(Reading time: 60 - 120 minutes)

வன் சொல்வதை யோசிக்காமல், “நேத்து சொல்லிக் கொடுத்ததை பிலிப் கேம்ல வீடியோ ரிகார்ட் பண்ணியிருக்கேன். போன்ல பேஸ் டைம் போடுறியா. காமிக்கிறேன்” என்றாள் ஆர்வம் கலந்த குரலில்.

 

“இப்போ ட்ரைவ் பண்றேன் மொட்டை. பேஸ் டைம் போட முடியாது. ஆனா நீ வீடியோ பண்ற அளவுக்கு இருந்ததாம்மா அந்த கிளாஸ்?”

 

“பின்ன! செம காமெடி. அதான் வீடியோ பண்ணேன். ஆக்ச்சுவலி, நான் அப்ப சொன்னேன்ல ஹர்ஷினி பாப்பா….அதுக்கு கைல கொசு கடிச்சு புண்ணாகி இருந்ததை பாக்க பாவமா இருந்தது தெரியுமா???...நாம வீட்டில எவ்வளோ சுகமா ஏசி போட்டு தூங்குறோம். பிறந்து அஞ்சு நாள் கூட ஆகாத குழந்தை கஷ்டப்படுதேன்னு நினச்சு தூக்கமே வரலை. அப்போ தான் நிரு கால் பண்ணான்.அவன் பேசுன தமிழ், அய்யோ….கவலை மறந்து சிரிச்சேன்! ஹி மேட் மை டே!  “ என்றாள் மது சந்தோஷமாக. ஹர்ஷினி பற்றி பேசும் போதெல்லாம் ஸ்விட்சு போட்டது போல அவள் குரல் கொஞ்சு குரலாகி விடும். அதை ரசித்தவன், அதன் பின் நிரஞ்சனிடம் பேசியது அவன் கணித்த படியே அவளுக்கு இனிய அனுபவமானதை நினைத்து குதூகலித்தான்.

 

“டேய் நிரு காமெடி பண்ணியாவது இம்ப்ரஸ் பண்ணுடா. இல்லாட்டி மொட்டை என்னை கல்யாணம் பண்ண சொல்லி இம்சிப்பா” மானசீகமாக நிரஞ்சனிடம் கெஞ்சினான்.

 

“ஹம்….மம்மி, டாடிக்கு சொல்லிடுறியா? இங்க வந்துட்டேன்னு” என கார்த்திக் கேட்கும் போதே,

 

“காதி, கேளு... கேளு… நிரு பேசுனதை ப்ளே பண்றேன்” என்று ஆர்வமாக சொல்லிக் கொண்டே, அவள் பதிந்து வைத்த பதிப்பை போட்டாள்.

 

நிரு: நீராறு  கல்லெடுத்த

 

மது:  அய்யோ...கல்லா… ஓ  மை காட்….மதுவின் சிரிப்பு சத்தம்… இப்படி பாடுனீங்க கல்லெடுத்து  அடிப்பாங்க. ‘கடலெடுத்த’ ன்னு சொல்லு…

 

இப்படி அன்று நடந்தவைகளை கேட்டு கார்த்திக்கும் மறுமுனையில் கேட்டு சிரித்தான்.

 

மதுவிடம் பேசி முடித்த பின், மறுபடியும் சிவாவை தொடர்பு கொள்ள அவன் எடுக்கவில்லை. “ரெஸ்பான்ஸ் சரியில்லையே. டேய் சிவா வழக்கம் போல இந்த ப்ளானையும் சொதப்பிட்டியா? இவன் ஈமெயில்ல நம்பி மாமாகிட்ட நாளைக்கு அந்த பாண்டியனை டீல் பண்ண சொன்னேனே!” என மனதிற்குள் புலம்பினான்.

 

“யுவர் டெஸ்டினேஷன் இஸ் ஆன் தி ரைட்” என அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியை குத்து மதிப்பாக காட்டி  சரியாக தவறான இடத்தை கண்டுபிடித்து சொன்னது  ஜிபிஸ் கருவி. இதற்கு மேல் எந்திரத்தால் யோசிக்க முடியாது என்று அங்கிருந்த அடையாளங்களை வைத்து அந்த பெரிய அடுக்கு குடியிருப்பு பகுதியின் பார்க்கிங் லாட்டில்  காரை நிறுத்தி விட்டு, தான் தேடி வந்த வீட்டை கண்டுபிடித்து அழைப்பு மணியை அழுத்தினான். கதவை திறந்தவரிடம்,

 

“ஹலோ, இது மிஸஸ். பூமா குணபாலன் வீடு தானே” என கேட்க,

 

“ம்…..”, என தலையாட்டிக் கொண்டே கார்த்திக்கை யோசனையோடு பார்த்த அந்த நபரிடம்,

 

“ஹாய்...ஐ அம் கார்த்திக்…..கார்த்திக் சதாசிவம்” , சிநேகமாய் சிரித்த படி கைகுலுக்க கையை நீட்டினான்.

