(Reading time: 10 - 20 minutes)

இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, மலரின் அம்மா வள்ளி,

“சாயங்காலம் ஏதோ யோசனையா இருந்தியே..? என்ன விஷயம் “ என்று கேட்டார்.

இத்தனை நேரம் அவர்களோடு வாயடினாலும், மனதில் மறுநாள் செழியனை பார்க்க எப்படி போவது என்ற யோசனையே ஓடிக் கொண்டு இருந்தது.. இப்போ அவள் அம்மா கேட்கவும் அதை பிடித்துக் கொண்டவளாக,

“அம்மா.. செழியன் சார் நாளைக்கு கோலேகே வர சொல்றங்கம்மா”

“இப்போ காலேஜ் லீவ் தானே.. எதுக்கு போகணும்..”

“இல்லைமா. கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க வந்து ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டாரு..”

“ஏன் வேற யாரும் வர மாட்டாங்களா.. ?”

“செழியன் சார்.. நல்ல knowledge இருந்தாலும், மற்றவங்களுக்கு கீழேதானே அவரும் .. எனக்கு ரெண்டு செட் முந்தி அவர் lecturer அவ்ளோதானே.. அவர் வேலை வாங்குறது எல்லாம் என் செட் லே தான் முடியும்.. ஆனால் இப்போ நாளைக்கு வர சொல்ற வேலை எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.. அதுனாலே உன்னை கூபிட்றேன்” அப்படின்னு சொன்னர்மா..

“ஓஹோ.. நீ என்ன நினைக்கிற.. “

“காலேஜ் லே வேற யாரும் வர மாட்டங்க... அதுதான் யோசனையா இருக்கு ?”

இவர்கள் பேசுவதை காது கொடுத்துக் கொண்டு இருந்த வடிவு

“அது எல்லாம் போக கூடாது பேச்சி..  யாருமே இல்லாமல் நீ மட்டும் தனியா எல்லாம் இளந்தாரி பயலுக  போக கூடாது.. “

“ஐயோ பாட்டி.. யாருமே இல்லாம எல்லாம் இருக்க மாட்டங்க.. காலேஜ் லே சில போட்டிகள் நடக்க போகுது. அதுக்கு practice செய்ய நிறைய பசங்க வருவாங்க.. அதுனாலே நீ நினைக்கிற மாதிரி ஒத்த பொன்னால்லாம் போகவும் மாட்டேன்.. அந்த சார்உம அப்படி கூப்பிட மாட்டார்..”

அப்போ எதுக்கு போகனுமான்னு கேட்டுட்டு இருந்த?

“ஒன்னும் இல்லைமா.. நீங்க , ஆச்சி எல்லாம் என்ன சொல்லுவீங்களோ ன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. “ என்று சமாளித்தாள்.

மேலும் சற்று நேரம் வாக்கு வாதம் நடக்க, அவள் அப்பா வரவும், அவரிடம் பஞ்சாயத்து போக அவரோ சற்று நேரம் இங்கயும், அங்குமாக தாவிக் கொண்டு இருந்தவர்,.. கடைசியில் தன் மகளின் கெஞ்சல் மற்றும் கொஞ்சலில் மயங்கி, மலர் மறுநாள் காலேஜ் செல்ல அனுமதி வழங்கினார்.. மலரின் அம்மாவும், பாட்டியும் அதை எதிர்க்க, வேலனோ நாட்டமையாக மாறி தன் மகளின் விருப்பதிற்காக நீதிடா, நேர்மைடா, நியாயம் டா.. என அநியாயத்துக்கு வசனம் பேசி இருவரையும் அடக்கினார்..

இதனால் ஏற்பட போகும் பின்விளைவுகள்  பற்றிய பயம் இருந்தாலும் , செல்ல மகளின் சந்தோஷத்திற்காக எல்லாவற்றையும் தாங்க தயாராகினார்.

அவளின் அப்பாவின் சம்மதம் கிடைத்ததும். தன் அறைக்கு சென்றவள் ,

செழியனுக்கு “tomorrow what time i will be இன் college” என்று மெசேஜ் அடித்து அனுப்பிவிட்டு காத்து இருக்க,

அடுத்த ஐந்தாவது நிமிடம் “ஷார்ப் அட் டென் thirty .. தேங்க்ஸ் & waiting  for யு..” என்று பதில் அனுப்பினான்..

அவனின் பேர் தாங்கிய போன் மற்றும் மெசேஜ் சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவள், சற்று நேரத்தில் தூங்கி விட்டாள்.

மறுநாள் மிதமான ஒப்பனையிலும், வழக்கம் போலே காலேஜ் க்கு செல்வது போல் சென்றாள் மலர்..

ஹாய் friends.. சாரி.. இந்த அப்டேட் லே செழியன் propose முடிக்கணும்நு நினைச்சேன்.. ஆனால் கொஞ்சம் உடம்பு சரி இல்லை.. அதோட அவுட் ஆப் ஸ்டேஷன் எல்லாம் சேர்ந்துடுச்சு.. சோ அப்டேட் சின்னது தான்.. அட்ஜஸ்ட் பண்ணிகோங்க friends..  நெக்ஸ்ட் அப்டேட்லே என்னோட பெஸ்ட் கொடுக்க முயற்சிக்கிறேன்..  தேங்க்ஸ் friends..

தொடரும்!

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.