(Reading time: 32 - 64 minutes)

“என்னம்மா நீ, கீழே இவ்வளவு தீபம் இருக்கே, முந்தானையை இழுத்து சொருகிக்க வேண்டாமா?”

“இப்படியா அலட்சியமா இருப்ப!”

ஓவ்வொருவரும் ஒன்றொண்டு சொல்ல, காவ்யா அவளது துப்பட்டாவில் கீர்த்தனாவை போர்த்தினாள், தர்ஷினியின் மனம் சொல்ல முடியாத வேதனையில் துடித்தது. அதற்குள் அங்கிருந்த பெண்,

“சும்மா, இருங்கம்மா, ஆளாளுக்கு, அந்த பெண்ணே பயந்து போயிருக்கு, ஏதோ, தெரியாம நடந்திட்டு, அதான் அந்த அம்மன் அருளால எந்த அசம்பாவிதமும் நடக்கலையே, “உன் வீடு எங்கம்மா இருக்கு?”

“பக்கத்தில தான் ஆண்டி, ஆட்டோல போற தூரம் தான்!” இப்போது கூட தர்ஷினிதான் பேசினாள்.

“இப்படி எப்படி கூட்டிட்டு போக முடியும் தர்ஷூ!” – காவ்யா

“இங்க பாரும்ம, என் வீடு பக்கத்தில தான், முதல அங்க போய் வேர புடவைகட்டிட்டு வீட்டுக்கு போங்க!,

“இல்ல ஆண்ட்டி நாங்க வீட்டுக்குபோறோம்!” – தர்ஷினி

“இப்படியே வீட்டுக்கு போய் நின்னா உங்க வீட்டில உள்ளவங்க பதற மாட்டாங்களா, இங்க இருந்து இரண்டு எட்டுதான் என் வீடு வாங்கம்மா, அங்க வந்து புடவைய மாத்திட்டு அவள வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க” அவரின் வார்த்தைகளை தட்ட முடியாது பெண்கள் மூவரும் அவரை தொடர்ந்தனர், அவர் சொன்ன மாதிரியே கோவிலின் அருகே அமைந்திருந்த அழகான வீடு, முன் முற்றம், சுற்றி சிறிய தோட்டமும் வீட்டில் நுழையும் போது அது இதயத்திற்கு இன்னும் இனிமையையும் அளிக்கும் ஒர் சுகந்தமும், ஆம், கீர்த்தனாவை தன் வீட்டிற்குள் அழைத்து போனார், வனிதா. காவ்யா வீட்டின் ஒரு பகுதியில் அமைந்த தையற்கூடத்தை பார்த்ததும் அங்கேயே நின்றுவிட்டாள். தர்ஷினியையும் கீர்த்தனாவையும் உள்ளே அழைத்துபோனார் வனிதா, உள்ளறையிலிருந்து ஒரு மென் கதர் புடவை எடுத்து கீர்த்தனாவின் கைகளில் கொடுத்தார்,

“இந்தாம்மா இத கட்டிக்கோ, புது புடவைதான்!” புன்னகையுடன் அவர் கைகளிலிருந்து வாங்கிக்கொண்டாள்.

“மஞ்சளும், ஆரஞ்சும் பினைந்து, பல வண்ணக் கொடுகள் பினைந்து இருந்த அந்த காட்டன் புடவை அதிக பணம்மதிப்பில்லாததாயினும் அது கீர்த்தனாவின் மானத்தைக்காக்கும் ஆயுதம், அது இப்போது இவளின் உயிருக்கு இணையானது. வாங்கிக்கொண்டாள்.

“இது உனக்காகவே இருந்ததுனு நினைக்கேன், என்னோட பையன் வாங்கிட்டு வந்தப்ப சின்னபிள்ளைங்க கட்டுறமாதிரி புடவையா இருக்கேனு அப்படியே வச்சிருந்தேன், இது உனக்காகவே எங்கிட்ட இருந்திருக்கும் போல், போம்மா, அந்த ரூம்ல போய் மாத்திக்க!” வனிதாவின் கைகளில் இருந்து வாங்கிக்கொண்ட புடவையுடன் சிட்டாக உள்ளறையை நோக்கிப்போனாள் பெண்.

முற்றத்தை சுற்றி அமைந்திருந்த, தோட்டம் மனதை இழுக்க, எழுந்து நடந்தாள் தர்ஷினி, ஒரு பலா மரம், கொய்யா, சப்போட்டா, சுற்றி காய்கறி கொடியும் பூவுமாய், மனதை கொள்ளைகொண்டது, வீட்டின் முன்னேயும் பின்னேயும் ஏகப்பட்ட மலர் செடி, பூக்கள் பறிக்கப்படாது மணந்து தேன் வாசம் வந்தது, இன்னும் பாத்தி பாத்தியாய் காயும் கீரையும் தாவரமுமாய் இன்னும் அழகாய் வசம் இழந்து கேட்பதற்கு ஆயிரம் கேள்விகளுடன் மலர்ந்து அதனையே பார்த்திருந்தாள் தர்ஷினி.

“ஆண்டி, இதல்லாத்தையும் நீங்க தான் பயிரிட்டீங்களா?” எதிரே காப்பி கோப்பைகளுடன் வந்து நின்ற வனிதாவை ஆர்வம் மின்னும் கணகளுடன் கேட்டாள்.

“ம் ஆமாம்” என்பதுபோல் தலை அசைக்க, முன் கூடத்திலிருந்து மானின் வேகத்தில் துள்ளி வந்தாள் காவ்யா, “வாவ் ஆன்ட்டி, நீங்க ஒரு ஃபென்ட்டாஸ்ட்டிக் ட்ரஸ் டிசைனர், வாவ், அந்த பிங்க் பிரைடல் கவுன், சான்சே இல்ல, நீங்க தான் டிசைன் பன்னினீங்களா?”

அவளது கைகளிலும் ஒரு காப்பி டம்ப்ளரை தினித்து புன்னகைத்தவள், காவ்யாவின் முகம் மனதை கவர, மென்மையாக அவள் கன்னத்தை கிள்ளினார். மூவரும் பேசிக்கொண்டே தோட்டத்தினுள் நடக்க, காவ்யாவின் கேள்விகளுக்கு வனிதா பதிலளித்துக்கொண்டே தோட்டத்தினுள் நடக்க, மென் இருள் சூழ்ந்து, நிலவு தோன்றியிருந்தது.

புடவை உடுத்தி தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள் கீர்த்தனா, ஆடையை மீறி அதில் பூரித்திருக்கும் அவள் இளமையின் அழகையும் மீறி கண்கள் மஞ்சள் சரடை வருடியது, இதற்கு என்ன அர்த்தமாம்? நேரம் குறிக்காது நாள் நட்சத்திரம் குறிக்காது, கழுத்தில் ஏறியது, இன்னும் அதனை கழட்ட வழியற்றவளாய் இவள். கைகளைப்பார்த்தாள் அங்கங்கே இரத்த சிவப்பில் தடம், எரியத்தான் செய்கிறது, ஆயினும் அந்த வேதனையைவிட மனதின் வலி இன்னும் அதிகமாய்..ஒரு வேளை இதுதான் காதிலின் வலியா, இதை இப்படிதான் உணர வேண்டுமா, நினைக்கும் போது இனித்தது, தொடர்ந்து ஒரு கீறலின் வலியும் வந்துபோனது. சில நொடி சிந்தனைகளுக்கு பிறகு மனதை சமாதானப்படுத்தியவள் வெளியே செல்ல அறையின் கதவை திறக்க, திடும் பிரவேசமாய் அவளுடைய தலைவன் இளமாறன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.