(Reading time: 36 - 72 minutes)

னக்கு இதெல்லாம் வேண்டாம்… வேணும்னா நானே வந்து கேட்குறேன்… நீ இதெல்லாம் எடுத்துட்டு கீழே இருந்து மேலே அலைய வேண்டாம்…” என்றபடி அவன் கருமமே கண்ணாக ஃபைலை எடுத்துவைத்துக்கொண்டு பேச, அவள், “வெறும் வயிற்றோடு இருக்குறது உடம்புக்கு நல்லது இல்லை… இனி நான் இங்க கொண்டு வரலை… இந்த ஒரு தடவையாச்சும்….” என தன்மையாக சொல்லியவள், அவன் பதிலை எதிர்பார்க்காது கீழே சென்றுவிட, அவன் தயாராகி கீழே வந்தான் சில நிமிடங்களில்…

வந்தவன் தாயிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட, அவள் அவன் தன்னிடம் ஒரு வார்த்தை வரேன் என்று சொல்லிவிடமாட்டானா என வாசல் கதவின் ஓரம் சாய்ந்து நிற்க, அவன் திரும்பியே பார்க்கவில்லை… அவன் சென்றதும், “அத்தை அவர் காலையில் எதுவும் சாப்பிடமாட்டாரா?...” என சாரதாவிடம் வினவ, “முன்னாடி எல்லாம் சாப்பிடாம போகமாட்டான்… ஆனா இப்போ கொஞ்ச நாளா வேலை அதிகமா இருக்கு அதனால காலை சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுவான்… ஆஃபீஸில் போய் சாப்பிட்டுப்பேன் கவலைப்படாதீங்கன்னு சொல்லுவான்…” என்றதும், அவள் முகம் சற்றே யோசனையில் இருக்க,

“இதுவரை எப்படியோ, இனி அவனை சாப்பிட வைக்குறது உன் பொறுப்பு… சரியா சஷி…” என கேட்க, அவளும் “ஹ்ம்ம்… சரி அத்தை…” என்றாள்… அவன் இரவு நடந்து கொண்டவிதம், காலையில் பேசிய விதம் என எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தவள், அவனின் மனம் மாறும் என்ற நம்பிக்கையோடு மேலே தனதறைக்கு வந்த பார்த்த போது முகத்தில் அறை வாங்கியது போல் நின்றாள்… அவள் கொண்டு வைத்த ஜூஸ் அப்படியே இருந்தது… அதை கையில் எடுத்தவளுக்கு உள்ளே வலித்த போதிலும், “நீங்க மாறுவீங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு…” என சற்றே வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் அதை தூர ஊற்றினாள் அவளும் காலையில் உணவு சாப்பிடாமல்...

இரவில் அவனுக்காக பார்த்து பார்த்து சமைத்தாள்… அவன் வருகைக்காக வாசலில் அமர்ந்தபடி காத்திருந்தவளைக் கண்ட சாரதாவிற்கு, வந்த ஒருநாளிலேயே அவளின் செயல், நடவடிக்கை, பேச்சு, என அனைத்தும் பிடித்து போனது… எப்படியும் தன் மகனை இவள் மாற்றி விடுவாள் என்ற நம்பிக்கை அவர் மனதில் வேரூன்றியது… மெல்ல அவளருகில் சென்றவர், “என்னம்மா… உன் புருஷனுக்காக வெயிட் பண்ணுறீயா?...” எனக் கேட்க, வெட்கத்துடன் சிரித்துவிட்டு, “அத்தை அவர் வர லேட் ஆகுமா?...” என தவிப்போடு அவள் கேட்ட போது, “ஹ்ம்ம்… அவ்வளவு அக்கறை இருந்தா நீயே போன் பண்ணி கேளேன்… எப்போ வருவீங்கன்னு?..” என அவரும் சிரித்துக்கொண்டே சொல்ல…

“போன் செய்யலாம் அத்தை… ஆனா அவர் டிரைவிங்கில் இருந்தால் அவர் கவனம் சிதறும் தானே… நான் வெயிட் பண்ணுறேன் அத்தை… பரவாயில்லை… அவர் வரட்டும்…” என்று சொன்ன மருமகளை வைத்தகண் வாங்காமல் பார்த்தார் சாரதா… “என்ன அத்தை என்னாச்சு?...” என்ற அவளின் கேள்விக்கு, “சரிம்மா… சாப்பிட்டு வெயிட் பண்ணு… வா…” என அவர் அழைக்க, “இல்ல அத்தை… அவருக்கு பரிமாறிட்டு அதுக்கப்புறம் சாப்பிடுறேன்…” என்றவள், அவரின் கைப்பிடித்து, “நீங்க வாங்க… நீங்க சாப்பிட்டு ஒன் அவர் மேல ஆச்சு… வாங்க வந்து மாத்திரை போட்டுக்கோங்க…” என அழைத்து சென்று மருந்து சாப்பிட வைத்து விட்டு சற்று நேரம் அவர் அருகில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க, அரை மணி நேரம் கடந்து விட்டிருந்தது… அவர் மெல்ல கண் அயர, அவரை படுக்கவைத்து விட்டு, அறைக்கதவை சத்தமில்லாமல் சாத்தி விட்டு மீண்டும் வாசலில் அமர்ந்து அவன் வருகைக்காக காத்திருந்தாள்…

கார் சத்தம் கேட்கவும் வேகமாக எழுந்து நின்றவள் முகமெங்கும் அவனைப் பார்க்க போகும் ஆனந்தம்… அவன் காரிலிருந்து இறங்கி மிதமான வேகத்தில் எந்த ஒரு அலட்டலும் இல்லாது நடந்து வருவதைப் பார்த்தவளுக்குள் ஏனோ இனம் புரியாத சந்தோஷம்… வைத்த கண் வாங்காமல் அவனையே இரு விழிகளுக்குள் நிறைத்தவள் அவன் அவளைத் தாண்டி வீட்டினுள் நுழையும் போது தன்னுணர்வு பெற்றாள்… அவனின் பின் வேகமாக சென்றவள் அவனின் கைப்பையை வாங்க முயற்சிக்க, “இல்ல பரவாயில்லை….” என்ற வார்த்தைகளுடன் நிறுத்த முயற்சித்தவன், சாரதாவின் அறையைப் பார்த்ததும், “அம்மா சாப்பிட்டாங்களா?...” எனக் கேட்க, “சாப்பிட்டாங்க… மருந்தும் கொடுத்துட்டேன்… இப்போ தூங்குறாங்க…” என அவள் பதில் சொன்னதும், “ஓ… சரி…” என்றவாறு அவன் தனதறைக்கு செல்ல முயன்ற போது, “நீங்க ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க… நான் அதுக்குள்ள சாப்பாடு எடுத்து வச்சிடுறேன்…” என சொல்லியவள், கிச்சனை நோக்கி செல்ல, “நான் சாப்பிட்டேன்…” என்றவன், அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.