(Reading time: 31 - 61 minutes)

ன்னை செய்யாத வேலையை செவ்வனே செய்தான் மிருதன். தூக்கத்தில் இருந்து எழுந்தவன் தன்னருகில் ராகினி இல்லாமல் போகவும் சிணுங்க ஆரம்பித்தான். அவனது லேசான சிணுங்களிலேயே கண் விழித்து விட்டிருந்த ஷ்யாம் மிருதனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் அவனை வாரி தூக்கி தன் மார்பின் மீது படுக்க வைத்து கொண்டான்.

“குட் மார்னிங் ப்ரின்ஸ்” என்று ஷ்யாம் சிரிக்க,

“குட் மார்னிங்..” என்று ஆரம்பித்த மிருதன் நேற்று ஷயாமை எப்படி அழைத்தோம் என்பதை மறந்திருந்தான். அதை உணர்ந்த ஷ்யாம்,

“டேடிக்கு உம்மா கொடுங்க” என்றபடி கன்னத்தைக் காட்டினான்.

“ம்ம்ஹ்ம்ம்.. மாட்டேன்” என்று மறுத்தான் மகன்.

“ ஏன் ப்ரின்ஸ்?”

“யார் ப்ரின்ஸ்?”

“ நீங்கதான் என் ப்ரின்ஸ். சரி சொல்லுங்க ப்ரின்ஸ் ஏன் உம்மா தர மாட்டுறிங்க?”

“ அம்மா திட்டுவாங்க.. ப்ரஷ் பண்ணாம முத்தா கொடுக்க கூடாது” என்று விழிகளை உருட்டிக் கொண்டு கூறிய மிருதனை வியப்பாய் பார்த்தான் ஷ்யாம். இந்த வயதிலேயே ராகினி சொல்வதை கடைப்பிடிக்கிறானா இவன்? ஹ்ம்ம் ராகினி ரொம்பவே கறார் பேர்வழியோ! என்று யோசித்தவன்,

“ சரி டேடி உங்களுக்கு எஸ்கிமோ முத்தா சொல்லி தரேன்.. அதுக்கு ப்ரஷ் பண்ண வேணாம்” என்று உடனே வேறு மார்க்கம் கூறினான்.

“ அது என்ன முத்தா டேடி..?”

“அதுவா? இதோ!” என்றவன் தனது மூக்கினால் மிருதனின் மூக்கை வலதும் இடதும் உரசி, “இதுதான் எஸ்கிமோ முத்தா” என்றான். அப்போது ஷ்யாமின் மீசை லேசாய் குறுகுறுப்பு மூட்ட அதை பிடித்து இழுத்தான் மிருதன். அவன் இழுத்த வேகத்தில், ஷ்யாம் வலியினால்  கத்திவிட அங்கு ஓடி வந்தாள் ராகினி. அவள் வருவதற்குள் ஷ்யாமின் குரல் அடங்கியிருந்தது.

“என்ன இது டேடி?”

“இதுவா மீசை மிரு.. உங்களுக்கு பிடிக்கலையா? டேடி எடுத்திடவா?” என்று கேட்டான் ஷ்யாம். ஷ்யாமின் மேல் ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு சில நொடிகள் யோசித்த மிருதன்,

“வேணாம் டேடி.. இது அழகா இருக்கு” என்று மீண்டும் இழுத்தான். இந்த முறை கத்தாமல் தன் மீசையை முறுக்கி கொண்டான் ஷ்யாம். இதுவரை பல பேர் தனது மீசை அழகு என்று சொன்னப்போது எழாத கர்வம், முதன்முறையாய் தன் மகன் சொன்னதும் எட்டிப் பார்த்தது. இனிமேல் மிருதனுக்கு நான்தான் ஹீரோ என்று அவனே சொல்லிக் கொண்டான்.

தந்தையும் மகனும் கொஞ்சும் கொஞ்சலைப் பார்த்து அசந்து போய் அப்படியே நின்று விட்டிருந்தாள் ராகினி. திருமணமாகி ஓராண்டுக்கு பிறகுதான் பிறந்தான் மிருதன். அவன் இப்படி பேசி கேட்கும் பாக்கியம் சங்கீதனுக்கு அமையவில்லை. மிருதனுக்கு ஒரு வயதாகும்போதே தேசத்திற்காக உயிரை தியாகம் செய்திருந்தான் சங்கீதன்.

சங்கீதனின் நினைவுகள் மீண்டும் எழவும், ராகினியின் முகத்தில் இறுக்கம் பரவியது. அவளைக் கண்டுக்கொண்ட ஷ்யாம், மிருதனுடன் எழுந்து நின்றான். மேஜை மீது இருந்த காஃபியை ஆசையாய் வாயில் வைத்தவனின் முகம் அஷ்டகோணலானது. (பின்ன ஏழரை மணிக்கு போட்ட காஃபியை , மகனோடு கொஞ்சி  விளையாடியப்பின் குடிச்சா ருசிக்குமா ஷ்யாம்?).

“ என்ன இது?” சுருங்கிய முகத்துடன் கேட்டான் ஷ்யாம்.

“ காஃபி .. குடிச்சா தெரியலையா?”

“ ஏன் இவ்வளவு சில்லுனு இருக்கு?”

“ஏழரை மணிக்கு போட்ட காஃபி ! ஆறி போயிருக்கும். எனக்கு எல்லாமே நேரத்துக்கு பண்ணி பழகிடுச்சு.. காஃபி நான் ஏழரை மணிக்குத்தான் போடுவேன்..” என்றவளின் குரலில், “உனக்கு வேண்டுமானால் ஏழரை மணிக்கே எழுந்திரு!”என்ற மிரட்டல் இருந்தது.

“ஓஹோ.. எனிவே தேங்க்ஸ் காஃபிக்கு!”

“சீக்கிரம் ப்ரஷ் ஆகிட்டு வாங்க ! ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணியாச்சு!” என்று அவள் கூறவும், “ரொம்ப தான்டீ மிரட்டுற!” என்று மனதிற்குள் சொன்னவன்,

“சீக்கிரம் வரோம்!” என்றான். அவ்வளவுதான்! இனி உன்னோடு எனக்கென்ன பேச்சு என்பது போல ராகினி திரும்பி நடக்க, “ காஃபியை நான் சூடு பண்ணி குடிக்கிறதுல உனக்கு ஆட்சேபனை இல்லையே?”என்று கேட்டான் ஷ்யாம்.

“ இல்லை..!”

“பையனுக்கு பூஸ்ட் சூடா இருக்கா இல்லை சில்லுனு இருக்கா?” என்று ஷ்யாம் நக்கலாய் கேட்கவும், ராகினிக்கு சுருசுருவென கோபம் வந்தது.

“அவன் சின்ன பையன்! லேட்டா எழுந்திருப்பான்னு எனக்கு தெரியாதா? என் பையனை எனக்கு பார்த்துக்க தெரியும்.. உங்க அக்கறைக்கு ஒரு அளவுகோள் இருக்கட்டும்!” என்றாள் அவள். அவள் கூற்றுக்கு பதில் சொல்லாமல் மிருதனை தூக்கி கொண்டு குளியலறைக்கு சென்றான் ஷ்யாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.