(Reading time: 60 - 120 minutes)

 

தே நேரம் கண்களை திறக்க முடியாமல் மூடியவாறு  சோப்பை தேடிய வடிவின் கைகளில் விழுவிழுவென தென்பட, என்னவென்று பார்க்க லேசாக கண்ணை திறந்து பார்த்து அரண்டு, பதறி போய் கையில் எடுத்ததை தூக்கி விசிறியடித்து,  “ப…..பா…” என கத்திக் கொண்டே அவசர அவசரமாக துண்டை சுற்றிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியில் ஓடி வர கதவின்  அருகில் இருந்த வெந்நீர் பானைக்குள் காலை விட்டாள். “அய்யோ...அம்மா”  என சூடு பொறுக்காமல் வெளியே எடுக்க முற்படும் போது கால் பானையை  இடற  வெந்நீர்  அவள் கால்களில் கொட்டியது. “ஆ...ஆ..சுடுது..“ அலறிய  படி  கையை உதறிக் கொண்டு நொண்டி அடித்து குதித்தாள்.  “பா….பா..ஆ...” என கத்திக் கொண்டே வலியோடும் வேதனையோடும் திணறிக் கொண்டிருந்ததை  பார்த்து லக்ஷ்மியும் ஸ்ரீமாவும் அவளை நோக்கி ஓட, சந்தியாவோ வடிவு துண்டைக் கட்டிக் கொண்டு கைய காலை ஆட்டி திணறுவதை  பார்த்து  “முருகா! என்னே உன் திருவிளையாடல்!  பீப்பா உன்    டவல் டான்ஸ்க்கு  பாட்டு போடும் டி.ஜெ. நான்   என்று விட்டு,

 

மலை  மலை மலை  மலை

மலை மருதமலை

 

என முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்  சந்தியா. “என்ன சத்தம்?” கேட்டவாறு கொல்லைப்புறம் நோக்கி விரைந்து வந்தார் தன்ராஜ். “மலை மருதமலை” என பாடிக்கொண்டிருந்த சந்தியா “ம..மருதமலை “ என்று சொல்லி இருமிவிட்டு, மருதமலை முருகன்ட்ட அத்தைக்காக  கும்மிட்டுகிட்டு இருந்தேன்” என்றாள்.

 

கால் இரண்டும் பொசுங்கியதால் நடக்க முடியாமல் திணறிய வடிவை லக்ஷ்மி, தன்ராஜ் மற்றும் சில உறவினர்கள்  குண்டுக்கட்டாக தூக்கினர். வரும் வழியிலே  “பா….பா….ம்….ம்ம்ப்பூ….குளிக்கிற இடத்தில பாம்பூ ” அலறினாள் வடிவு. அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, குளியலறையைத்  துலாவி பார்க்க அதில் ஒன்றும் தென்படவில்லை.

 

மற்றொரு அறையில், ரகசியமாக விளையாட்டு பாம்பை தன் அண்டாகாகச பெட்டிக்குள் வைத்த சந்தியாவிடம்  “இந்த பாம்பு நிஜ பாம்பு மாதிரி தத்ரூபமா இருக்குடி. நான் இதை பாத்ரூம்க்குள்ள வச்சு எடுக்குரதுகுள்ள அப்பாடி…” என நீட்டி முழக்கியவள்,

 

“நீயும் பூமாவும் எப்படி தான் இந்த மாறி  சேட்டை எல்லாம் அசால்ட்டா செய்யுறீங்களோ தெரியலை.” சகோதரிகளை  மெச்சினாள் ஸ்ரீமா.

 

“ம்...பீப்பா வீட்டுக்காரர் கிணத்துல குளிக்க போனப்போ பாம்பு கடிச்சு செத்தாருன்னு அதுக்கு  பாம்புன்னா  பயம். நான் பயங்காட்ட மட்டும் தான் செய்தேன். காலை பதம் பாத்ததெல்லாம் எம்பெருமான் முருகன் செயல்.  அம்மாவை நோகடிக்கிறவங்களை  சும்மா விடுவானா?“ என்றாள் சந்தியா.

