(Reading time: 60 - 120 minutes)

 

ன்  எதிரியின் எதிரியின் எதிரி” என எதிரியின் எதிரி நண்பன், எனவே நண்பனின் எதிரி, எதிரியின் எதிரியின் எதிரி என்ற சூத்திரத்தை உருவாக்கினான் சிவா.

 

“புரியலை”, சந்தியா.

 

“சிஸ்டர் இந்த புதிரை புரிஞ்சிக்க கிட்னி வேணும். எங்க ஆபரேஷன் வெற்றியானா முழு விவரமும்  நானே உங்களை கூப்பிட்டு சொல்றேன். இப்போ அந்த மிக்ஸிங் டெக்னிக்கை சொல்றீங்களா?”, கேட்டான் சிவா.

 

“அதுக்கு ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்.. முதல்ல சுத்தி உள்ளவங்களை டைவர்ட் பண்ணனும்..அப்புறம் வேகமா ரியாக்ட் பண்ணனும்...எல்லாத்துக்கும் மேல இதை செய்ய அறிவும் அனுபவமும்  வேணும். உங்களுக்கு நான் சொன்ன எந்த க்வாலிட்டீஸ்ஸும் கிடையாது. கிளையன்ட் யாருன்னு சொன்னா நானே ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பாக்கிறேன்” என்றாள் சந்தியா.

 

“கிளையன்ட்டா?” அவள் சொல்வதை கேட்டு சிரித்து விட்டு, “ நீங்க கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்னு  சத்தியம் பண்ணுங்க. அப்போ தான் சொல்லுவேன்“ என்றான் சிவா.

 

“அஸ்க்கு பிஸ்க்கு...அதெல்லாம் முடியாது. யாருன்னு சொல்லுங்க….அப்புறம்  பாக்கலாம்.”, என்றாள்  சந்தியா.

 

“சிஸ்டர்….இது என் வாழ்க்கை பிரிச்சனை… ப்ளீஸ்...கொஞ்சம் இரக்கம் காட்டுங்க. ஏற்கனவே பண்ண சொதப்பல்ல பஞ்ச் பாண்டியன் ஆளுங்க எந்த நேரம் அட்டாக் பண்ணுவாங்களோன்னு பயத்தில இருக்கேன்“, சிவா கெஞ்சினான். அப்போது அவன் நின்று பேசிக் கொண்டிருந்த மருத்துவமனையின் எதிரில்  உள்ள  பி.சி.ஓவிற்கு சற்று தொலைவில்  சில   ரவுடிகள் உருட்டு கட்டையுடன் வருவதை பார்த்தான் . அதில் ஒருவன் கையில் புகைப்படத்தை வைத்துக் கொண்டு சிவாவை கைகாட்டி அருகிலிருந்தவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதை பார்த்து  நடுங்கி விட்டான். பயத்தில் வேர்த்து விருவிருக்க வேகமாக முதுகை காண்பித்த படி திரும்பிக் கொண்ட சிவா, சாவு பயத்தில் சந்தியாவிடம்,

 

 “சிஸ்டர் ஒரு வேளை….” என்று சொல்லும் போதே அவன் நெஞ்சு அடைத்தது. இருந்தாலும் சிரமப்பட்டு தொடர்ந்தான். “ஒரு வேளை இந்த தர்ம யுத்தத்தில  நான் செத்துட்டா நட்புக்காக உயிர் மாய்த்தான் சிவான்னு இந்த ஊரே  என்னை அண்ணாந்து பாக்கிற மாதிரி என்னோட திருவுருவ சிலையை  வெள்ள வேளேர்ன்னு பளிங்குல இளைத்து, நம்ம ஊரு நால்வழி சாலை நடுவுல  வைக்க கார்த்திக்கிட்ட சொல்லிடுங்க” என்று மிகவும் உணர்சசி பூர்வமாக சொல்ல,

 

“தளபதி” என்று சொன்னவள் மெதுவாக தன் அப்பாவை பார்க்க அவரோ சதாசிவத்திடம் ஆர்வமாக தனது இராணுவ அனுபவங்களை விவரித்துக் கொண்டிருந்தார். “தளபதி பட கிளைமாக்ஸ்ல கூட நான் இந்த அளவுக்கு பீல் பண்ணலை. அந்தளவுக்கு..“ என குரலில் கரிசனத்தை காண்பித்து அவள் சொல்லும் போதே  இருமல் வந்தது.

