(Reading time: 10 - 20 minutes)

வடிவு மெதுவாக “என்ன தாயி .. இன்னிக்கு கண்ணாலத்துக்கு போயிட்டு வந்த கதை எல்லாம் சொல்லுவன்னு பார்த்தேன். உன் அம்மாக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க.. கல்யாணம் நல்ல நடந்ததா?”

“நல்லா நடந்தது ஆச்சி.. நான் போகும்போது மாப்பிள்ளையா ஊர்வலம் அழைச்சிட்டு வந்தாக.. மண்டப வாசலில் ஒரே ஆட்டம் தான் போ.. அதிலும் எங்க HOD சூப்பர்ஆ குத்துபட்டா போட்டு ஆடிட்டு இருந்தாரு.. அப்புறம் கல்யாணம் முடிஞ்சு பெரியவங்க எல்லாரும் வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டு போனாங்க.. நாங்களும் கிப்ட் கொடுத்துட்டு போட்டோ எடுத்தோம்.. அதுக்கு அப்புறம் சாப்பிட்டு கிளம்பி வந்த்ட்டேன்.. ஆச்சி..”

“நேத்திக்கே நீங்க பரிசு கொடுத்து போட்டோ எடுக்கத்தான் வரவேற்பு வைக்கிறாங்க அப்படின்னு சொன்னியே.. இன்னிக்கும் திருப்பி அதயே தானே செஞ்சுருக்கீங்க... அதுக்கு எல்லாம் ஒரே நேரத்துலே வச்சா... கல்யாணம் பண்றவங்களுக்கு செலவாவது குறையுமில்ல.. “

“அது அப்படி இல்லை ஆச்சி.. வேலைக்கு போறவங்க எல்லோரும் காலையில் கல்யாணத்திற்கு போயிட்டு அவங்க வேலைக்கு போகணும்னா.. ஒருநாள் லீவ் போய்டும்.. அதுனாலே வரவேற்பு சாயங்கலத்துலே தான் வைப்பாங்க.. அதுக்கு அவங்க கூட வேலை பார்க்கிறவங்க, friends .. இன்னும் வேற நெருங்கின யாருக்காவது கல்யாணம் இருந்தா அங்கே போக வேண்டியவங்க, இவங்க எல்லாம் வரவேற்புக்கு வருவாங்க..  கல்யாணத்துலே சொந்தகாரங்க, நெருங்கின சில friends இவங்க எல்லாம் கலந்துப்பாங்க.. எங்க காலேஜ்லேயே மற்ற department staff எல்லோரும் நேத்திக்கு வந்துட்டு போய்ட்டாங்க.. இன்னிக்கு நாங்க மட்டும் தான் காலேஜ் காரங்க.. மத்த எல்லாம் அவங்க சொந்தகாரங்க தான்..”

“அது என்னமோ இந்த காலத்துலே.. கல்யாணத்துக்கு பண்ற செலவு பார்த்தா, அந்த பணத்தை பொண்ணு மாப்பிள்ளை கையிலே பணமா கொடுத்துறலாம் போலே இருக்கு.. என்ன விலைவாசி விக்குது..? “

மலரின் அம்மா .. “மலர்.. இன்னிக்கு ரொம்ப அழகா இருந்தேடா தங்கம்.. “ என்று சொல்ல,

“க்கும்.. மலர் அழகுலே என்னிய கொண்டு இருக்கு.. அதான் அம்புட்டு அழகு..” என வடிவு சொல்ல,

அம்மாவும், பொண்ணும் பாட்டியை முறைத்தனர்..

பின்னே அவள் ஆச்சி பேர்தான் சுந்தர வடிவு.. உருவமோ அதற்கு நேரெதிர்.. இப்போதே ஒடிந்து விழுபவர் போல் இருப்பவர், வாலிபத்திலும் அப்படியேதான்.. அதிலும் அவள் தாத்தா... நல்ல ஆஜானுபாகுவாக உயரமும் பருமனுமாக இருப்பவர்.. வடிவோ ஒல்லியாக இருக்கும் இடமே தெரியாமல் இருப்பவர்.. ஆனால் குரல் மட்டும் எட்டு ஊருக்கு அந்தண்ட கேட்கும்..

அப்பேற்பட்டவரோடு களையான முகமும், அளவான உடல் எடையும் , மெல்லிய என்று சொல்ல முடியாவிட்டாலும் சாதாரண குரலும் கொண்ட மலரோடு ஒப்பிட்டால் இருவரும் முறைக்காமல் என்ன செய்வார்கள்..

அவர்கள் முறைப்பினை சட்டை செய்யாத வடிவோ

“வள்ளி... நம்ம பொண்ணு இந்த மாதிரி அலங்காரம் பண்ணிட்டு எங்கே போக அவசியம் வந்துச்சு..? இவ நல்லா வளர்ந்தப்புறம், நம்ம நெருங்கின சொந்தத்துலே எந்த விசேஷமும் வரல. இவளும் படிப்பு, படிப்புன்னுட்டு கோவில் திருவிழாவிற்கு கூட வரதில்லை.. அதான் பிள்ளை வளர்த்தியும், வனப்பும் நமக்கு தெரியாம இருக்கு “

“நீங்க சொல்றதும் சரிதான் அத்தை.. நம்ம கண்ணே பட்டுடும் போலே ரொம்ப அழகா இருந்தா... ராத்திரிக்கு சுத்தி போடணும்.. உங்க கையாலே போடுங்க அத்தை..”

அவள் அம்மா சொல்லவும், மலர் “அம்மா.. இன்னிக்கு செழியன் சார் ஓட அம்மாவும் இதேதான் சொன்னாங்க.. உங்கள எனக்கு சுத்தி போட சொல்லி.” என்று கூறினாள்.

“அவங்களும் வந்து இருந்தாங்களா?”

“ஆமாம்மா.. அவங்க செந்தில் சார்க்கு உறவாம்... செழியன் சார்.. அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்து இருந்தாங்க.. “

“அப்படியா.. வேற என்ன சொன்னாங்க.. ?”

“சார்.. வீட்டிலே என்னை பற்றி சொல்லிருப்பாங்க போலே.. அறிமுகபடுத்தி வச்ச உடனே.. நல்லா பேசினாங்க.. நம்மள பத்தி விசாரிச்சாங்க.. “

“சரிம்மா.. “ என

பாட்டி ஏதோ யோசனை செய்தபடி “எங்கன்னு.. இன்னிக்கு கல்யாணம் நடந்துச்சே அவுக நம்மாட்களா ?”

“அது எல்லாம் எனக்கு தெரியாது ஆச்சி. நான் யார்கிட்டேயும் அதா பத்தி கேட்கவும் மாட்டேன்..” கோபத்தோடு கூறினாள் மலர்..

“இல்லை கண்ணு. .கல்யாணம் நடந்த முறை எல்லாம் பார்த்தா உனக்கு தெரிஞ்சி இருக்குமே .. அதான் கேட்டேன்..”

சற்று அமைதியாக “நம்ம வழக்க்மான்னு தெரியல.. ஆனால் சில சடங்குகள் நம்ம ஊர் கல்யாணத்துலே பார்த்து இருக்கேன்.. மற்றபடி எதுவும் தெரியாது.. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.