(Reading time: 32 - 64 minutes)

விருட்டென்று உள்ளே வர எத்தனித்தவன் அவன் கைவைத்து கதவை திறக்க நினைக்க, அவன் நீட்டிய கைகளில் தட்டுபடாது கதவு திறந்துகொள்ள அவன் கைகள் உரசிநின்றது அவளை, திடுக்கென பயந்தவள் அவன் கை அவளது கழுத்தில் விழுந்து எதேச்சியாய் கீழிறங்க ஒர் அடி பின் வைத்தாள், இதயம் தாருமாறாய் துடிக்க, இவன் எங்கே இங்கே ? என்றில்லாமல் அதிர்ச்சியும் காதலுமாய், தீக்காயங்கள் இப்போது தித்தித்தது, இவனை சந்திக்க முடியுமானால், உடலை நெருப்பு தின்றாலும் அவள் வருந்தமாட்டாள்,  என்பதை இப்போது மனது உறுதிப்படுத்தியது, ஆக இதுவரை உணர்வும் சித்தமும் ஏங்கித் தவித்தது இவன் முக தரிசனத்திற்குத்தானா? மொத்தத்தில் காதல் இதுதானா?  இத்தனையும் அவனைப்பார்த்த நொடியில் வந்து போனது மனதுள். இளமாறன், வரும்போது சிந்திய தூரலில் லேசாக நனைந்திருந்தான், ஈரக் கேசம் அவன் நெற்றியை நனைத்து படிந்திருந்தது, அவனது தீட்சண்யமான கண்கள் இப்போது அவளை அளந்தது, உச்சி முதல் பாதம் வரை, அவன் அன்னைக்காக, அவரின் இரசனை உணர்ந்து அவன் தேடி தேடி அலைந்து வாங்கிய புடவை, அவள் உடலை பினைத்து, வடிவத்தை செதுக்கிய சிற்பமாக காட்டியது, அழகி அவள், இன்னும் இடையில் லேசாக தளர்ந்திருந்த புடவை கண்களில் விழுந்து மனதை குடைந்தது, அவன் கண்கள் மேயும் திசை பெண்மை உணர்ந்து கொள்ள இடக்கை அனிச்சயாய் புடவை முந்தானையை இழுத்து சொருக, அவன் கண்கள் மீண்டும் நிலைத்தது பெண்ணவளின் முகத்தில்.

“அவளை பற்றியே யோசித்து யோசித்து பார்க்கும் திசையெல்லாம் அவளாய் தெரிகிறாளா? ஆம், எனக்கு சித்தம் கலங்கிபோனது பின்னே அவள் எங்கே இங்கே வர போகிறாள்?” ஒரு நொடி தோன்றிய அந்த சிந்தனையை கலைத்தது அவள் மீது பறந்து வந்து அமர்ந்த தட்டாம் பூச்சி, அவ்வளவு தான் அவள் கழுத்தில் விழுந்து பறக்க நினைத்த பூச்சியைக்கண்டு அவள் மென் சத்தத்துடன் அலற, முன்னே நினறவனின் சட்டையைப்பற்றிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள், “ச்சீ ச்சீ.. அவளின் அருவருப்பையும் பயத்தையும் உணர்ந்ததும் தெளிந்தது அவன் சித்தம், இடக்கையைக்கொண்டு அதை தட்டிவிட, அவளின் பெரும்மூச்சு அவன் மார்பின் அருகே, அவளை இழுத்து விலக்கி நிறுத்தினான், கழுத்தில் இன்னும் அவன் கட்டிய மஞ்சள் சரடு புடவையைத்தழுவி பெண்ணின் மார்புக்குள் புதைந்து, இவனை திக்குமுக்காட செய்தது. வலிய வரவழைத்துக்கொண்ட கோபம் அவன் கண்களில் மின்ன, “ப்ளீஸ், அன்னிக்கு ஏதோ தெரியாமா… கண்மூடித்தனமாய் எல்லாம் நடந்திருச்சுச்சு, அத பெரிசு பன்னாதன்னு சொன்னேன்ல.. இங்க எதுக்கு இப்ப வந்த?” முரட்டு தனமாய் அவன், அவளின் இடக்கையின் தோளில் அழுத்தி கேட்க, அவன் தொட்ட இடம் நெருப்பு சுட்டதைவிட்ட இன்னும் அதிகமாய் எரிந்தது, கோபத்தில் அவளை லேசாக தள்ள பின்னால் தடுமாறி விழப்போனவள் தன்னை சமாளித்துகொண்டு நின்றாள், அதற்குள் வீட்டின் பின் புறமிருந்து சத்தம் வர, அவன் விலகி நின்றான்,

