(Reading time: 31 - 61 minutes)

மா, காலையில ஃபோன் வந்ததுல? வேலைப் பத்தி தான் பேசினாங்க !” என்று அள்ளி விட்டான்.

“ அப்போ நான் பேக்கிங் வேலையை ஆரம்பிக்கிறேன்” என்று எழுந்த ராகினி, அவனை பக்கமாய் திரும்பி, “ ரொம்ப தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு ஓடினாள். அவள் மலர்ச்சி அவனது மனதை மென்சாரலாய் நனைத்தது.

டெல்லி..!

ஷ்யாமுடன் டெல்லிக்கு வந்து இரண்டு வாரங்கள் அதிவேகமாகவே கடந்திருந்தன. எப்போதும் போல இறுகிய நிலையில் இல்லாமல் கொஞ்சம் சகஜமாகவே ஷ்யாமுடன் பழக ஆரம்பித்திருந்தாள் ராகினி. முக்கியமாக, ஷ்யாமின் மொக்கை ஜோக் களுக்கு பஞ்சமில்லாமலே சிரித்து வைத்தாள்.

அவனது ஸ்னேகமான குணத்தையும் தாண்டி, மிருதனின் மீது அவன் வைத்திருக்கும் அன்புதான் ராகினியை மாற்றியிருந்தது. அவ்வப்போது சங்கீதனைப் பற்றியுள்ள நினைவுகளை கூட அவளால் ஷ்யாமுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. மொத்தத்தில் “தியாக செம்மல்” என்ற பட்ட பெயரில் இருந்து “நல்ல நண்பன்” என்ற பெயரை வாங்கியிருந்தான் ஷ்யாம்.

ன்று, வழக்கம் போலவே மிருதனும் ஷ்யாமும் விளையாடிக் கொண்டிருப்பதை ராகினி ரசித்துக் கொண்டிருக்க, ஷ்யாமின் செல்ஃபோன் சிணுங்கியது. அதில் “பார்ட்டி” என்று ரிமாய்ண்டர் தென்படவும் தலையில் அடித்துக் கொண்டான் ஷ்யாம்.

“அய்யோ அஞ்சு மணிக்கு நான் அங்க இருக்கணுமே ! மணி இப்போவே நாலரை ஆச்சே!” என்றவன் மிருதனை தூக்கி கொண்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

“ ஷ்யாம்.. என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?” என்று ராகினி கதவைத் தட்ட, “இரும்மா” என்று குரல் கொடுத்தான் ஷ்யாம். சில நிமிடங்களில் அவனும் மிருதனும் தயாராகி இருந்தனர்.

“ என்னாச்சு ஷ்யாம்?”

“ ராகினி, சாரி உன்கிட்ட அப்போவே பெர்மிஷன் வாங்கி இருக்கணும் ..பட் எனக்கே மறந்து போச்சு! கல்யாணம் முடிஞ்சதுக்காக ப்ரன்ட்ஸ்க்கு சின்ன பார்ட்டி வைக்கிறேன்னு ப்ராமிஸ் பண்ணேன்..ஆனா மறந்துட்டேன்! நான் பையனைக் கூட்டிட்டு போறேன்..” என்று அவன் பரபரக்க,

“ஓஹோ பையன் கூட வந்தால் போதும்! பொண்டாட்டி தேவையில்லையா?” என்று குறை கூறும் குரலில் ராகினி கேட்டிட, ஸ்தம்பித்து நின்றிருந்தான் ஷ்யாம். “நீயா பேசியது என் அன்பே” என்று பார்வையாலேயே வயலின் வாசித்தான் அவன்.

“என்ன ஷ்யாம் லொட லொடன்னு பேசுவிங்க.. இப்போ பேசுங்க!”

“ அடிப்பாவி நான் லொட லொடவா? எல்லாம் என் நேரம்!”

“ ஷ்யாம் எனக்கு மைண்ட் வாய்ஸ் எல்லாம் கேட்காது.. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க .. உங்க பொண்டாட்டி தானே நான்? நான் உங்ககூட வரக்கூடாதா?” என்று கேட்டாள் ராகினி.

“ அது வந்து… உனக்கு பிடிக்காதுன்னு .. நான் கேட்டால் நீ வர மாட்டன்னு நினைச்சேன்!”

“கேட்காமல் நீங்களே எப்படி முடிவெடுக்கலாம்?”

“..”

“இப்போ கூட கேட்கனும்னு தோணுதா உங்களுக்கு? உங்களை என்னத்தான் பண்ணுறதோ!” என்று முணுமுணுத்தவள், “பத்து நிமிஷம் கொடுங்க.. நானும் வரேன்” என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

“ப்ரின்ஸ் மழை வருதா பாருங்க!” என்று ஷ்யாம் ஆச்சர்யம் குறையாத குரலில் கூறவும், அவனது பேச்சை சீரியஸாய் எடுத்துக் கொண்ட மிருதன்,

“ இல்ல டேடி.. போலாமா?” என்றான்.

தயாராகிவிட்டு வந்த ராகினியை ஷ்யாம் எழுதி வைத்துவிட்டு போன மொட்டை கடுதாசிதான் வரவேற்றது.

“ ஒரு ப்ரச்சனை.. சீக்கிரம் வந்திடுவோம். சாரி!” என்று ரத்தின சுருக்கமாய் அவன் எழுதி வைக்க, அளுக்கு சுருக்கென்று வலித்தது.

“ச்ச… ப்ரண்ட்ஸ் எல்லாம் எங்க உன் பொண்டாட்டின்னு இவனைக் கேட்டால் இவனுக்கு சங்கடமாய் இருக்குமேனு நினைச்சு இறங்கி வந்தது என் தப்புத்தான்! எனக்கிது தேவைதான்! அவனுக்கு அவமானம்னா எனக்கு என்னன்னு இருந்துருக்கனும்.. என்னை பழி வாங்குறான்..அப்படி என்ன அவசரம் அஞ்சு நிமிஷம் வைட் பண்ண முடியாதா?” என்று பொறுமியவளுக்கு தெரியவில்லை ஷ்யாம் தன்னை பலமுறை குரலெழுப்பி அழைத்தும், உடை மாற்றும் அறையில் இருந்ததால் அந்த சத்தம் செவியில் விழவில்லை என்று.

டுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்தான் ஷ்யாம். ராகினி தனக்காக காத்திருப்பதை பார்த்தும் எதுவும் பேசாமல் நேராக அறையில் தூங்கிக் கொண்டிருந்த மகனை படுக்க வைத்தான்.

“என்ன திமிர் இவனுக்கு .. ஒரு வார்த்தைக் கூட பேசாமல் போறான்” என்று அவன் பின்னாடியே வந்தவள், மிருதன் உறங்குவதை பார்த்துவிட்டு ஷ்யாமின் கைகளை பிடித்து தரதரவென ஹாலுக்கு இழுத்து வந்தாள்.

“ என்னம்மா?” என்று ஷ்யாம் அக்கறையாய் கேட்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.