண்டான்.. வெளியில் நல்ல பிள்ளையாக “ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அங்கிள்.. மலருமே நல்ல subject knowledge உள்ளவங்க தான்.. மத்தது எல்லாம் இன்னும் கொஞ்சம் அனுபவப்பட்டா வந்துற போகுது.. “  என்று பேசியவன், மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு கிளம்பி விட்டான்.

வேலனும், மலரும் வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர்..

ன்று வீட்டிற்கு மிகுந்த உற்சாகத்துடன் சென்ற மகனை யோசனையோடு பார்த்தார் செழியனின் அப்பா..

தன் அறைக்கு சென்றவன், அன்றைக்கு காலையில் பார்கிங் பகுதியில் அவள் நின்று இருந்ததை வரைந்தவன், பிறகு வேறு ஒரு படம் வரைய ஆரம்பித்தான்.

மலர் வீட்டு ஹால் ஷோ கேசில் பார்த்த போட்டோ ஒன்று அவன் மனதை கொள்ளை கொண்டது.. அதை தன் கையேடு எடுத்து வர முடியாமல் ஏங்கியவன், அந்த போட்டோவை தன் கண்களால் ஸ்கேன் செய்து .. தன்னுடைய மெயின் மெமரி ஆனா இதயத்தில் சேமித்து வைத்து இருந்தான். அதை இப்போது வரைய ஆரம்பித்தான்

“ஊஞ்சலில் ஆரஞ்சு கலர் பாவடையும், கோல்டன் கலர் தாவணியும் அணிந்து , தலையில் ஒற்றை பின்னலை முன்னால் விட்டு , இரண்டு கைகளையும் ஊஞ்சலில் பிடித்து இருக்க, கால்களோ உயரமாக ஆடியதில் நீட்டி இருந்தது.. இந்த படம் தான் அவனை மிகவும் கவர்ந்தது.. அதிலும் மெல்லிய கொலுசு பாதங்களை சுற்றி இருக்க, அந்த கால் அழகு.. அவனின் மனதை எங்கோ அழைத்து சென்றது..

அழகே அழகு தேவதை

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல குளிர்ந்து நின்றது

கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும் கேள்வி ஆனது

பொன்முகம் தாமரை பூக்களே கண்களோ

மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

 

சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன

சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன

மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ

ஒரு அங்கம் கைகள் அறியாதது

பூ உலாவும் கொடியை போல இடையை காண்கிறேன்

போக போக வாழை போல அழகை காண்கிறேன்

மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ

இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

மாவிலை பாதமோ .. இந்த வரிகள் மட்டும் repeated mode போட்டு கிட்டத்தட்ட பத்து தடவை கேட்டு கொண்டு இருந்தான் செழியன்..

செழியன் மனதில் மலர் கூறிய “உங்க நதியா எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்ற வார்த்தைகளே ஓட,

“ஹேய்.. கண்ணம்மா.. என்னோட நதியா நீதான்னு கூடிய சீக்கிரம் உனக்கு புரிய வைக்குறேன் டார்லிங்” என்று சிரித்துக் கொண்டான்..

அவன் எண்ணம் நிறைவேறுமா?

தொடரும்!

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.