 

அந்த நபரோ அவனை  யாரென தெரியாதது போல திரு திருவென முழித்தவாறு  சந்தேகப் பார்வை பார்க்க,

 

“ஊப்ப்ஸ்… முக்கியமான விசயத்தை சொல்லாம விட்டுட்டேனா..ஐ அம் சந்தியாஸ் பாஸ். அவ பூமாக்காவுக்கு ஸ்நாக்ஸ் குடுத்து…”

 

கார்த்திக் விளக்கும் போதே அவனுக்கு புரிந்து விட, சந்தேகப் பார்வை சிநேகப் பார்வையாகி,

 

“ஓ...எஸ்...எஸ்..ஐ அம் சாரி. நீங்க இப்படி திடீர்னு வந்து நிப்பீங்கன்னு நினைக்கவே இல்லை. வாங்க வாங்க. ஐ அம்  குணா. பூமாஸ் ஹஸ்பன்ட் நைஸ் டு மீட் யு. “ என்று புன்முறுவலுடன்  விசாரித்து கைகுலுக்கி வரவேற்றான், குணா. அவனுக்கு நன்றி சொல்லி விட்டு நலம்  விசாரித்துக் கொண்டே உள்ளே வந்த கார்த்திக்கின் நாசியை பதம் பார்த்தது கருகிய வாசனை. “என்னது எதுவும்  கருகிடுச்சா?” கேட்டான் கார்த்திக்.

 

“ஆமா. இன்னும் பூமா தூங்குறா. சரி நானே ப்ரேக் பாஸ்ட் பண்ணலாம்னு பாத்தேன். ஆம்லெட் சொதப்பிடுச்சு”,  உச்சுக் கொட்டிக் கொண்டே சொன்னான் குணா.

 

“நீங்க சமைத்து பழக்கம் இல்லையா...இப்படி அல்லாடுறீங்க. நான் ஹெல்ப் பண்ணவா?”  என உதவ முன்வந்த  கார்த்திக்கிடம்,

 

“இப்போ தான் பேபி ஸ்டெப்ஸ் வைச்சுகிட்டு இருக்கேன். உங்களை செய்ய  விட்டு எப்படி கத்துக்க முடியும்? உங்களுக்கு செய்து கொடுத்து தான் கத்துக்கிடணும்” என்று அரிய  தத்துவத்தை உதிர்த்து அவன் உதவியை நிராகரித்த குணா, மேலும்,

 

“நீங்க சாப்பிட்டீங்களா...வாங்க உங்களுக்கு ஒரு ஆம்லெட் போடுறேன்”  என்று தன்  சமையல் திறமைக்கு ஆராய்ச்சி எலி கிடைத்த ஆர்வத்தில்  கேட்க,  பீதியான கார்த்திக்,

 

“அய்யோ…”   என பதற,

 

“என்ன ஆச்சு?” , குணா புரியாமல் கேட்க,

 

“இல்ல. சாப்டேன்...நிறைய சாப்ட்டேன்…அதுவே நெஞ்சுக்குள்ளே  இருக்கு அதான்” என்று நெஞ்சை தடவிய படி சொல்லி சமாளித்துபடி வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

 

குணாவோ  விடாமல், “ஓ….இருங்க அதுக்கு இஞ்சி டீ போடுறேன்” என்று சமையல் அறைக்குள் போனான். சமையலறை வீட்டு  வரவேற்பறையின் எதிரே, திறந்த பெட்டி போல் அமைக்கப் பட்டிருந்ததால், சமையலறையில் நின்று கொண்டே சோபாவில் அமர்ந்திருந்த கார்த்திக்குடன்  பேசுவது குணாவிற்கு எளிதாக இருந்தது.

 

“இந்த மனுஷன் ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லையா” என்று எண்ணிக் கொண்ட கார்த்திக்,

 

“அய்யோ...வேண்டாம் இருக்கட்டும்...கொஞ்சம் வயிறை காயப்போட்டா பெட்டராகிடும்”

 

“ஓ….அதுவும் சரிதான். அப்போ தான் லஞ்ச் நல்லா சாப்பிடுவீங்க. இன்னக்கு ஒரு புது ரிசிபி பாத்து வைச்சேன். நீங்க கட்டாயம் சாப்பிட்டு பாத்து என் சமையல் திறமைய பத்தி சொல்லுங்க” என்றான் குணா கண்களில் ஆர்வம் மின்ன.

