(Reading time: 32 - 64 minutes)

10. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

னைக்கப்பட்ட மின் விளக்குகளும், மினுக்கென மின்னும் மென் விளக்குகளும் ஒளிர, குழுமியிருந்தது உயர்மட்டக் கூட்டம், அவர்கள் எதிரே அகல விரிந்திருந்த திரையில் விஸ்வத்தின் தொழிற்சாலையின் அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. ரிஷியின் எதிரே நின்ற விக்னேஷ், கீர்த்தனாவின் மேலாளர் என்ற உரிமையில் அந்த திட்டங்களை சபையில் விளக்கிக்கொண்டிருந்தான்.

“சோ, ஜெனிரிக் டிசைன் தான் பிரின்சிபிள், இதை தான் நாம் அடுத்து முன் வைக்கிறோம், பல தரபட்ட கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனைத்திற்கும் பொருந்தும் வகையில் இது இருக்க போகிறது. இந்த சக்ஸஸ் ஆனால் நம்ம ஷேர் லெவல் நிச்சயமா உயரும், இந்த மாடல்ஸ் வெரும் சேம்பில்ஸ்தான் ஒரிஜினில்ஸ் எதுவும் இங்க ஷோ பன்னல ஃபார் செக்யூரிட்டி ரீஸன்ஸ்.” பேசி முடித்து இருக்கையில் அமர்ந்தான் விக்னேஷ். விக்னேஷ் விளக்கிய திட்டம் ஒன்றை தான் அப்பட்டமாக விளக்கியது, அது விஸ்வத்தின் இரு பெரும் தொழிற்சாலைகளின் முன்னேற்றம் அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர்கள் வகுக்கும் திட்டங்களில் தான் இருக்கிறது. கீர்த்தனாவின் இந்த புதிய முயற்சிக்கு அந்த சபை ஒப்புதல் அளித்தால்  நிச்சயம் ரிஷியின் தொழில் சாம்ராஜ்ஜியம் தவிடுபொடிதான் ஏனெனில் ரிஷிக்கு தேவையான பொருளாதார உதவி விஸ்வத்திடமிருந்து வராமல் போகும், விக்னேஷ் அந்த திட்டங்களை தெளிவு படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்ததும் ரிஷி பேசத்தொடங்கினான்.

“டீம், ஐ அப்ரிஷேட் ஆல் யூவர் எஃபார்ட்ஸ், ஆனா இது எந்த அளவுக்கு சாத்தியபடும்ங்கிறத முதல்ல ஸ்டடி பன்னனும். என்னோட வேர்ட்ஸ் என்னனா, ஏற்கனவே இருக்கிற ப்ரஷர்ல இப்படி புது முயற்சிய ஸ்டார்ட் பன்றது அவ்வளவு சரியான ஐடியாவா தோனல..என்னோட ஒப்பினியன் இதுக்கு அகைன்ஸ்ட் தான்”.

குழுமம் தனக்குள் பல விவதாங்களை முன்வைத்தது. இறுதியாக அடுத்த சந்திப்பில் வாக்குகள் மற்றும் இதர விளக்கங்களை பெற்று முடிவுகள் எடுக்கபடுமென முடிவு. மீட்டிங்க் முடிந்து வெளியேறிய ரிஷியின் காலரைப்பிடித்து நிறுத்தினான் விக்னேஷ்.

“டேய், என்னடா இப்படி பன்னிட்ட, இது கீர்த்தனா மேம்மோட ட்ரீம்..” – விக்னேஷ்

“விக்கி, வெறும் ட்ரீம் மட்டும் லட்சகணக்கான தொழிலாளர்களுக்கு சோறு போட்டுறாது. இப்ப நம்ம இண்டஸ்ரி இருக்கிற நிலைமைல இது தேவையாங்கிறதுதான் என்ன கேள்வி?”

