(Reading time: 32 - 64 minutes)

அவனைக்கடந்து வனிதாவின் அருகே போய் அவள் நிற்க, “நீ உட்காரும்மா, இவன் இப்படிதான் சின்ன விசயமா இருந்தாலும் டென்ஷன் ஆவான், ஆள் வாடையே பிடிக்காது, நாலு பேர் வீட்டுக்கு வந்தா, இவன் வீட்டுக்கே வரமாட்டான்.. நீ இங்க உட்கார், நான் வர்றேன்!” என்று அவர் திரும்ப,

“அம்மா!” இது இளமாறனின் அழைப்பு பார்வை இன்னும் பெண்ணவளின் காயம் மேல் தான், “நெருப்பு பட்டுட்டுன்னு சொன்னீயே, மருந்து ஏதாதுச்சும் போட்டீங்களா? தீக்காயம்னா உடனே டாக்ட்டர் பார்க்கிறது நல்லதில்லையா?”

வனிதாதான் திகைத்துப்போனார், இளமாறனா இது, வீட்டில் இத்தனைப்பெண்களைப் பார்த்தால், அறைக்குள் போய் முடங்கிக்கொள்வான், இத்தனை வருடங்களில் செல்வியின் தோழிகள் ஒருவளிடம் கூட பேசியதில்லை அவன், ஆக இது நல்ல மாற்றம் தான், வந்தவர்களை வைது, கூட்டம் சேர்த்ததிற்கு அவருக்கு நாலு அர்ச்சனையை வழங்கி, இறுதியில் அனைவரையும் கலவர படுத்திவிடுவான் என நினைத்தவருக்கு, நிம்மதி!

“ஆமாம்ப்பா, நீ வாம்மா மருந்து போட்டுவிடுறேன, அவள் கையைப் பற்றி அவர் உள்ளே அழைக்க, கை பற்றிய இடத்தில் உள்ள காயம் எரிய,

“ஆ.. “என் அவள் சப்தமிட, அடுத்த நொடி அவள் அருகே வந்தவன், அவள் கைகளை இழுத்து காயத்தை பரிசோதிக்க நினைத்தான், இயற்கையான உணர்வு அவனைத்தடுக்க அருகே வந்தவன், “அம்மா, நல்ல காயம் பட்டுருக்கும்னு நினைக்கேன், செல்வியோட ரூம்ல ஃபர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருக்கும், எடுத்துட்டு வந்து மருந்துபோடுங்க, ரொம்ப நேரம் ஆன, தீக்காயம் பொக்களம் ஆயிடும்!” எதேச்சியாய் சொல்வதுபோல் நடித்தாலும் பார்வை அவளை வருடியது, அவளுடைய வலிக்கு மருந்திடும் எண்ணத்தை வலுக்கட்டாயமாக  தன்னை கட்டுப்படுத்தியவன், அங்கேயே நின்றான்.

அவனுடைய முகத்தை நேரே காணும் தைரியம் இப்போதும் பெண்ணுக்கு இல்லை..அவள் குனிந்த தலையை நிமிரவே இல்லை. அவளை வனிதா உள்ளே அழைத்துபோக,

“அண்ணா” என காவ்யாவும், தர்ஷினியும் ஒரு சேர அழைத்தனர்,

“அன்னிக்கு, ரொம்ப சாரிண்ணா, உங்கள எவ்வளவு ஹெர்ட் பன்னிட்டேன், இங்க வந்து ஆண்டிய பார்த்தப்புரம் புரியுது நான் ரொம்ப அவசர பட்டுட்டேன்னு.. சாரி!” – வருத்தபடுவதும், மன்னிப்புக்கேட்பதும் காவ்யாவின் அகரதியில் இல்லைதான், இத்தனை பண்பான மனிதர்களை காயப்படுத்தியது அவளை வருந்த செய்தது, இவனிடம் மன்னிப்பு கோர இதை விட வேறு சந்தர்ப்பம் ஏது இவளுக்கு! மனப்பூர்வமாக கேட்டாள், முகம் தான் இன்னும் குறும்பாய்!

