(Reading time: 7 - 13 minutes)

“நீ ஜெய்யை பார்க்க போறது எனக்குப் பிடிக்கலை சதி… அதனால நீ போக வேண்டாம்னு சொல்லியிருந்தா, அது எனக்கு கஷ்டமா இருந்தாலும், நீங்க வெளிப்படையா சொன்ன காரணத்துக்காகவே நான் சரின்னு சொல்லியிருப்பேன்ப்பா…”

அவள் தெளிவாக கூற, அவருக்கோ என்ன பேச என்று தெரியவில்லை…

அந்நேரம், இஷான் வந்து, “சதி போகலாமா?...” எனக் கேட்க,

“எங்க அண்ணா?...” எனக் கேட்டாள் அவள்…

“ஏன் அண்ணன் நான் கூப்பிட்டா வெளிய வரமாட்டீயா?...”

அவன் அவள் விழி பார்த்து கேட்டிட, அவளோ எதுவும் பேசவில்லை…

“என்ன இஷான்… அவ இப்போ பார்க் போவால்லடா தைஜூ கூட… நீ எங்க கூப்பிடுற?...” என மகனிடம் கேள்வி கேட்ட பிரசுதி,

மகளைப் பார்த்து, “என்ன சதி… தைஜூ வெயிட் பண்ணுவால்ல… நீ கிளம்பலையா?...” என கூற

அவளோ தகப்பனைப் பார்த்தாள்…

“அம்மா… அவ நாளைக்கு பார்க் போட்டும்… இன்னைக்கு என்னோட வரட்டும்…”

இஷான் மெதுவாக முழங்கைக்கு மேலே சட்டையை சரி செய்து கொண்டே இயல்பாக கூற,

“அப்போ தைஜூக்கு போன் போட்டு வரலைன்னு சொல்லிட்டு அண்ணன் கூட போயிட்டு வா சதி…”

பிரசுதி தன்மையாக கூற,

“அதெல்லாம் வேண்டாம்… இஷான் நீ மட்டும் போயிட்டு வா…” என்றார் தட்சேஷ்வர் அலட்டல் இல்லாமல்…

“அப்பா… சதி எங்கூட வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?...”

கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு இலகுவாக அவன் கேட்க,

“வேண்டாம்னா விடேன்… அதுல உனக்கென்ன பிரச்சினை?...”

அவரும் வெகு இலகுவாக கேட்க,

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லப்பா… உங்களுக்கு தான் பிரச்சினை… வீண் பிடிவாதம், வரட்டு கௌரவம்… இதெல்லாம் தான் உங்க பிரச்சினை….”

இஷான் தகப்பனை நேருக்கு நேர் பார்த்துக்கூற,

“என்னடா என்னையே எதிர்த்து பேச சொல்லிக்கொடுத்தானா அந்த ஜெய்?....”

தட்சேஷ்வர் முறைத்துக்கொண்டு இஷானிடம் கேட்க,

“நான் உங்ககிட்ட தான பேசுறேன்… நீங்க எதுக்கு இப்போ அவனை தேவை இல்லாம உள்ள இழுக்குறீங்க?...”

இஷானும் கோபமாய் தகப்பனிடத்தில் வினவ,

பிரசுதி இடை புகுந்தார் வேகமாய்…

“இஷான்… நீ சதியைக் கூட்டிட்டு போ…” என்றவர், கணவரிடம்,

“சதி இஷானுக்கு தங்கச்சிங்க… அவன் கூட அவ வெளிய போயிட்டு வர்றதுல என்ன பிடிவாதம் உங்களுக்கு?...” என சற்றே காட்டமாக கேட்க

“எனக்குப் பிடிக்கலை…” என்றார் அவர் வேகமாய்…

“உங்களுக்கு எதுதான் பிடிச்சது… இது பிடிக்குறதுக்கு… அவ என் தங்கச்சி.. அவளை நான் எங்கன்னாலும் வெளியே கூட்டிட்டு போவேன்… அதுக்கு எனக்கு நிறையவே உரிமையும் இருக்கு…” என அவன் அழுத்தம் திருத்தமாய் கூற,

“அவ என் பொண்ணுடா… எனக்கு முதல்ல பொண்ணு… அப்புறம் தான் உனக்கு தங்கச்சி… அதை மறந்துட்டு பேசாத…”

“இருக்கலாம்… ஆனா உங்களுக்கு இரண்டு பிள்ளைங்க… என்னையும் சேர்த்து… ஆனா எனக்கு அவ ஒரே தங்கச்சி… என் தங்கச்சி… என் ஒட்டுமொத்த பாசமும் அவளுக்கு மட்டும் தான்… என்ன நான் சொல்லுறது சரிதானா?...”

தகப்பனிடம் புருவம் உயர்த்தி அவன் கேட்க, அவரோ அவனை முறைத்தார் கோபமாக…

“நீங்க முறைச்சாலும் சரி… இல்லை அடிச்சாலும் சரி… அவளை நான் இப்போ வெளியே கூட்டிட்டு போகதான் போறேன்…” என்றவன் அவள் கைகளைப் பிடிக்க,

சட்டென அதனை தட்டிவிட்டார் தட்சேஷ்வர் ஆங்காரத்துடன்…

“அப்பா……………..!!!!!!!!!!!!!”

அதிர்ந்து அவரை நோக்கி அவன் குரல் உயர்த்த,

“என்னடா அப்பா?.... என்ன அப்பா?... நானும் சொல்லிட்டே இருக்குறேன்… நீ பாட்டுக்கு நீ சொன்னதை தான் செய்வேன்னு சொன்னா, அப்புறம் என் பேச்சுக்கு என்னடா மரியாதை இருக்கு இந்த வீட்டுல?...”

“உங்களை மதிக்கப் போய் தான் என் தங்கச்சியை நான் இன்னும் ஜெய்க்கு கல்யாணம் பண்ணி கொடுக்காம இருக்குறேன்…”

அவன் சட்டென கூறியதும், அவனை அடிக்க கை ஓங்கினார் தட்சேஷ்வர்…

அனைவரும் அதிர்ந்து விழிக்கையிலே, சட்டென்ற சத்தத்துடன் அவரின் கரம் சத்தம் எழுப்ப, மிரண்டு போய் நின்றிருந்தனர் இமை ஆடாது…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

எல்லாரும் எப்படி இருக்குறீங்க?...

மன்னிச்சிடுங்க… ரொம்ப நாள் கழித்து அத்தியாயம் கொடுத்தமைக்கு…

எப்படி இருக்கு இந்த வீக் அப்டேட்?...

படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…

மீண்டும் அடுத்த வார மருவக் காதல் கொண்டேனில் சந்திக்கலாம்… 

தொடரும்...!

Episode 51

Episode 53

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.