 

“சிஸ்டர்...எனக்காக... நீங்க இவ்வளோ சிரமப்பட்டு” அவள் இரக்கப்படுவதை கண்டு நெகிழ்ந்தான் சிவா.

 

“அதெல்லாம் இல்லை. நான் பேசியே தீருவேன்…”  என அருகில் இருந்த வெதுவெதுப்பான நீரை  ஒரு மடக்கு பருகி விட்டு,

 

“ப்ரோ...அந்த ரவுடிங்க சரியான சோம்பேறிங்களோ? காக்காக்கு பளிங்குல பப்ளிக் ரெஸ்ட் ரூம் கட்டி தரணும்ன்னு உங்க கடைசி ஆசையை தான் சொல்லிட்டீங்களே? பாதி ஆசைய சொல்றப்பவே ஆளை காலி பண்ணனும். ஹாலிவுட் படத்துல எல்லாம் கன் வச்சு குருவிய சுடுற மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு சுட்டு போட்டு போயிகிட்டே இருப்பாங்க. ப்ச்...நம்ம ரவுடிங்க தான் இன்னும் உருட்டு கட்டையும், அருவாளும்  தூக்கிகிட்டு…..சை நாடு எப்போ தான் முன்னேறுமோ?“ என்று அலுத்துக் கொண்டாள் சந்தியா.

 

அவள் பேச்சில் அதிர்ந்த சிவாவை மேலும் அதிர வைக்க அவனை சுற்றி வளைத்தது அந்த வன்முறை கும்பல். அதில் ஒருவன் கையில் வைத்திருந்த புகைப்படத்தை காண்பித்து,

 

“டேய்...இவனை இந்தப் பக்கம் பாத்தியா?” என கேட்க அந்த புகைப்படத்தில் இருந்தது  சிவா தப்பாக கடத்தி வந்த ஆள். அவன் தான்...அவனே தான்.  ஆமாம் என்றும் சொல்ல முடியாமல் இல்லை என்றும் சொல்ல முடியாமல் பீதியில் பேந்த பேந்த சிவா முழிக்க,

 

“டேய் வாயை திறந்து சொல்லுடாங்கிறேன்...தட்டுனா தான் சொல்லுவியோ ” என அவன் சட்டையை கொத்தாக பிடித்தான் அந்த முரட்டு தடியன். சற்று சுதாரித்த சிவா,

 

“எனக்கு சத்தியமா தெரியாதுங்க அண்ணா” கெஞ்சினான்.

 

“டேய் நான் உனக்கு அண்ணனா.. அப்படியே போட்டேனா” என முஷ்டியை மடக்கி அவன் முகத்தில் குத்தவது போல மிரட்ட,

 

“சாரிங்க....உங்களைப் பாத்ததும் சின்ன வயசுல காணாம போன என் அண்ணன் நியாபகம் வந்திடுச்சு” என்று மிகவும் வருத்தத்துடன் சிவா சொல்ல,

 

அவன் சட்டையை பிடித்த முரட்டு மனிதனின் மனது கனிந்தது. சிவாவின் சுருங்கிய சட்டையை சீர்படுத்தி விட்ட படி   கண் கலங்கி போய் தன் நெஞ்சை பிடித்த அவன், ஏக்கத்துடன் சிவாவை பார்த்த படி நின்றான்.

