(Reading time: 36 - 72 minutes)

ரிதாக தனக்காகவே பூத்த வானவில்லை தொலைத்துவிட்டேனோ என எண்ணிக்கொண்டே சென்றான் காரில் வேகமாய்… ஏனோ அவனது தேடலில் அவள் கிடைக்காது போக, வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தான்… அவள் அந்த வீட்டில் அங்கும் இங்கும் உலா வந்தது, அவனை ஓரக்கண்ணில் ரசித்தது, அவனின் ஒரு வார்த்தைக்காக தவித்து ஏங்கி நின்றது என ஒட்டு மொத்தமாய் அவள் நினைவு அவனை சுற்றி சுற்றி அலைக்கழிக்க, அவள் இல்லாத வீடு ஏன் தனச்க்குப் பிடித்தமாயில்லை… என தோன்றிய மாத்திரத்தில் அவனது தலை விண் விண் என்று தெரிக்க, தரையில் முழங்கால் போட்டு சரிந்தான் தலையைப் பிடித்துக்கொண்டு…

அடுத்து என்ன செய்வது?.. என அவன் செய்வதறியாது திகைத்து இருக்கையில், கொலுசு சத்தம் கேட்க நிமிர்ந்தவனுக்கு அப்போது தான் உயிரே வந்தது போல் இருந்தது… கொஞ்சமும் இமைக்காமல் அவன் பார்வை முழுவதும் அவள் மேல் தான் இருந்தது…. ஆனால் அவள் அவன் பார்வையை சந்திக்காமல் திரும்பி நின்று… “மன்னிச்சிடுங்க…” என மெல்ல சொல்ல,  “எதுக்காக வீட்டை விட்டுப் போன?...? எனக் கேட்டான் அவன் மிக கோபமாக… அவள் பேசாமல் நிற்கவே, “ரித்திகாவைப் பார்த்தியா?.. எதுக்காக அவகிட்ட நடந்ததை சொன்ன?... சொல்லு உங்கிட்ட தான கேட்குறேன்…?...” என அவன் சற்றே குரல் உயர்த்த,

“ஏன்னா நான் விரும்பின என்னோட முதல் காதல் நீங்க…… அணுஅணுவா உங்களோட வாழ நினைக்கிறேன்… உங்க மனசுலயோ முகத்துலயோ எந்த வருத்தமும் கவலையும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்… வார்த்தையால கூட உங்களை யாரும் காய்ப்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறேன்… அது தப்பா?... சொல்லுங்க தப்பா?...” எனக் கேட்க இம்முறை அவன் ஊமையாகி போனான்…

“உங்க மனசு இன்னைக்கு மாறும் நாளைக்கு மாறும்னு நானும் காத்திருந்தேன்… ஆனா என்னை காத்திருக்கவே வேண்டாம்னு விவாகரத்து பத்திரத்தை நீட்டினப்போ நான்… நான்….” என பேச தடுமாறியவள், “என்னை உங்களுக்குப் பிடிக்கவே இல்லன்னு தான் கடைசியில எனக்கு தோணுச்சு… அதான் வீட்டை விட்டு கிளம்ப முடிவெடுத்து அந்த லெட்டர் எழுதினேன்… ஆனா எழுதி வச்சிட்டு இந்த வீட்டு வாசப்படியை கூட என்னால தாண்ட முடியலை… என்னதான் பிடிக்காத மனைவியா இருந்தாலும், காலம் முழுக்க உங்களை கூட இருந்து பார்த்துக்குற பாக்கியமும் இந்த வீட்டை விட்டு போயிட்டா எனக்கு கிடைக்காது… அத்தைக்கு நான் செய்து கொடுத்த சத்தியமும் பொய்யாகிடும்… எல்லாத்தையும் விட, நானும் வீட்டை விட்டு போயிட்டா, உங்களை யார் பார்த்துப்பா?... பிடிக்காம பேசாம இருந்தாலும், உங்களுக்கு வேண்டியதை நான் செஞ்சு அதுல நான் சந்தோஷப்பட்டுப்பேன்… எனக்கு அந்த வரம் இந்த ஜென்மத்துல கிடைச்சதே போதும்… என்னால நீங்க கொடுத்த விவாகரத்தை ஏத்துக்க முடியாது…” என அவள் தன் மனம் திறந்து பேச,

“ஏன் ஏத்துக்க முடியாது?...” என அவன் விடாமல் கேட்க… ‘ஏன்னா நான் உங்களை விரும்புறேன் ரக்ஷித்… விரும்புறேன்… விரும்புறேன்… உங்க கூட சேர்ந்து வாழணும்னு நான் ஆச….” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் நிற்க, இரண்டே எட்டில், அவளை நெருங்கியவன், ‘சொல்லு… ஏன் நிறுத்திட்ட…. சொல்லு…” என அவள் முகத்தினை கைகளில் ஏந்தியபடி கேட்டான்…

