(Reading time: 31 - 61 minutes)

ப்போதும் கோமாளித்தனத்துடன் இருக்கிறான்..இவனுக்கென என்ன கவலை இருக்க போகிறது? அலட்சியமானவன் போல!  ஏதாச்சும் ஆஃபிஸ்ல வேலை பார்க்கிறான் போல!” என்று எப்போதாவது அவள் மனதில் எழும் குரல்கள் அனைத்தும் கப்சிப் என்று ஆனது. மனைவியின் நிலையை பார்த்தவன், அவளுக்கு சேர்த்தே தோசை வார்த்துவிட்டு, சாப்பிட ஆரம்பித்தான்.

“ நீங்க இந்த வேலை பார்க்குறிங்கன்னு சொல்லவே இல்லையே!”

“ எட்டு தடவை சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன்.. நீதான் காது கொடுத்து கேட்கல ராகி..!”

“சாரி.. ஆனா உங்களைப் பார்த்தால் அப்படி தெரியல!” என்று அவள் மனதில் பட்டதை கூறுவும் தன்னையே ஒரு முறை பார்த்துக் கொண்ட ஷ்யாம்,

“ இது ரியல் யூனிஃபார்ம் தான்மா ரீல் இல்லை” என்றான். அப்போதும் ராகினி தெளியாத முக பாவத்தில் இருக்க,

“ வேலையில் என்ன இருக்கு ராகி ? ஒவ்வொரு துறையும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது”என்றான். ராகினிக்கே அவன் மொழிந்த கூற்றில் உண்மை உறைந்திருப்பது புரிந்தது. ஆம், தனது கணவனின் வேலை மதிப்பிற்குரியதுதான் . ஆனால் அதற்காக மற்ற வேலை தாழ்வானதா என்ன? அவளை சமாதனப்படுத்துவதற்குள் ஷ்யாமிற்கு வேலையிடத்திலிருந்து ஃபோன் வந்தது. ராகினியிடம் சொல்லிக்கொண்டு சில நிமிடங்களில் கிளம்பி விட்டுருந்தான் அவன்.

தனது அறைக்குள் நுழைந்த ராகினி, காலையில் அவனுக்காக எடுத்து வைத்த உடையை பார்த்தாள். அதன் மீது ஒரு கடிதம் இருந்தது. ஷ்யாமின் வேலைதான் என்று புரிந்துகொண்டு, அதை படிக்க தொடங்கினாள்.

“ மை டியர் பொண்டாட்டி,

என்னை யூனிஃபார்மில் பார்த்ததும் நீ ரொம்ப ஷாக் ஆகி இருப்ப! அதைப் பத்தி உன்கிட்ட பேசறதுக்குள்ள ஃபோன் வந்துருச்சு.. அதான் இந்த லெட்டர். கிடைச்ச பத்து நிமிஷத்துல அவசரமா எழுதினேன். சோ கையெழுத்து மோசமாக இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

நான், உனக்கு வாழ்க்கை கொடுக்கனும்னு நினைச்சோ, தியாகியாக இருக்கனும்னு நினைச்சோ கல்யாணம் பண்ணிக்கல ராகி. என் வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் கல்யாணமே பண்ணிக்க வேணாம்னு இருந்தேன்.

கொஞ்சம் கற்பனை பண்ணி பாரேன்! எதற்கெடுத்தாலும் பயந்து கண்ணீர்விடும் ஒரு சாது பெண்ணை நான் கல்யாணம் பண்ணியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்னை நினைச்சு அவ தினமும் பயந்து நிம்மதியை இழந்திடுவாள், அல்லது அவளுக்காக நான் என் வேலையை விட்டு தரனும். ரெண்டுமே வேணாம்னு நினைச்சு தான் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு இருந்தேன்.

ஆனால், உன்னை பார்த்ததும் என் எண்ணமே மாறிடுச்சு. ஒரு டீவி ஷோவில் நீ பேசினது ஞாபகம் இருக்கா? நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களின் உறவினர்கள்ன்னு ஒரு நிகழ்ச்சி நடத்தினாங்க. அதில் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் தைரியமாய் பேசிய பொண்ணு நீ தான்! “ என் கணவரின் முடிவு, இந்த நாட்டின் நன்மைக்காக அவர் எடுத்த நல்ல முடிவு”ன்னு நீ சொன்ன வார்த்தை என் மனசுலயே நின்னுடுச்சு.. அப்போ முடிவு பண்ணேன் நீதான் என் மனைவின்னு.

ஆண் எத்தனை தைரியசாலியாக இருந்தாலும், அவனை சரியாய் இயக்க பெண் எனும் சக்தி வேண்டும். எனக்கு நீ வேண்டும். என் உயிர் சக்தியாய் நீ தான் வேண்டும்.

அடுத்து நம்ம பையன் மிருதன்! அவன் எப்பவும் என் மகன். அதற்காக நமக்கு வேற குழந்தையே வேணாம்னு வசனம் பேச மாட்டேன்.. நம்ம மிருவுக்கு தங்கையாய் மிருதுளா வரணும். அடுத்த ஜெனரேஷன்ல ஒரு பையனுக்கு நம்ம பொண்ணு இதே மாதிரி ஆக்ககர சக்தியாய் இருப்பாள்.

அப்பறம் நான் சிரிக்கும்போதெல்லாம் நீ ஏன் முறைக்கிறன்னு இன்னைக்கு நீ சொல்லியே ஆகனும்.. நாம பிறக்கும்போது அழறோம்.. செத்ததும் நம்மள சுத்தி அழறாங்க! அதற்கு இடையிலான வாழ்க்கையை புன்னகையால் நிரப்பனும்னு தோணுது செல்லம்மா.. உனக்காக எதை வேணும்னாலும் விட்டு கொடுப்பேன்.. ஆனா சிரிப்பு மட்டும் நோ.. சரியா?

இன்னும் நிறைய பேசனும்டா.. உனக்கு என்மீது நேசம் இருக்குன்னு தெரியும். வளர்பிறையாய் இருக்கும் நேசம் பூரண நிலவாகும் வரை வெயிட் பண்ணுவேன். அந்த மூன்று வார்த்தையை சொல்லிடுறேன்.

“நீயே என் உயிர்”

காதலுடன்,
ஷ்யாம்!

அவன் ஒரு முறை எழுதி சென்ற கடிதத்தை ஓராயிரம் முறை படித்துக் கொண்டிருந்தாள் ராகினி. அதே நாள் டெல்லியில் பிரபலமான அங்காடிக் கடையில் தீப்பற்றி கொள்ள, ராகினியின் வீட்டில் ஃபோன் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.

“ அவருக்கு ஒண்ணும் இல்ல..

அவர் வந்திடுவாரு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.