(Reading time: 32 - 64 minutes)

“இப்ப சொன்னியே இது குட் ஐடியா, என் செல்ல தர்ஷூ, வா இங்க புளியோதர செமையா இருக்கும்ல கம் க்குயிக்!” காவ்யா தர்ஷினியின் கையைப்பிடித்து இழுத்துபோனாள்.

ரிஷி குழுமத்தின் அலுவலக சந்திப்பிற்கான வேலைகளில் மூழ்கியிருந்தான் இளமாறன். அறையில் கோப்புகளின் ஊடே தலையை புதைத்திருந்தவன், தன் அலுவலக நண்பரின் குரல் கேட்டு நிமிர்ந்தான்.

“இலா சார்,  இந்த வீக் என்னோட மேரேஜ் இருக்கு, ஞாபகம் இருக்குல்ல, வேல அது இதுனு வராம இருந்துடாதீங்க” புன்னகையுடன் கேட்டான் அவன் அலுவலக தோழன்.

“ச்ச, மறப்பனா, கண்டிப்பா, பட் இவ்னிங்க் ரிஷப்ஷனுக்கு வர்றேன்!”

“சார், நீங்க சொல்றத பார்த்தா கண்டிப்பா வரமாட்டீங்க”

“ஏங்க என் மேல அப்படி ஒரு நம்பிக்கையா?” சிரித்தான். உண்மையில் அந்த கல்யாண அழைப்பிதழை கூட பார்க்கவில்லை அவன்.

“சார், எங்க மேரேஜ் தான் இங்க, ரிஷப்ஷன் பேங்களூர்ல, என்னோட உட்பிக்கு பேங்க்ளூர்! நான் இன்னையோட லீவுல போறேன், இங்க எல்லாருக்கும் பக்கா ப்ளான் இருக்கு கல்யாணத்திற்கு வந்திடுவாங்க, நீங்க தான் வேலையில மூழ்கிட்டா உலகத்தையே மறந்துடுவீங்களே!”

பதிலாக இளமாறன் சத்தமாக சிரித்தான். “சார் நாங்கூட உங்கள மாதிரிதான் ஆனா எல்லாம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகுற வரைக்கும் தான் வொயிஃப் வந்துட்டாங்கன்னா இப்படிலாம் ஆஃபீஸ கட்டிட்டு அழ முடியாது..! பேசிக்கொண்டிருந்தவனின் கைப்பேசி சிணுங்கியது,

“சார், ஹன்றட் இயர்ஸ், அவ தான்”, அழைப்பை அவசரமாக ஏற்றவன், “ஹான் கீர்த்தி சொல்லுமா..” என்றவாரே அறையைவிட்டு வெளியேற, அறைக்குள் இருந்தவனுக்கு பொறி கலங்கியது. குளிர் சாதனத்தின் அத்தனை குளிரிலும் அவனுக்கு வேற்றுக்கொட்டியது. தன் மேசையின் உள் அறைகளை துளாவினான் அவன் தேடியது கிடைக்காது போனது, உள்ளே ஒர் பயமும் தவிப்பும் முதன் முறையாக மனதை நனைக்க, தன் இன்டர்காமில் உதவியாளரை அழைத்தான்,

“சார், சொல்லுங்க”

“ஹான், நம்ம ஆஃபீஸ் ஸ்டாஃபோட மேரேஜ் இந்த வாரம் இருக்குல்ல!”

“ஆமா, சார்!”

“அந்த மேரேஜ் இன்விடேஷன் கொஞ்சம் கொண்டுவர்றீங்களா, வென்யு பார்க்கனும்!”

அடுத்த ஐந்து நிமிடத்தில், அவர் எடுத்து வந்து அவன் மேசையில் வைத்துப்போனார், அவர் அறையைவிட்டு வெளியேறும் வரை பல்லைக்கடித்து நொடிகளை கரைத்தவன், பாய்ந்து பிரித்தான், அவன் உள்ளம் எதை தேடியதோ அதே அதில், மணமகளின் பெயர் “கீர்த்தனா”.  இதயம் ஒரு நொடி, நின்று பின் துடித்தது, அதை கீழே வைத்துவிட்டு, இருகைகளையும் முகத்தில் மூடி தேய்த்தான். உள்ளே ஏதோ கொதித்தது, “உங்களுக்கு கல்யாணம் ஆயிட்டா” அவளின் குரல் இன்னும் ஒருமுறை அவன் காதுகளில் ஒலித்தது, ஒருவேளை அவளுக்கு தான் கல்யாணமா? சற்று நேரம் முன்பு வரை அவன் எதிரே தன் வருங்கால மனைவியுடன் கடலைவருத்தவன் ஒரு கனம் அவன் கண்களில் வந்துபோனான், இவனுக்கு இப்போது இருக்கும் ஆத்திரம் அப்போதிருந்திருந்தால், அவனது கைப்பேசியை பிடுங்கி அதிலிருக்கும் புகைப்படத்தை பார்த்திருப்பான். இப்படி ஒரு எண்ணம் மனதில் நுழைந்ததும், தன் தலையை சிலுப்பிக்கொண்டான்,