அவனின் முதல் ஸ்பரிசத்தில், தன்னை மறந்தவள், விழியை தாழ்த்தியவண்ணம், “இப்போ கூட அந்த வார்த்தையை என்னால சொல்ல முடியலை… எங்க அந்த வார்த்தை உங்களை கஷ்டப்படுத்திடுமோன்னு தோணுது…” என வலியுடன் அவள் சொல்ல, “எந்த வார்த்தை கஷ்டப்படுத்த போகுது?... சொல்லு…” என அவன் விடாமல் கேட்க, “நான் உங்களோட வாழணும்னு ஆசப்படுறேன் … ஏங்குறேன்… தவிக்குறேன்… துடிக்குறேன் ரக்ஷித் … ஆனா நீங்க… நீங்க… ஆ…ச….?....” என்றவளுக்கு அதற்கு மேலும் கண்ணீரை அடக்கும் வழி தெரியவில்லை… அவனைக் கைப்பிடித்த நாள் முதல் எந்த கண்ணீரை மறைத்து மறைத்து வைத்தாளோ, அந்த கண்ணீர் இன்று வெள்ளமாக அவள் இமைகளில் தஞ்சம் புகுந்து நிரம்பி நின்றது…

அவளது வார்த்தையில் அவனது பிடி இறுக, அவள் தன்னைப் பார்க்கும் வண்ணம் அவன் அவளது முகத்தை உயர்த்த, முதன் முதலாக இருவிழிகளும் ஒன்றில் இன்னொன்றை பிரதிபலிக்க, அவளது கண்ணீர் சட்டென வழிந்து அவனது கைகளில் பட்டு தெறித்த்தும், சட்டென அவனது மனதை இதுவரை ஆட்டிப்படைத்த பெரும்பாரம் ஒன்று ஓசையில்லாமல் விலகி செல்ல, அவன் அவள் விழியினில் தன்னை இழந்தான்… அவனின் இருதயம் அவளின் காதல் சுவாசத்தால் மெல்ல அசைந்து திறந்தது…

“நான் ஆசப்பட்டது அவளை தான்… ஆனா, இப்போ நான் இப்போ உயிரா சுவாசமா நேசிக்குறது உன்னை மட்டும் தான் ம்ருதா… மனப்பூர்வமா சொல்லுறேன்… உங்கூட சேர்ந்து வாழணும்னு என் மனசு துடிக்குதுடி… ஆசப்படுறேண்டீ முடி எல்லாம் நரைச்சு இருக்குற நிலைமையிலும் நான் சாஞ்சுக்குற தோள் நீயா இருக்கணும்னு ஆசப்படுறேண்டீ… இதுநாள் வரை விலகி இருந்த நாளை உங்கூட சேர்ந்து ஒருநொடி கூட விலகாம செலவழிக்கணும்னு ஆசப்படுறேண்டீ… செத்தாலும் உன் முத்தம் தந்த தித்திப்போட சாகணும்னு ஆசப்படுறேண்டீ ம்ருதா….” என சொன்னதும், அவன் வாயைப் பொத்தியவள், இல்லை என தலை அசைக்க,

“என் ஆசைக்கெல்லாம் உயிர் கொடுப்பியா ம்ருதா?...” என கேட்டது தான் தாமதம் போல் கொட்டும் அருவி போல் அழுது தீர்த்தாள் அவள் அவனது நெஞ்சில் இடம் பிடித்த சந்தோஷத்துடன்… அவள் அழ, அழ, அவளை வேகத்துடன் அணைத்துக்கொண்டான் அவன்… தனக்குள் புதைந்துக்கொள்வது போல் சாய்ந்தவளை தனது அணைப்பினால் இறுக்கிக்கொண்டான் அவன் முகம் மலர தன் முகத்தில் வழிந்தோடும் நீரை துடைக்கும் எண்ணமே இல்லாமல்…

காயமும், ரணமும், வலிகளும், வேதனைகளும், என அனைத்துமே மாறிவிடும் ஒன்று தான் காலம் போகும் போக்கில்… கடந்து போகும் நாட்களில், பாதைகளில், அனைத்துமே சுழற்சி முறையில் மாறிக்கொண்டே இருக்கும்… எனினும் மாறாதது உண்மையான உயிரான காதல் மட்டுமே… அவனின் முதல் காதல் அவனை சேரவில்லை… ஆனால் அவளின் முதல் காதல் அவன் கொண்ட காயத்தை ஆற்றி அவனுக்கு மீண்டும் புத்துயிர் அளித்தது… காதலும் அதுபோல தான்… மரணத்தை விட கொடிய வலியை கொடுக்கும் அதே காதல் தான், மரணத்தை மிஞ்சும் வாழ்க்கையையும் பரிசாக தருகிறது…

அதே தான் இங்கே ம்ருதா-ரக்ஷித் வாழ்க்கையிலும் நடந்துள்ளது… ரக்ஷித்தின் காயம் கொண்ட முதல் காதலை ம்ருதாவின் ஆழமான உயிரோட்டமான முதல் காதல் மருந்திட்டு ஆற்றியது சற்றும் வலிக்காமல் முழுக்க முழுக்க அன்பான முதலான காதலோடு…

This is entry #76 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.