(Reading time: 21 - 41 minutes)

கணவனை முறைத்துவிட்டு திரும்பிய ப்ரியா, “நீங்க கவலைப்படாதீங்க அத்தை! மைத்ரீ ஏதோ கோபத்தில் கதவை சாத்தியிருக்கா.  ஜெய் இங்க இருக்கும்போது எதுக்கும் யோசிக்க வேணா”

கவலையும் மீறி மருமகளை நினைத்து பெருமையுற்றது மனம்.

“மைதி! கதவ திற!” கதவை விடாது தட்டினான் ஜெய்.

“சொன்னா புரிஞ்சுக்க! அம்மா சொன்னத கேட்ட இல்ல மைதி.  அவங்க வந்துட்டு போயிடுவாங்க.  அவ்வளவுதா”

அவளிடம் எந்த பதிலுமில்லை.

“மைதி ப்ளீஸ்! கதவ திற.  உள்ள என்ன செய்ற?”

“போடா எரும! சரியான அம்மா பையன் நீ! அம்மா பேசின உடனே ஃப்ரெண்ட மறந்துட்டு கட்சி மாறிட்ட இல்ல.  எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்குமில்ல, அன்னைக்கு உன்னை என்ன செய்றேன்னு பாரு, குரங்கே!” கதவை திறக்காமலே, கோபமாக சபதமிட்டாள் மைத்ரீ.

கோபமாக உள்ளே சென்றவள், கதவை அடைத்து விட்ட தவிப்பில் இருந்தவனுக்கு அவளின் சபதம் சிரிப்பை கொடுத்தது.  மற்றவரையும் தொற்றிக் கொண்ட அந்த சிரிப்பு, சூழலை சற்று இலகுவாக்கி நிம்மதியை விதைத்தது.

சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன், “சரி! அப்படியே செய்! இப்போ என்ன செய்திட்டிருக்க மைதி?”

“உங்கிட்ட போயி ரெகமெண்ட் பண்ண சொல்லி கேட்டேனே, வேற என்ன செய்ய முடியும்?! வரப் போற அந்த உதவாத மாப்பிள்ளைட்ட பேசிக்கிற.  சும்மா பேசி நேரத்த வீணாக்கத, நான் ரெடியாகனும்”

சிறிது நேரம் கழித்து யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது.

‘யாரா இருந்தாலும் அங்கேயே நிக்கட்டும். பிடிக்கலைனு எவ்வளவு சொல்லியும் கேட்டாங்களா? தட்டி தட்டி கை வலிக்கட்டும். நான் இன்னைக்கு கதவ திறக்கறதா இல்ல’.

“மைதி என்ன செய்ற? சரூ பாவம்... எவ்வளவு நேரம் கதவ தட்டுவா? உன்னோட கோபமெல்லா எம்மேல தானே.  ப்ளீஸ் கதவ திற மைதி!”

‘இது என்ன புது கதை சொல்லுறா! சரயூ எப்படி இங்க வந்தா? இவ சொல்ற பொய்யை நம்பாதே மைத்ரீ’

“போடா எரும! நீ சொல்லுற பொய்யை நம்ப வேற ஆளைப் பாரு”

சட்டென சரயூவை கவனித்தான்.  ‘போடா எரும’ என்ற மைத்ரீயின் வார்த்தையில் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

சரயூவின் அறிமுகத்துக்கு பிறகு ஜெய்யின் செல்ல பெயர்களை வீட்டில் மட்டுமே உபயோகித்தாள் மைத்ரீ.  இதைப் பற்றி ஜெய் அவளிடம் கேட்ட போது,

“உனக்கு ஏராளமான செல்ல பேர் வச்சிருந்தாலும், சரயூ முன்னாடி அந்த பேர சொல்லி கூப்பிட மாட்டேன்.  உன்ன யார்கிட்டயும் விட்டு கொடுக்க முடியாதுடா” அவள் நட்பின் ஆழத்தை உணர்த்தியது அவளின் வார்த்தைகள்.

கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி பட்ட பெயர்களிலிருந்து தப்பிக்க நினைத்த ஜெய், “சரூ இருக்கும்போது இப்படி யோசிச்சு நிதானமா பேசுறதுக்கு பதிலா, நீ எனக்கு வச்சிருக்க பேரையெல்லாம் மறந்திரலாம்”.

“வாட் அன் ஐடியா சர்ஜீ! செல்ல பேரு வச்சதே உன்னோட எந்த சுபாவத்தயும் நீ மறக்க கூடாதுனுதா.  இந்த மொக்க ஐடியாவையெல்லா வெளிய எங்காவது சொல்லி அடி வாங்காதே” குறும்பு குடியேறியிருந்தது அவள் முகத்தில்.

“என்னோட சுபாவமா? வாய்ப்பே இல்ல.  உன்னோட சுபாவத்தை எனக்கு பேரா வச்சிருக்க”

“இல்ல”

“ஆமா” என இருவரும் சாதரணமாக ஆரம்பித்த பேச்சை செல்ல சண்டையில் முடித்தனர்.

‘மானத்த வாங்குறாளே! லூசு மைதி! அன்னைக்கு சொன்னது ஒன்னு இன்னைக்கு செய்றது ஒன்னு’ ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தான்.

அந்த சிரிப்பில் கலைந்த சரயூ, அவன் நிலை புரிந்து உதவிக்கு வந்தாள்.

“மைதி, கதவ திற! நான்தா இப்போ கதவ தட்டினது.  உன் போனை எடு நான் வீடியோ கால் பண்றேன், அப்போவாது என்னை நம்புறியானு பார்ப்போம்!” கடைசி வார்த்தைகளை சொன்ன போது கேலி சிரிப்போடு ஜெய்யைப் பார்த்திருந்தாள்.  அதில் ‘உன்னை அவள் நம்பவில்லை’ என்ற செய்தி மறைந்திருந்தது.

‘இவளை யாரு வர சொன்னது? எனக்கே நடக்கிறது பிடிக்காமலிருக்கவும் இவளை வேற எப்படி சமாளிக்கிறது? எல்லா இந்த குரங்குதா செய்திருப்பா’ புலம்பலும் கோபமுமாக அலறிய ஃபோனை தூக்கி எறிந்தவள் கதவை திறந்தாள்.

அறையினுள் சென்றதும் தாவி தோழியை அணைத்தாள் சரயூ.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு மைதி!”

‘எனக்கு அழுகையா வருதே’

“நான் இதை எதிர்ப்பார்க்கல! இட் இஸ் அ ஸ்வீட் சப்ரைஸ்”

‘நானும் இதை எதிர்ப்பார்க்கல! இது சப்ரைஸ்தா ஆனா இது எனக்கு பிடிக்கலயே’

“உனக்கும் ஒரு சப்ரைஸ் காத்திட்டிருக்கு!”

‘கிடைச்ச சப்ரைஸ் பத்தாதா?’ என மனதில் கூடிய வலியோடு எதையும் வெளிபடுத்தாமல் நின்றிருந்தாள் மைத்ரீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.