(Reading time: 21 - 41 minutes)

அப்போது அவளின் புடவையையும் அலங்காரத்தையும் கவனித்த சரயூ

“வாவ்! ரொம்ப அழகாயிருக்க மைதி! இதோ வரேன் இரு” அவளின் உற்சாக குரல் மறையும் முன்னே அங்கிருந்து ஓடியிருந்தாள்.

இதையெல்லாம் கவனித்தபடி நின்றிருந்த ஜெய்யால் மைத்ரீயின் வாடிய முகத்தை காண சகியாமல்

“அவங்க வந்துட்டாங்க.. இன்னும் கொஞ்ச நேரம்தா மைதி!”

அவள் அவனை முறைக்கவும்

“ப்ளீஸ் மைதி! இன்னும் கொஞ்சே நேரம்தா.  அப்புறம் அம்மாட்ட மட்டுமில்ல மாப்பிள்ளைட்ட வேணும்னாலும் நான் பேசுற.  என்னை நம்பு! உனக்கு பிடிக்காதது எதுவும் நடக்காது”

நன்பணின் வார்த்தைகள் நம்பிக்கை அளித்தாலும் ‘இங்க நடக்கிறதெதுவும் எனக்கு பிடிக்கலை’ என்று உரக்க கத்த வேண்டும் போலிருந்தது.  அவள் வலியை கண்களில் சேர்ந்த நீர் வெளிபடுத்தியது.

ஆதரவாக அவளை தன் தோளில் சாய்த்து கொண்டான் ஜெய்.

“மைத்ரீ! அத்தை, உன்னை கூப்பிட்டு வர சொன்னாங்க.  வா வா போகலாம்” அவசரமாக உள்ளே வந்து அவளின் கையை பிடித்து அழைத்து சென்றாள் ப்ரியா.

ப்ரியாவோடு நடந்தாலும் தனக்கு பின்னாலிருந்த ஜெய்யை பார்த்தாள்.

அந்த பார்வையின் பொருள் புரிந்தவனாக

“ஒரு நிமிஷம் ப்ரியா!” இருவரின் நடையும் தடைபெற்று நிற்க, அவர்களின் எதிரில் வந்து நின்றான்.

“எங்கிட்ட ஏதாவது சொல்லனுமா மைதி?”

அவள் கண்களில் அப்படியொரு தவிப்பு!

மைத்ரீக்கு இன்றைய ஏற்பாட்டில் விருப்பமில்லாததால் அவளின் முக வாட்டத்தை பெரிது படுத்தாமல், “இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? அங்க எல்லாரும் காத்திட்டிருக்காங்க.  இப்பதா உங்களுக்கு பேசிக்கிறதுக்கு நேரம் கிடைச்சதா?” என்று ப்ரியா கேட்பதற்குள் வடிவின் குரல் கேட்டது.

“மைத்ரீயை அழைச்சிட்டு வாமா, ப்ரியா”

“கேட்டீங்களா?” இருவரையும் பொதுவாக கேட்டவளின் முகத்தில் கேலிப் புன்னகை.

“சரி போகலாம்! ஆனா... மைதி ரொம்ப நேரம் அங்க இருக்க கூடாது.  என்ன செய்வீங்களோ ப்ரியா! அவளை உடனே திரும்ப அழைச்சிட்டு வந்திரனும்” என்றவிட்டு ப்ரியாவின் பதிலையும் எதிர்பாராது முன்னால் நடந்தான்.

மைத்ரீயை அழைத்து வந்து ஒரு ஆள் மட்டும் அமரும் சோஃபாவில் உட்கார வைத்த ப்ரியா, அதன் பக்கத்திலியே நின்று கொண்டாள்.

“என்னால நம்பவே முடியல மைதி!” தோழியை அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தாள் சரயூ.

“ஐ ம் ஸோ லக்கி! நீ என்னோட ஃப்ரெண்ட்... இனிமே என்னோட அண்ணியும் கூட.  உன்னோட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். வாவ் மைதி! ஐ ம் வெரி எக்ஸைடெட்”

‘என்ன சொல்றா? அண்ணியா?! அப்படினா ராகுல்...’ அதிர்ச்சி... சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி... வருவது யாரோ என்று அலட்சியமாக இருந்தவளால், வந்திருப்பது ராகுல் என்பதை ஒப்பு கொள்ளமுடியவில்லை.  அவசரமாக அங்கிருந்தவர்களை அவளின் கண்கள் அலசின.

“மைத்ரீயை தொந்தரவு பண்ணாதே! வந்து ராகுல் பக்கத்தில் உட்காரு சரயூ” சாரதாவின் பேச்சிற்கு கட்டுபட்டவளாக அண்ணனின் பக்கத்தில் அமர்ந்தாள்.

‘ராகுலா இருக்க கூடாது’ என்று மனதில் உருபோட்டவளின் பார்வையில் அவன் முகம்.

சில நொடிகள் ராகுலின் முகத்தில் நிலைத்திருந்த அவளின் பார்வை இப்போது தவிப்போடு ஜெய்யிடம் பாய்ந்தது.

அவளுக்கு தைரியமளிக்கும் விதமாக கண்களை மூடி திறந்தவன் “மைதியை உள்ளே கூப்பிட்டு போங்க” என்று கண்களாலே ப்ரியாவிடம் சொன்னான்.

“பெரியவங்க பேசட்டும் மைதி! நாம உள்ள போகலாம் வா!” ப்ரியா அவளை எழுப்பவும்

“மைத்ரீ! உங்கிட்ட கொஞ்ச பேசனும்” என்றான் ராகுல் அவளின் முகத்தை துளைத்த பார்வையோடு.

‘கடவுளே! இது என்ன சோதனை?’

சாரி மக்களே! சில சொந்த காரணங்களால் அப்டேட் குடிக்க முடியாமல் போச்சு.  என்னோட கதைக்கு இருந்த கொஞ்ச வாசகர்களையும் இழந்துடனோனு கவலையாவும் பயமாவுமிருக்கு. மன்னிச்சிருங்க நடுவில் ஒரு பெரிய ப்ரேக் வந்திடிச்சு.  இல்லைனா நீ ரொம்ப ரெகுலரா அப்டேட் கொடுத்திட்டாலும்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேட்குது.  என்னை தராளமா நம்பலாம்… இனிமேல் ரெகுலரா அகேட் குடுக்க முயற்சி செய்றேன்.

அப்டேட் படிச்சிட்டு உங்களோடு கருத்துகளை பகிர மறக்காதீங்க.

எத்தன கம்மென்ட் வருதோ அத்தனை சீக்கரமா அடுத்த அப்டேட் தருவேன். ஏன்னு யோசிக்கிறீங்களா? உங்க கம்மென்ட் ஒவ்வொன்னும் அப்படியொரு எனெர்ஜியை குடுக்கும். நன்றி!

Episode 14

Episode 16

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.