“உன்னோடது ஞாயமான கேள்வியாவே இருக்கட்டும் பட் இதுல உன்னோட இண்டஸ்ரியா காப்பாத்திகிற உள்நோக்கமும் இருக்கலாம் இல்லயா?”

“நிச்சயமா, ஏழு வருஷமா ஸ்டெப் பை ஸ்டெப்பா இத நான் உருவாக்கிருக்கேன், கீர்த்தனாவோட ட்ரயல் ஐன்ட் எரர் அப்ரோச்சுக்கு இப்ப என்னோட இண்டஸ்ரி ஸப்போர்ட் பன்னாது, அஃப்கோர்ஸ், என்னோட சம்மரிய இனிமே தான நீ பார்க்கபோற..!”

“அத என்னைக்கு ப்ரஸன்ட் பன்னபோற ரிஷி.. ?”

“அடுத்த மீட்டிங்ல, நான் பன்னலா, இலா வில் டூ தெட்..!”

“ஹீ இஸ் எ லக்கி ஃபெல்லோ, இவ்ளோ சீக்கிரமா நல்ல ஆப்பர்ச்சூனிட்டிய கேதர் பன்னிட்டான்!”

“என்னடா உனக்கு புகையுதா?” – விக்னேஷின் தோளில் கைப்போட்டவாரே புன்னகையுடன் கேட்டான் ரிஷி.

“ம்ம்.. கொஞ்சம் அப்படிதான் பட் இன்னிக்கு கீர்த்தனா மேம் இருந்திருந்தா இது இப்படி ஃபெயிலியர் ஆயிருக்காது.. வில் சீ இன் நெக்ஸ்ட் மீட்டிங்க்..”

“சரி கிளம்புவோமா?” - ரிஷி

“எங்கடா?” - விக்னேஷ்

“பார்ட்டி!” - ரிஷி

“மண்ணாங்கட்டி…! நானே கீர்த்தனா மேம்க்கு என்ன அப்டேட் கொடுக்கன்னு தெரியாம விழிச்சுட்டு இருக்கேன் நீ வேற…!”

“டேய் இப்ப நீ ஒழுங்கா எனக்கு கம்பெனி கொடுத்தேனா, நானும் ஒழுங்கா உன்னோட ஆள் வீட்டுக்கு வந்து அன்னிக்கு ஃபங்க்ஷன் பாதில நின்னதுக்கு என் ஆள் தான் காரணம்னு விளக்கம் சொல்லி அப்படியே நீ உன் ஆள பிரச்சனையே இல்லாம தினமும் சைட் அடிக்க அப்பர்ச்சூனிட்டி கிரியேட் பன்னிதருவேன், எப்படி வசதி!” ரிஷியின் மகுடிக்கு விக்னேஷ் ஆடாவிடினும், செல்வியின் தரிசனத்திற்கு அவன் ஏங்கதான் செய்கிறான். உண்மையில் இதை சாக்காய் வைத்து செல்வியை இன்னுமொரு முறை பார்க்கும் ஆவல் மேலிட,

“அக்ரீட்… இப்ப பார்ட்டி, பட் நான் சொல்லும்போது நீ எங்கூட செல்வி வீட்டுக்கு வர்ற.. என்ன சொல்ற? - விக்னேஷ்

“ஓ.கே டா இப்ப விறியா இல்லயா?”

இன்னோரு கண்டிஷன்!”

“என்னன்னு சொல்லிதொல!”

“நோ ஆல்கஹால், ஒன்லி கூல் ட்ரிங்க்ஸ் அண்ட் ஃபுட்!”

“டேய்.. இதுக்கு நான் தனியாவே போயிருக்கலாம், சரி உன்னோட ஃப்ரண்டானதுக்கு வேர என்ன குடிக்க முடியும்..!” புன்னகையுடன் இருவரும் பார்ட்டி ஹாலுக்குள் நுழைய அங்கே ஏற்கனவே தொடங்கியிருந்தது பார்ட்டி!.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.