 

தென்பாண்டி சீமையிலே

தேரோடும் வீதியிலே

மான் போல வந்தவனை

யார் அடித்தாரோ யார் அடித்தாரோ

 

அங்கே சில நொடி மவுனம். அந்த ரவுடியின் முகத்தில் உணர்ச்சி போராட்டத்தை பார்த்து அருகிலிருந்தவன்  “அண்ணே இவன் தான் சின்ன வயசுல காணாம போன உங்க தம்பியா? “ என ஆர்வமாய் கேட்க,

 

“ப்ச்....இவனா….” என்று சிவாவை வேற்று கிரகவாசி போல ஏளனமாக ஏற இறங்க ஒரு மாதிரி பார்த்து விட்டு “என் தம்பி தங்க கம்பி மாதிரி இருப்பான்டா” என்றான் பெருமையாக.  பின், தனது கூட்டாளிகளிடம் திரும்பி  “இருந்தாலும், காணாம போன என் தம்பியை நியாபகப்படுத்தி என் நெஞ்சை தொட்டுட்டான். பாக்க நல்லவனா தெரியுது.. விட்டுடலாம்” என்று  கட்டளை பிறப்பிக்க அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

 

“ஆமா...இவரு நடிகர் சூர்யா, அவரு தம்பி கார்த்தியை தேடுறாராம். என்னை பாத்தா உனக்கு அவதார் பட அவதாரமாட்டம் தெரியுதா?   நல்ல வேளைக்கு, இவன் எமோஷனல் ஆகி அண்ணன்னு சொல்லி என்  சொத்துல பங்கு கேக்காம இருந்தானே! டேய் சிவா, ஆபத்தில் உதவுபவன்  உண்மையான நண்பனோ இல்லையோ, ஆபத்தில் சிக்க வைப்பவன் உன் நண்பன்!” என்று நொந்து கொண்டவன் கையில் இன்னும்   ரிசீவரை வைத்துக் கொண்டிருந்ததை கவனித்து, “ஹலோ சிஸ்டர் இன்னும் லைன்ல இருக்கீங்களா” வினவினான் சிவா. அத்தனை நேரம் அங்கு நடந்த பேச்சு வார்த்தையை அமைதியாக கேட்டுக் கொண்டு  இருந்த சந்தியா,

 

“தென்பாண்டி சீமையிலே” என்று பாட ஆரம்பிக்க  இருமல் வர தொடர்ந்து பாடாமல் நிறுத்தி விட்டாள் சந்தியா.

 

“சிஸ்டர் இதை நான் கேக்குறதுக்கு அவனுங்க என்னை சாகடிச்சிருக்கலாம்” என்று அவன் நொந்து போய் சொல்ல,

 

சிரித்து விட்ட சந்தியா, “எப்படி சாகடிப்பாங்க? அவங்க உங்களை ரொம்ப நல்லவன்னு  சொல்லிட்டாங்களே.“ என்ற நடிகர் வடிவேல் போல சொல்லி விட்டு, “சரி நீங்க என்னத்த  ப்ளான் பண்ணி  சொதப்பி இப்படி ரவுடிங்க எல்லாம் துரத்துறாங்க?” என கேட்டு நச்சரித்து  கார்த்திக் அவனிடம் பேசிய விஷயத்தை எல்லாம் கரந்தாள்.

 

“சரி...நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன். ப்ராமிஸ்” என  உறுதியளித்தாள்.  

 

சிவாவிடம் பேசி விட்டு போனை வைத்தவளிடம் மது சதாசிவத்துடன் அன்பு இல்லத்திற்கு சென்று வந்ததை சொன்னாள்.  சந்தியாவுடன் அன்பு இல்லத்திற்கு சென்ற போது அவர்கள் இருவரும் சேர்ந்து பெயர் சூட்டிய குழந்தை  ஹர்ஷினியின் புகழ் பாடிக் கொண்டிருந்தாள். அவள் விழி மலர சொல்வதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள் சந்தியா.

 

“ஹர்ஷினிக்கு டூ டைனியா குட்டி குட்டியா அழகா பட்டு பாவாடை சட்டை வாங்கினேன். அதை போடக்கூடாதுன்னு  சோடா புட்டி தாத்தா சொல்லிட்டாரு” என்றாள் மது கவலையுடன்.

 

“ஏன்?”, சந்தியா வினவ,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.