(Reading time: 10 - 20 minutes)

அவனின் பேச்சை கேட்ட மலர் , ஒருமாதிரி இதை எதிர்பார்த்து இருந்தாள் என்றாலும் கூட , உடனே என்ன பதில் சொல்ல என்று அவளுக்கு தெரியவில்லை..

சற்று நேரம் அவஸ்தையாக அங்கும் இங்கும் பார்த்தவள், பின் அவன் கண்களை பார்த்து,

“எனக்கு பிடிக்கவில்லை என்றால் , என்ன செய்வீர்கள் ?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம்.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது உனக்கும் என்னை பிடிக்கிறது என்று.. ஆனால் ஒருவேளை என்னுடைய ஊகம் தவறாக இருந்தாலும், என்ன செய்வது .. எனக்கு உன்னோடு வாழ அதிர்ஷ்டம் இல்லை என்று எண்ணிக் கொள்வேன்.. உனக்கு வேறு ஒருவரோடு கல்யாணம் ஆகும் வரை என்றாவது உன் மனம் மாறும் என்று காத்து இருப்பேன்.. அப்படி கல்யாணம் ஆகி விட்டால் . உன்னை மறக்க முடியாது.. ஆனால் நினைக்காமல் இருக்க பழகி கொண்டு, எனக்கேற்ற துனையை தேடிக் கொள்வேன்.. “

அவனின் எதார்த்தமான பதிலில் கவரபெற்ற மலர்,

“அந்த அவசியம் உங்களுக்கு இருக்காது.. எனக்கும் உங்களை பிடித்து இருக்கிறது.. இந்த வயதில் இந்த துறையில் இப்படி ஒரு பேர் சம்பாதிப்பது எளிதல்ல.. மாணவர்கள் முதல் correspondent வரை உங்களை பற்றி புகழ்கிறார்கள் என்றால் நிச்சயம் உங்களிடம் உள்ள குணம் தான் காரணம்.. என்னையும் அந்த குணம் கவர்ந்து விட்டது. “

அவளின் பதில் கேட்ட, “ஊய்.. ஊய்..” என்று பெரிதாக விசில் அடித்தான் செழியன்.. அவனை அடக்கிய மலர்..

“என்ன இது .. சின்ன பையநாட்டம்.. நாம இருக்கிறது காலேஜ் நியாபகம் இருக்கா?” என்றாள்.

“ஹேய்.. நான் lecturer என்பதற்காக நாள் பூரா அப்படி இருக்க முடியுமா? இது எனக்கான சொல்லபோனால் நமக்கான நேரம்..உன்னுடைய சம்மதம் என்பது என்னுடைய வாழ்க்கையை அடுத்தகட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் விஷயம்.. அதை சந்தோஷமாக , உற்சாகமாக எப்படி வெளிபடுத்த முடியுமோ அப்படி வெளிபடுதுகிறேன்.. சரியா ?”

“சப்பா.. கிளாஸ்லே lecture கொடுத்து, கொடுத்து இப்போ என்னிடமும் அதே மாதிரி நீளமான விளக்கம் கொடுத்துட்டு இருக்கீங்க.. உங்க கூட எப்படி வாழ்க்கை பூரா குப்பை கொட்ட போறேனோ..”

“ஹேய்.. நோ ப்ரோப்லேம்.. மை ஐ.. ரெண்டு பேரும் சேர்ந்து குப்பை கொட்டி... சேர்த்து வாரி கொட்டுவோம்.. அதற்குதானே நம்மை சேர்த்து வைக்க நினைத்தான் இறைவன்.. “

“ஸ்ஸ்.. கடி தாங்கல.. அப்புறம் அது என்ன மை விழி.. மை ஐ ... ?”

“மை தீட்டிய உன் விழிகள் அப்படின்னு வச்சுக்கலாம்.. இல்லை .. மை அதாவது  என்னுடைய் விழி .. அப்படின்னும் வச்சுக்கலாம்.. அண்ட் மை ஐ . .அதோட இங்கிலீஷ் version..”

“கடவுளே.. இப்படி ஒரு விளக்கமா.. புலல்ரிக்குது .. வேற எதுவும் பாஷை தெரியுமா.. அதிலும் எதாவது செல்ல பேர் வச்சு இருக்கீன்களா?”

“ஹ.. ஹ.. அது எல்லாம் ஒவ்வொரு நேரமும் ஒன்னு ஒண்ணா வெளிலே வரும் “

என்றவன்,

“ஹேய். விழி.. உன்னை பார்த்தப்போ ரொம்ப அமைதியான பொண்ணு, அதிகம் பேச மாட்டேன்னு நினைச்சேன்.. ஆனால் இன்னிக்கு சூப்பர்ஆ கவுன்ட்டர் கொடுக்கறியே? எப்படி?”

“நான் அமைதி எல்லாம் கிடையாது.. நெருங்கி பழகினவங்களுக்கு நான் non-ஸ்டாப் nonsense தான்.. “

“சப்பா.. உனக்குள்ளே இப்படி ஒரு காஞ்சனா ஒளிஞ்சுட்டு இருக்கிறது தெரியாமல் போச்சே.. ?”

“யு.. லவர முதல் நாளே காஞ்சனான்னு சொல்றீங்களே.. what a lover ஜி நீங்க?”

“ஹேய்.. நீ காஞ்சனா அப்படின்னு உடனே .. நம்ம பேய் படம் நினைச்சியா? ச்சே ச்சே.. காஞ்சனா அப்படின்னா தங்கம்நு அர்த்தம்.. geology ஓட கொஞ்சம் கொஞ்சம் தமிழ் அகராதியும் படிமா..”

“ஹெலோ.. நாங்களும் தமிழ் படிச்சு தான் வந்து இருக்கோம்... நாங்க கேட்டதும் அப்படியே plate மாத்தாதீங்க.. “ என்றவள், மேலும் சற்று நேரம் இதே போல் விளையட்டகவும்,, அதே சமயம் சற்று சீரியஸ் ஆகவும் பேசிக் கொண்டு இருந்தனர்.

இந்த இனிய மன நிலை அவர்களுக்கு தொடருமா ? 

ஹாய் friends.. ஒரு வழியா செழியன் மலரிடம் propose பண்ணியாச்சு.. எப்படி இருக்கு சொல்லுங்க.. இதோட ப்ரோபோசல் சீன்  continuation நெக்ஸ்ட் வீக் உம இருக்கு .. உங்கள் கமெண்ட்ஸ்க்காக waiting .. நன்றி.. 

தொடரும்!

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.