(Reading time: 10 - 20 minutes)

ங்கே தன்னை பற்றி நடக்கும் விவாதங்களை அறியாத மலர், ஏதோ எதிர்பார்ப்போடு காலேஜ் சென்றாள்.

அவளின் எதிர்பார்ப்பு வீணாகாமல், சற்று முன்னதாக வந்து இருந்தாலும் காம்பஸ்க்குள் செல்லாமல் வாசலில் கேட் அருகில் வண்டியில் அமர்ந்து கொண்டு இருந்த செழியன் , அது தவறாக தெரியாதவாறு  வாட்ச்மனிடம் ஏதோ கேட்டுக் கொண்டு இருந்தான்.

அவன் வாய் தான் பேசிக் கொண்டு இருந்ததே தவிர, கண்கள் என்னவோ தன்னவளின் வருகையை எதிர்பார்த்துக் காத்து இருந்தது.

மலர் கேட் அருகில் வர, வாட்ச்மன்

“வாங்கம்மா.. உங்களுக்கும் வேலை இருக்கா ? சார் இப்போதான் சொல்லிட்டு இருந்தார் ?””

“ஆமாம்.. வாட்ச்மன்.. வேலை இருக்கு ..” என,

“சரிம்மா.. எதவும் வேணும்னா பசங்க கிட்டே சொல்லி விடுங்க .. வாங்கிட்டு வரேன்..” என்னும்போதே

“ஒருமணி நேரம் கழிச்சு ஜூஸ் எதாவது வாங்கிட்டு வாங்க மூணு நாலு பேருக்கு சேர்த்து .. நாங்க எங்க department staff ரூம்லே தான் இருப்போம் “ என்று மலர்க்கும் சேர்த்து பதில் சொன்னான் செழியன்..

வாட்ச்மன் அவனிடம் தலையாட்டி சரி சொல்லவும், மலர்

“நான் உள்ளே போறேன் வாட்ச்மன்.. “ என்றபடி கிளம்பினாள். செழியனும் அவரிடம் தலையசைத்தபடி வர, இருவரும் பார்கிங் பகுதிக்கு சென்றனர்.

அங்கே வண்டியை பார்க் பண்ணி விட்டு ஹெல்மெட் கழட்டும் போது, செழியனின் பார்வை அவள் முகத்தில் நிலைத்தது.

மலரை முதல் நாள் பார்த்தது போல் அந்த மை தீட்டிய கண்களையும், அழகு முகத்தையும் தன்னை மறந்து பார்த்து நின்றான்.

மலர் வண்டி பார்க் பண்ணிவிட்டு அருகில் வரும்வரை அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன், அருகில் வந்து அவள்

“சார் “ என்று அழைக்கவும், தன்னை சுதாரித்தவனாக நிமிர்ந்தான்..

பின் அவளிடம் நடக்க சொல்லி சைகை செய்தவன்,

“தேங்க்ஸ்.. மலர்.. நான் சொன்னதுக்காக நீங்க வந்தது ரொம்ப நன்றி..”

“சார்.. நீங்க கூப்ட்டதுக்காக எல்லாம் நான் வரல.. ஏதோ வேலை இருக்குன்னு சொன்னீங்க.. அதோட பேசனுமும் சொன்னீங்க.. அதான் வந்தேன்..”

“டேய்.. செழியா.. இந்த அவமானம் உனக்கு தேவையா?: என்று தன்னை தானே கலாயித்துக் கொள்ளவும், மலர் சிரித்தாள்.

“உன் சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு.. சாரி.. என்னாலே உன்னை.. நீங்க வாங்கன்னு எல்லாம் சொல்ல முடியல.. மத்தவங்க முன்னாடி என்னை கண்ட்ரோல் பண்ணிடுவேன்..  ஆனால் தனியா இருக்கும்போது .. சாரி.. என்னாலே முடியல..”  என,

அவன் சொன்னதை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள், எதுவும் பதில் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.

பேசிக் கொண்டே staff ரூம் வர, தங்கள் இடங்களில் அமர்ந்தவர்கள், சற்று தங்களை சமாளித்துக் கொண்டார்கள்.

செழியன் அவள் எதிரில் உள்ள chair யில் அமர்ந்து , மலரையே ஊடுருவி பார்த்தவன்,

“மை விழி.. “ என்று அழைக்கவும்,

சடார் என்று நிமிர்ந்து பார்த்தாள் மலர்.. அவளின் கண்களை நேராக சந்தித்தவன்,

“மை விழி .. உன்னை முதல் முதலில் முகம் மறைத்த ஹெல்மேடிலும், உன் மையிட்ட விழிகளை பார்த்த நான் அதன் ஆழத்தில் விழுந்து விட்டேன். ஏனோ உன்னுடைய விழிகள் என்னை அந்த அளவு ஈர்த்தது.. நாளாக ஆக அந்த ஈர்ப்பு காதலாக மாறி விட்டது.. என்னடா.. இப்படி teenage பையன் மாதிரி பேசறானே என்று நினைக்காதே.. காதல் விஷயத்தில் நான் இன்னும் கிண்டர் கார்டன் லெவல் தான்.. உன்னுடைய சம்மதம் கிடைத்தால் தான் அதில் நான் பாஸ் ஆக முடியும்..

நான் உன்னை விரும்புவது உன் தோற்றம் மட்டும் அல்ல.. உன்னுடைய குணம், பழகும் விதம் , இயல்பான நடவடிக்கைகள் எல்லாம் சேர்த்துதான் உன் மேல் இருந்த ஈர்ப்பை காதலாக மாற்றியது..

உனக்கு என்னை பிடித்து இருக்கிறதா? மற்றவர்கள் முகம் சுழிக்கும் அளவு எந்த பழக்கமும் இல்லாதவன் என்று தான் என்னை பற்றி நினைக்கிறேன்.. அப்படி எதாவது குறைகள் தென்பட்டால் சொல்.. நான் மாற்றிக் கொள்கிறேன்..

ஆனால் அதே சமயம் நாம் இருவரும் காலேஜ் தாண்டி அதிகம் பழகியதில்லை. வீட்டில் நம்முடைய நடவடிக்கைகள் மாறலாம்.. அதற்காக நம்முடைய இயல்பை தொலைத்து ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.. நாம் இருவரும் இணைந்தால் நல்ல வாழ்க்கை வாழலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. உன்னுடைய விருப்பம் என்ன என்று சொல் ?”

என்று நீளமாக பேசி முடித்தான் செழியன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.