கலகலவென பேச்சுக்குரலுடன் உள்ளே நுழைந்த காவ்யா தான் முதலில் இளமாறனைப்பார்த்தாள். நெஞ்சம் திக்கென திகைக்க, “செத்தோம்.. இவன் வீடா இது, அப்போ இவன் வனிதா ஆண்டியோட பையனா, கிளிஞ்சுது, கடவுளே, இவன் வனிதா ஆண்ட்டிட்ட என்னவெல்லாம் போட்டு கொடுத்திருப்பானோ? தப்பு நம்மமேல தான், இன்னிக்கு இவன் கால்ல விழுந்து அப்ஸ்காண்டு ஆயிட வேண்டியதுதான்” காவ்யாவின் சிந்தனை ஓட்டம் அது. தர்ஷினி அதிர்ச்சியில் உரைந்துபோனாள், தேடிப்பிடித்து கீர்த்தனாவை இவன் வீட்டுக்கே அழைந்து வந்தேனா? இதென்ன, இது தான் நேரக்கொடுமை! எப்படி சமாளிப்பதென உள்ளம் இடைபோட.. மூன்று பெண்களும் மூன்று விதம் தனில் வார்த்தை இல்லாது வாயடைத்து நிற்க, ஆக இள மாறனைப்பார்த்து முகம் மலர்ந்தது அவன் அன்பிற்கு முழு பத்திரம் பெற்ற அவன் அன்னை வனிதா தான்.

ஒரு நொடி பெண்கள் இருவரும் மீதும் பாய்ந்து நின்ற அவன் கண்கள், ஏதும் யோசிக்க முடியாது, அவன் தாயின் முகத்தில் நிலைத்தது, “என்னம்மா இது, இங்க என்ன நடக்குது?” ஆத்திரமாய் வந்தது அவனுக்கு,

“டேய், டேய், ஒன்னுமில்ல டா, மழைல நனைஞ்சியா, உனக்குதான் சைனஸ் இருக்குல்ல இன்னும் ஏன் தலைமுடிய துவட்டாம நிக்கிற? அவனை வாஞ்சையாய் இழுத்து முந்தானையில் தலையை துவட்டி விட்டார் வனிதா. அங்கிருந்த ஒவ்வொரு மன நிலையும் ஒவ்வொரு விதமாய்!

“இந்த பொண்ணு கீர்த்தனா,  கோவில்ல வச்சு லேசா இவ புடவைல நெருப்பு பட்டுட்டு அதான் இங்க அழைச்சுட்டு வந்தேன், நீ போய் ட்ரெஸ் மாத்து, காப்பி எடுத்துட்டு வர்றேன்!”

அவ்வளவுதான், இவ்வளவு நேரம் வலிய வர வழைத்த கோபமும் வெறுப்பும் பரந்து போனது, நெருப்பா, எப்படி பட்டது, ஏன், அவ்வளவு அலட்ச்சியமாக என்ன காரியம் செய்தாளோ? ஆடையில் நெருப்பு பற்றும் வரை என்ன செய்தாள், இன்னுக் ஆளமாய் அவள் உடல் முழுவதும் விழுந்தது அவன் பார்வை, கைகள், இடுப்பு, கன்னம் கழுத்து பாதமென ஆடை மறைக்காத இடங்களில் மேய்ந்தது கண்கள், அவள் அந்த நொடி அவன் பார்வையிலிருந்து ஓடி விட நினைத்தாள், இதனையும் நடிப்பென நினைப்பானா? இவ்வாரே பெண்ணவளின் எண்ணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.