“ச்ச, என்னயிது, மனசு ஏன் இப்படி அலைபாயுது! அவளுக்கு யாரு கூட கல்யாணம் ஆனா எனக்கென்ன வந்தது!” தன்னை தானே நிந்தித்துக்கொண்டவன்,  அறையை விட்டு கிளம்பினான். மனம் எப்போதெல்லாம் தத்தளிக்கிறதோ அப்போதெல்லாம், அவன் சாய்ந்துகொள்ளும் மடி அவன் தாயின் மடி. இப்போதும் மனம் அவன் தாயை நினைத்தது. “அம்மா, உங்க மடியில கொஞ்ச நேரம், தலைய வச்சா போதும் வேர எந்த சிந்தனையும் என்னை நெருங்காது!” தவித்தவன், தன் வண்டியில் வீடு நோக்கிவிரைந்தான், உள்ளம் மட்டும் பின்னோக்கி பாய்ந்து இரண்டு நாட்கள் முன்பு அவன் கரங்களில் திழைத்தவளின் முகத்தை வரைந்தது. ஏனோ அவளை மீண்டும் ஒருமுறை காணும் எண்ணம் இதயத்தை தைத்தது. தலை கிறுகிறுக்க, வண்டியை அதன் இயல்பு வேகத்தையும் மீறி இயக்கிகொண்டிருந்தான் அவன்.

ர்ஷினியின் கைகளைப்பற்றி இழுத்துபோனாள் காவ்யா, போகும்போது தர்ஷினி தன் கண்களில் சொன்னதை மனதில் வாங்கிக்கொண்டாள் கீர்த்தனா. துர்கையின் எதிரே இருந்த வேப்பமரத்தை நொக்கி மென்நடை வைத்தாள். கை மட்டும் கழுத்தில் பதிந்து மிண்டது. மெதுமாக மேடை ஏறியவள், எதிரே இருந்த தேவியின் திருவுருவத்தை வணங்கிக்கொண்டாள், மரத்தின் இன்னொரு பக்கத்தில் இருந்த உண்டியலை நோக்கி நடந்தாள். ஒரு முறை கண்களை மூடி வேண்டியவள், கழுத்திலிருந்த திரு மாங்கல்யத்தை கழட்ட கையை வைக்க, அவளருகில் ஓர் அலறல் சத்தம், திரும்பி பார்க்கும்போது அவளை நோக்கி இரண்டு பெண்கள் ஓடி வந்தனர், புருவத்தை சுருக்கி பார்த்தவளின் பொறி நொடி பொழுதில் நிலையை உணர்ந்துகொண்டது, அவளது பின்புறமிருந்த முந்தானையில் பரவ தொடங்கியது நெருப்பு, சற்று முன் அவளுக்கு பிரசாதம் அளித்த பெண் ஓடி வந்து கைகளில் அனைக்க நினைத்தார், அதற்கு முன் நெருப்பு இன்னும் மேலேறிவிட்டது, கீர்த்தனாவிற்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை, அதற்குள் அங்கிருந்த பெண்கள் குடம் நீரை மேலே கொட்ட, மெலிதான தீக்காயங்கள் அவளை காயப்படுத்தி இருந்தது. பாதி முந்தானை எரிந்து போனது, ஒரு கையால் மீதி முந்தானையைப்பிடித்து பயந்து குருகி நின்றாள் அவள். அங்கே ஏற்பட்ட கூச்சலையும் சத்தத்தையும்  கேட்டு, தர்ஷினியும் காவ்யாவும் ஓடி வர, இறுதியில் அங்கே ஓர் புயல் அடித்து ஓய்ந்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.