 

“அய்யோ...சீக்கிரம் இந்த இடத்தை விட்டு காலி பண்ணியாகனும். அநியாயமா சிக்கிடக் கூடாது” மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான் கார்த்திக்.

 

“அப்புறம், சந்தியா உங்க ப்ரதர் பேரு ஏதோ  வசூல் ராஜான்னு சொன்னாளே? அவங்களும்  உங்ககூட தான் தங்கியிருக்காங்களா?”, என்று அந்த சூழலிலும்  தன் காரியத்தில் கண்ணாய் கேட்டான்.

 

“அட..சந்தியா உங்ககிட்டயும் வசூல் ராஜான்னு சொல்லி வச்சிருக்காளா? அவன் பேரு சரண், அவ தான் சினிமா பைத்தியமே, இவன் டாக்டர் வேற, அதான் வசூல் ராஜான்னு கிண்டல் பண்ணுவா ...அவன் இவளை  மந்தின்னு கிண்டல் பண்ணுவான். வால்த்தனம் பண்றதுல ஒருத்தருக்கு மிச்சமா ஒருத்தர் இருப்பாங்க. எங்க கல்யாணத்தப்போ இவங்க ரெண்டு பேரும் அடிச்ச லூட்டி! ப்பா...இதுல பூமா வளைகாப்புக்கு இரண்டு பேரும் சேந்து டான்ஸ் வேற ஆட போறாங்களாம். அந்த குட்டி சா….” என பேசிக் கொண்டே கார்த்திக் அமர்ந்திருந்த சோபாவின் மறுமுனையில் அமர்ந்தவன்  சொல்ல வந்த குட்டி சாத்தான் என்ற வார்த்தை முழுவதுமாக முடிக்காமல் நிறுத்தி விட்டு ஏதோ நினைவு வந்தவனாய், “நீங்க தான அவள  பேய்ன்னு சொன்னது?”

 

சரணும் சந்தியாவும் ஜோடியாக ஆடுவதை நினைத்து பார்த்த கார்த்திக்கின் காதில் ஏற்கனவே புகை வந்து கொண்டிருந்தது. அது அங்கே நிலவிய தீய்ந்த வாசனையை மேலும் அதிகரித்து போன்று தோன்றியது!

 

“ம்ம்ம்...ஆமா" குனிந்து விரல்களை கோர்த்தும் பிரித்தும் விளையாடிக் கொண்டே வேண்டா வெறுப்பாய்   கார்த்திக் சொல்ல,

 

அவன் நிலை  புரியாத குணா, “அதெப்படி அவ வேலைக்கு வந்த முதல் நாளே கரக்டா கணிச்சீங்க. ?” என அவன் முகத்தை பார்த்த படி வியப்பாக கேட்க,

 

அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வான்? முதல் நாளே சுனாமி போல அடித்து இழுத்துப் போய் விட்டாளே!  பேஸ்புக்கில் ஆரம்பித்து  பூங்கொத்து,  போட்டோ, பைக், அர்ஜுன், மருத்துவமனை, காபி ஷாப், சர்ப்ரைஸ் பார்ட்டி...என அவள் மென்மை, திமிர், கோபம், ஏக்கம், சோகம், சிரிப்பு, பாசம், பயம், வேகம், நிதானம், ஆர்வம், அலட்சியம், சாதுர்யம், எல்லாவற்றிக்கும் மேல் அவனை சீண்டி பார்த்த அவள் குறும்பு, தைரியம், துணிச்சல் என அனைத்தையும் ஒரே நாளில் பார்த்து விட்டானே….”என் பேய் பற்றி எனக்கு தெரியாதா?” என உள்ளத்தின் ஓரத்தில் ஒலித்த குரலை சொல்ல தலை நிமிர்ந்து குணாவை பார்த்தவனின்  உதடுகள், வாய் திறந்து மொழியாக உதிர்க்க எண்ணமின்றி கட்டுண்டு கிடந்தது! எப்படி சொல்ல? அந்த உரிமையை அவள் அளிக்கவில்லையே ஏங்கியது அவன் நெஞ்சம்.  அவன்  மாற்று விடை தேடுவதற்குள்  தூக்கம் களைந்து எழுந்து  வந்த பூமா அங்கு வந்து நின்றாள்.  அவளிடம் குணா  கார்த்திக்கை அறிமுகம் செய்ய பேச்சு திசை மாறியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.