(Reading time: 32 - 64 minutes)

அவள் பார்வையிலிருந்து மறைந்ததும் தான் நின்ற அவன் இதயம் துடித்தது, பெருமூச்சுவிட்டு திரும்பியவன், சந்தேக சாயலுடன் அவனைப் பார்த்திருந்த அவன் அம்மாவின் முகம் கண்களில் பட, தடுமாறிபோனான்,  நிலைமையைக் கலைக்க, “அம்மா, செல்விய எங்க?” இன்னும் முக பாவனையை மாற்றாமல், “அவ ஃப்ரண்டு கல்யாணம் நாளைக்கு இருக்குனு உங்கிட்ட சொல்லிட்டு தானடா போயிருக்கா, அவ நாளைக்கு தான் வருவா, நேரம் ஆயிட்டு, இலா, நீ காவ்யாவ வீட்டில விட்டுடு”

“பரவாயில்ல ஆன்ட்டி, டாடிக்கு கால் பன்னிருக்கேன், அவங்க கார் அனுப்புவாங்க!  நீங்க டிசைன் பன்னின ட்ரெஸ்ஸசெல்லாம் சூப்பரா இருக்கு ஆன்ட்டி, இன்னோரு நாள் நான் வர்றேன், உங்க கிட்ட கத்துக்க நிறைய விசயமிருக்கு!” கபடமில்லாத புகழுறை காவ்யாவை கண்ட பொழுதிலேயே வனிதாவிற்கு பிடித்துபோயிற்று, இருவரும் சென்று அங்கிருந்த கூடத்தில் டை செய்யப்பட்ட துணிகளையும் பாதி வேலைப்பாட்டில் இருந்த ஆடைகளையும் இரசனையாய் பார்த்தனர், காவ்யாவின் ஆர்வமும், குதுகலமும் கலந்த கேள்விகளுக்கு விடை சொல்வது வனிதாவிற்கு தித்திக்க தான் செய்தது. வாஞ்சையாய் அவள் கன்னத்தை வருடினார், இவளது கண்களில் இன்னும் குழந்தைத்தனம் மின்னியது.

அறைக்குள் சென்று தாளிட்டவனின் பொறி கலங்கிபோயிருந்தது.  அம்மாவிற்கு உண்மை தெரிய வரும்போது என்ன சொல்வது? எந்த வகையிலும் ஞாயமற்ற இந்த செயலுக்கு நிச்சயம் மன்னிப்பு கிடையாது, இவள் இவ்வளவு அழுத்தமாய் தாலியை சுமப்பாள் என இவன் நினைக்கவில்லை. இப்போது வேதனையாய் மனது. இதிலிருந்து விடுபட இரண்டு வழிகள் தான் உள்ளது, அது இவன் திருமணம் இல்லையேல் கீர்த்தியின் திருமணம். செல்வியின் கல்யாணத்திற்கு முன்பு, அவனுடைய கல்யாணம் சாத்தியமேயில்லை, தட்டு தடுமாறி பிடித்த பணியை இப்போது தான் தொடங்கியிருக்கிறான் அதனை தவிர்த்து வேறோரு பந்தத்தில் நுழைய மனமில்லை, கீர்த்தி இருக்கும் மனநிலையில் அவள் நடந்ததை அவளுடைய திருமணமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டாள் என இவனுக்கு இப்போது புரிகிறது. போதாதற்கு அம்மாவின் கைகளால் அவள் பெற்றுக்கொண்ட மாங்கல்யம் அவள் கழுத்தில் இப்போது இருக்கிறது, அவன் கட்டியதைவிட இந்த தாலிக்கு  மதிப்பு அதிகம். இதெல்லாம் மீறி, காயங்களில் சிவந்து கன்றிப்போயிருந்த அவள் இடையும், கைகாயமும், இப்போது இரவில் அவசியமின்றி மனதை இம்சித்தது, “என்னப்பெண் இவள், எதனை நினைத்துக்கொண்டு தீயில் சிக்கினாளாம்?, ஒருவேளை இவனை நினைத்தா, அலுவலகத்தில் ஏதோ ஒரு கல்யாணப்பத்திரிக்கையைப் பார்த்து இவனுக்கு சித்தம் கலங்கவில்லையா, வேலையை நிறுத்திவிட்டு அவன் தலை தெரிக்க எதுக்கு வீட்டுக்கு வந்தானாம்?” இன்னும் இன்னுமாய் கீர்த்தியைப்பற்றிய சிந்தனையில் அவன் கலைந்து கிடந்தான்.

காவ்யாவின் கைப்பேசி சிணுங்கியது, சம்பந்தம் தான், அழைப்பை ஏற்றவள், “சொல்லுங்க டேடி?”

“காவ்யா, நீ கொஞ்சம் நடந்து பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்தேன்னா, கார் அங்க வர்றதுக்கும் சரியா இருக்கும், இல்லனா புது ட்ரைவர் அவனுக்கு வழி சொன்னாலும் தெரியாது!”  - சம்பந்தம்

“பரவாயில்ல டேடி, நீங்க பஸ்ஸ்டாப் கிட்ட வரசொல்லுங்க நான் அங்க வர்றேன்” , இங்கே வனிதாவிடம் விடைப்பெற்று கிளம்பி நடந்தாள். கீர்த்தனாவைப் பொருத்தவரை தனக்கு தெரியாத இரகசியம் ஒன்றுள்ளது என்பது இப்போது தெளிவாகிறது. தர்ஷினியை உலுக்கிக்கேட்டாள் அது நிச்சயம் தெரிந்துபோகும், ஆனால் அதற்கு அவசியம் இல்லாது, கீர்த்தனாவின் முகமும் இளமாறனின் முகமும் பெருத்த சந்தேக புயலை இவளுள் கிளப்பியது. திடீரென்று உள்ளே பொறிதட்ட,  நின்றவள் சிரித்தாள், ஓ கத அப்படி போகுதா? கழுத லவ் பன்னினதும் தெரியல, கல்யாணம் பன்னினதும் தெரியல? இருடி உன் வீட்டுக்கு வந்தபின்பு உனக்கிருக்கு, தர்ஷூவும் நீயும் எங்கிட்ட சீக்ரெட்டா கீப் அப் பன்றீங்க?, இப்போது அவளது எண்ண போக்கை நினைத்து அவளே திகைத்தாள். அவளை அறிந்து உள்ளம் இப்போது ரிஷியின் வசம், “அவங்க கூட எந்தத்தப்பும் பன்னலையோ? நான் தான் அவங்களை வீனா சந்தேகப்பட்டேனா?”  இவள் சிந்தனையை கலைக்க, அவள் பின்னிருந்து ஓர் ஹரன் சத்தம். அந்த இனிமையான இரவிற்கு இன்னும் கொஞ்சம் வேலை மிச்சமிருக்கிறது, அது காவ்யாவின் மீதான ரிஷியின் காதலை அவளுக்கு உணர்த்தபோகும் உன்னத இரவு…

தொடரும்

Episode # 09

Next episode will be published on 10th Aug. This series is updated fortnightly on Thursdays at 6pm.

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.