ஏனோ, செல்வியின் குரலாய் தோன்றியது அவனுக்கு, புன்னகைத்தான், காவ்யாவின் தலையில் கைவைத்து லேசாக ஆட்டியவன், “ச்ச அப்பவே நான் அத மறந்திட்டேன், நீ ரொம்ப சைல்டிஷ் என் தங்கை மாதிரி, அப்புறம் ரிஷி சார், எனக்கு ரொம்ப ரெஸ்பெக்ட்ஃபுல் பெர்சன்..அவங்க வுட்பிக்கிட்ட நான் கோபப்பட முடியுமா?” கண்கள் சிமிட்டி புன்னகைத்தான். தர்ஷினிக்கு பாதி விளங்கியது, ஆக காவ்யா இளமாறனிடமும் ஏதோ குறும்பு செய்து வைத்திருக்கிறாள். “இவளை என்ன செய்வது?” இப்படியும் சிந்தனைப்போனது.

“அந்த இன்சிடென்ட்க்கு அப்புறம், நான் உங்கள மீட் பன்ன ட்ரை பன்னேன் அண்ணா, இன்ஃபேக்ட் அந்த கம்ப்ளைன்ட் கூட ஃபைல் ஆகும் முன்னாடி..” அவள் தயங்கி நிற்க,

“ரிஷி சார், அத ஃபைல் பன்ன விடல, எனக்கு தெரியும்!” பரவாயில்ல காவ்யா, லீவ் இட் நீங்க இங்க..?”

இப்போது தர்ஷினி அவசரமாய் காவ்யாவிடம், “காவீ, நீ போய் கீர்த்திகூட இரு, நான் அண்ணாகிட்ட  விசயத்த சொல்றேன்” காவ்யா தலையசைத்துவிட்டு நகர,அவசரமாய் இவன் முகம் பார்த்தாள் தர்ஷினி, “எங்கே தொடங்குவது?” இவளின் தவிப்பை உணர்ந்தவனாய்

“என்னாச்சுங்க, நெருப்பு எப்படி பட்டுச்சு, கவனமா இருக்க வேணாமா?”

“அண்ணா, இல்ல கோவில் உண்டியல்ல, அந்த சரட கழட்டி போட்டுடலாம்னு தான் போனோம்!” அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் அளவு மென்மையாய் சொன்னாள், பாதியில் நிருத்தி அவன் முகம் பார்த்தாள், கல்லென ஓர் இருக்கம், கையால், தாடையை தடவிக்கொண்டான், “அதுகுள்ள, எலுமிச்சை தீபத்திலிருந்து நெருப்பு அவ புடவைல..” அதற்கு மேல் எதை விளக்க.. இப்போது தவிப்பாய் அவன், கீர்த்தனா சென்ற உள் அறையின் மீது பார்வை விழுந்து திரும்பியது..

“நீங்க…”

“நான் தர்ஷினி, அவ ஃபரண்டு, அன்னிக்கு இராத்திரி நீங்க கூட கீர்த்திய விட்டுட்டுப் போனீங்களே..”

புரிந்ததாய் தலை அசைத்தான், “கீர்த்திய பார்த்துக்கோங்க, தர்ஷினி, அவ ரொம்ப குளம்பிப்போய் இருக்கான்னு தோணுது, இத இப்படியே விட்டுட்டா நல்லது, இன்னும் காம்ப்ளிக்கேட் பன்னவேண்டாம், உங்களுக்கு புரியும்னு நினைக்கேன்!”. அவனுடைய வார்த்தைகள் புரிந்ததாய் தலை அசைத்தாள். இவர்களின் உரையாடலின் ஊடே, பெண்கள் வெளியே வர, கிளம்பும் தருணம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.