(Reading time: 10 - 19 minutes)

ந்த ஊரின் பெரியமனிதர்கள் எல்லாரும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். அவர்களை அழைக்க வந்த தாத்தா உட்பட..

என்ன வென்று தெரியாமலே இவர்கள் போகும் பொழுது அவர்களை அழைத்த அந்த தாத்தா கவியை, அவளுக்கு எதிரில் நின்றிருந்த நால்வரிடம் காட்டி,”இந்த பொண்ணு தானா..”என்றுக் கேட்டார்.

“ஆமாங்க அய்யா..”என்றனர் நால்வரும் கோரசாக..

அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று கவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்கள் அப்பொழுதுதான் கவனித்து தன்னை கோபமாக பார்த்து கொண்டிருக்கும் ஒரு இளைஞனும் அங்கு இருக்கிறான் என்று..

அவனை தொடர்ந்து கவனித்த பொழுதுதான் அவனை ஒட்டி ஒரு பெரிய கூட்டமே இருந்தது...அது அவனது குடும்பம் என்று அவர்கள் இவளை பார்த்தப் பார்வையிலே அவள் தெரிந்துக் கொண்டாள் கவி.அவர்கள் அனைவரும் அவளை கோபமாக பார்க்க எதற்காக அவர்கள் அவளை அப்படிப் பார்க்கிறார்கள் என்று அவளுக்கு தெரியவில்லை.

அதற்கான விடையை  அந்த பெரியவர் அப்பொழுது கூற அதைக் கேட்ட கவிக்கு தான் கோபமும் ஆத்திரமும் தாங்க வில்லை.

அங்கு இருந்தவர்கள் தங்களுக்குள் எதுவோ முனுமுனுத்துக் கொண்டிருக்க ,அந்த பெரியவர் அந்த சத்தத்தையும் தாண்டி பேசத் தொடங்கினார்.

“இங்க பாருமா..,நேத்து நீனும் இந்த பையனும் ஒரே வீட்டுல இருந்திருக்கிங்க..,இப்படி கல்யாணம் ஆகாத ரெண்டு பேரு ஒரே வீட்டுல தனியா இருக்குறது,பெரிய குதம்மா..”என்று அவர் அவளை இங்கு அழைத்து வந்ததுற்கான  காரணத்தை கூறினார்.

அதைக் கேட்ட கவி கொதித்துப் போய்விட்டாள்.

“தாத்தா என்ன சொல்லுரிங்க...,நான் அவர பார்த்ததே இல்ல..”என்று அவள் கூற

இடைமறித்த இன்னொருவர்...,”நீயும் அந்த பையனும் ஒரே வீட்டுல இருந்துரிகிங்க...”என்று அவரும் திரும்ப அதையே கூற..,

கோபம் அடைந்த கவி,”என்ன சார்..,நான் தான் திரும்ப திரும்ப சொல்லுரேன்ல..,அவன் யாருனே தெரில எங்க வீட்டுக்கு வந்திருந்த அவனை திருடனு சொல்லி தண்டனைக் கொடுக்காம..,என்னோட அவனை சேர்த்து வச்சி பேசிருக்கிங்க...”என்று அவள் முடிக்கவில்லை,

அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த அந்தப் பாட்டி அவளது அருகில் வந்து அவளது மூடியை பிடித்து இழுத்து,”யாருடி..,என்னோட பேரனா..,இன்னொரு தடவ சொல்லிப் பாரு உன்னோட வாய தச்சிடுவேன் தச்சி..,அவனோட வீடுதான்டி அது..”என்று அவர்க் கத்த,அவர் சொல்வது புரியாமல் அவள் வலியால் துவண்டாள்.

தனது குடும்பத்திருக்கு இந்த தகவலை சொல்லிக் கொண்டிருந்த விஷ்வா பதட்டமாக ஓடி வர, அதற்குள் விஷ்வா சொன்னதைக் கேட்டு வந்த ஆகாஷ் அந்த பாட்டியின்  கையிலிருந்து அவளைப் பிரித்து எடுத்தான்.

அவனை பார்த்தவுடன்  அதுவரை தனது அழுகையை கட்டுப்படுத்தி இருந்தவள்..,”மாமா...”, என்று அவன் தோள்மீதே சாய்ந்தாள்.

அதைப் பார்த்த அந்த இளைஞனின் முகமோ கோபத்தில் சிவந்தது..,

அதற்குள் கவியின் குடும்பத்தில் அனைவரும் அங்கு வந்தனர் .அவர்களை பார்த்ததும் அவளுக்கு அழுகை இன்னும் அதிகம் ஆனது..,அவளது அருகில் வந்த மாலதி அவளை தனது தோளில் சாய்ந்துக் கொண்டார்.

“அம்மா..”என்று அவள் தோளில் சாய்ந்து அவளும் அழ ஆரம்பித்தார்.

அங்கு வந்த நடராஜனும் பெரியவர்களிடமும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவர்கள் நடராஜன் சொல்வதை காதில் வாங்கவில்லை.

அதற்குள் நேற்று வெளியூர் சென்றிருந்த நாராயணனும் வந்து சேர்ந்தார்..

எவ்வளவோ இவர்கள் சொல்லியும் கேட்காத ஊர் தலைவர்கள் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு தெரிவித்தனர்.

அதைக் கேட்ட கவிக்கு தலையே சுத்தாதக் குறைதான்.அதைவிட அவளது மாமா சொன்ன செய்தி அவளை கதிகலங்க செய்தது.

“உங்களுக்கே தெரியும் மாமா..,எங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனையுனு..,அப்படிப் பட்டக் குடும்பத்தோட எங்க பொண்ண காலம் புல்லா அனுப்ப சொல்லுரிங்க..”என்று அவர் அந்த பெரியவர்களிடம் கூறினார்.

ஆனால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை அந்த ஊரின் முறையை மாற்றிக் கொள்ள மாட்டோம் என்றுக் கூறினார்கள்.

நாராயணனும் எவ்வளவோ கூறிப் பார்த்தார் ஆனால் அவர்கள் கேட்கவில்லை`அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அந்த திருமணத்துக்கு ஒத்துக் கொள்ளாமல் விவதாம் செய்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த இரண்டுக் குடும்பத்தின் பேச்சை கேட்காத அந்த ஊர் மக்கள் அவர்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

கோபம் அடைந்த ஆகாஷ்,நடராஜனிடம் வந்து,”அப்பா நீங்க வாங்க நாம போகலாம் கவியக் கூட்டிட்டு போகலாம் ..”என்றுக் கூற கொதிப்படைந்த அந்த ஊர் பெரியவர்கள் தங்களை மீறி எவ்வாறு போவீர்கள் என்றுப் பார்ப்போம் என்றுக் கூற நடராஜனுக்கு தனது மகன் மீதுக் கோபம் வந்தாலும் கவிக்காக அவன் பேசியது அவருக்கு இதமாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.