(Reading time: 8 - 15 minutes)

"என்ன எதுக்கு பாக்கணும்.. ஓகே சொல்லுங்க எதுக்கு வர சொன்னிங்க?"

"சீக்கிரம் சொல்லுங்க நான் வீட்டுக்கு போகணும்" அதில் உள்ள யாரையும் பார்த்தால் நல்லவர்கள் போல் தெரியவில்லை அவளுக்கு.. வீட்டுக்கு ஓட வேண்டும் என்று தோன்றியது.. தெரியாமல் வந்து மாட்டி கொண்டோம் என்று தோன்றியது (லேட் அறிவு). அவள் வெளியில் போக முடியாத வண்ணம் அஜய் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்..

அனைவரும் அமர்ந்ததும் அதில் ஒருத்தன் பேச ஆரம்பித்தான்..

" என்ன மேடம் எங்க அஜய் உங்களுக்கு செட் ஆகலையா வேற கல்யாணம் பண்ண போறீங்க போல?"

"இல்ல சும்மா பார்க்கறீங்க வீட்டுல அவ்ளோ தான்"

"டேய் நீங்க இருங்கட... சொல்லு ஸ்ரீ என்ன சாப்பிடலாம்?" என்று கேட்டான் அஜய்.

"எனக்கு ஒன்னும் வேணாம்.. என்ன விஷயம் சொல்லுங்க ?"

" எதுக்கு அவசர படுற என் பிரண்ட்ஸ் அறிமுகம் படுத்துறேன்.."

"ப்ளீஸ் அஜய் எனக்கு இதுக்குலாம் நேரம் இல்லை..என்ன விஷயம் சொல்லுங்க ?"

" சரி ஸ்ரீ அவசர படாத.. என்ன முடிவு பண்ணிருக்க?"

" எத பத்தி கேட்குறீங்க?"

" என்னமா கண்ணு தெரியாத மாதிரியே கேட்குற அஜய் கிட்ட அதன் நீங்க ரெண்டு கல்யாணம் பண்ணிக்க போறது பத்தி?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான்.. அவனை பார்த்து முறைத்து விட்டு பேச்சை தொடர்ந்தாள்..

" எனக்கு எங்க வீட்ல யாரு பார்க்குறாங்களோ அவுங்க தான் மாப்பிளை.. இதான் என்னோட முடிவு வழி விடுங்க நான் கிளம்புறேன்..

" என்னமா துள்ளுற நீ எத்தனை பேர ஏமாத்துவ.. சும்மா இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழுற வழிய பாரு" என்றான் ஒருத்தன்.

" என்ன மரியாதை இல்லாம பேசுறீங்க? ஏய் அஜய் என்ன இது?"

" ஹே ஸ்ரீ கோவப்படாத அவன் கேட்டதில் என்ன தப்பு இருக்கு.. என்ன கல்யாணம் பண்ணிக்கோ.."  இவ்ரகள் பேசுவதை அனைத்தும் அஸ்வினும் கணேஷும் கேட்டு கொண்டு இருந்தார்கள்.. கோபம் அடைந்த ஸ்ரீ எழுந்து விட்டாள். அவன் எழுவான் வழி விடுவான் என்று நினைத்தாள் அவன் எழுந்திருக்கவில்லை..

" எந்திரி அஜய் நான் போகணும். வழி விடு.."

" உட்காரு ஸ்ரீ.."

" வழிய விடு மரியாதையா..."

"ஹே உட்காருடி" என்று அஜய் அவள் கை பிடித்து இழுத்தான். அடுத்த நொடி அறை விழுந்தது அஜய்க்கு ஸ்ரீயிடம் இருந்து அல்ல அஸ்வினிடம் இருந்து..

" எவண்டா என் பொண்டாட்டி மேல கை வைக்குறது? இப்போ பேசுங்கடா பார்ப்போம்?.." நடுங்கி கொண்டு இருந்த ஸ்ரீயை அவன் கையணைப்புக்குள் கொண்டு வந்துவிட்டான். அதற்குள் போலீஸ் வந்து விட்டனர் அங்கு..

" பொம்பள பிள்ளையை மரியாதை இல்லாமையா நடத்துறீங்க? கொண்டுருவேன் ராஸ்கல் ... கான்ஸ்டபுள் எல்லாத்தையும் பிடிச்சு வண்டில ஏத்துங்க" அவர்களை அள்ளி போட்டு கொண்டு சென்றுவிட்டனர்.

நடுங்கி கொண்டு இருந்தவளை ஒரு அதட்டல் விட்டான்..

" ஏய் உன்ன தான் நான் இருக்கறப்போ உனக்கு என்ன பயம் ? இந்த தண்ணிய குடி கொஞ்சம்.." என்று குடிக்க வைத்தான்.. ஒரு காப்புசினோ பார்சல் என்றான் அந்த சிப்பந்தியை பார்த்து.. வாங்கி கொண்டு அவளை தன் காருக்குள் தள்ளிவிட்டு கிளம்பிவிட்டான்... என்ன நடக்கிறது என்று அவளுக்கு புரிய வில்லை.. அழுதாள் ஓ வென்று... அவள் அழுகட்டும் என்று  விட்டு விட்டான்... அவனால் பொறுக்கமுடியவில்லை அவள் அழுவதை.. ஆள் இல்லாத பாதையில் வண்டியை நிப்பாட்டி அவளை காற்று புகாத வண்ணம் அணைத்து கொண்டான்...

“மறு வார்த்தை பேசாதே

மடி மீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கணவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே

விரல் உன்னை வருடும்*

மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக

இமை தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண் ஆனதே

மறந்தாலும் நான் உன்னை

நினைக்காத நாள் இல்லையே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.