 

முதலுதவி செய்து, மெல்லிய பருத்தி சேலையை வடிவு மீது போர்த்தி  விட்டார் லக்ஷ்மி. “பாம்பு ...பாம்பு.. ” என இன்னமும் கத்திக் கொண்டிருந்தவளிடம், “பாம்பு பாம்புன்னு  அதுக்காக இப்படியா  கொதிக்கிற வெந்நீல காலை விடுவ. என்னம்மா  காலு   வெந்து போய் கிடக்கு” என கரிசனம்  காட்டினார் லக்ஷ்மி.

 

“பாத்ரூம்ல பாம்பெல்லாம் இல்லை. நல்லா பாத்தாச்சு. இவங்க வேற ஏதையோ பாத்து பயந்துடாங்கன்னு நினைக்கிறேன்” என்றார் ஸ்ரீமாவின் கணவர். பின், தன்ராஜ், “பெத்தவ வேதனைல கிடக்கிறா. என்னன்னு கூட எட்டிப் பாக்காம பாண்டியன் என்ன பண்றான் ?”, என  வினவ

 

 “அவனுக்கு என்ன செய்யுதோ...எழுப்ப எழுப்ப எழுந்தரிக்கவே மாட்டேன்றான்  என் தங்கம்! என்னை இப்படி பாத்தா ரத்தக் கண்ணீர் வடிச்சிருப்பான். மாமன் மகளுக்கே  ஓனியம் பாக்குறேன்னு ஆஸ்பத்திரியிலே உயிரா கிடந்தது என் புள்ள. அம்மைய அம்போன்னு விடுமா? அதுக்கு  என்ன ஆச்சுன்னே தெரியலை! “ என்றவள், லக்ஷ்மியிடம் திரும்பி, “ஏன் மயினி நீங்க வெந்நீய  வழில வச்சிட்டு எப்படா நான் விழுவேன் காத்துக்கிட்டு  இருந்தீகளாக்கும்” கேள்வியிலே விஷத்தை கக்கினாள் வடிவு.

 

அதைக் கேட்டவுடன், “நீ ஏம்மா பாதையில வெந்நீய வெச்ச.” என்று தன்ராஜ் மனைவியிடம் சலித்துக் கொள்ள, அதற்கு பதிலளிக்க வந்த லக்ஷ்மியை  “விடு. விடு. இப்படியே பேச்சை வளக்காத. ஆக வேண்டியதை பாப்போம்.” என்று தன்ராஜ் தடுக்க,  வடிவுக்கு உள்ளூர  திருப்தி.

 

றவினர்கள் எல்லோரும் ஊருக்கு  கிளம்பி செல்ல, வெந்த புண்ணால் நொந்து இடியாப்பம் ஆகிப் போனாள் வடிவு. ஆனாலும் விடாமல் லக்ஷ்மியை வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக பாண்டியனுக்கு மாலை நான்கு மணி வாக்கில் முழிப்பு வந்து எழுந்து வந்தவன் வடிவின் நிலைமை அறிந்து பார்க்க ஓடினான்.

 

அவன் விழித்தது தெரிந்ததும் வேகமாக  சிவாவை அழைத்தாள் சந்தியா.

 

“ப்ரோ டவுசர் அதுக்குள்ள முழிச்சிட்டான்”, வேகமாக சொன்னாள் சந்தியா

 

“அதுக்குள்ளாவா? ஒரு வேளை கார்த்திக் கலக்க சொன்ன ஒரு பாட்டில் காப் சிரப்ல கால் பாட்டில் நான் குடிச்சதுனால இருக்குமோ? “ கேட்டான் சிவா.

 

“மில்க் ஷேக்ல முழுசா கலக்கலையா? ஏன் நீங்க குடிச்சீங்க? “ எரிச்சலுடன் கேட்டாள் சந்தியா.

 

“சிஸ்டர் கார்த்திக் இதுல சொதப்புனா மர்டர் கேசாகிடும்ன்னு பயம் காட்டினான். அதான். சரி விடுங்க. எனக்கு ப்ளான் B யும் சொல்லியிருக்கான். அதை செய்யுறேன். “ என்றான் சிவா.

 

“அதையும் பாதி முழுங்கிட்டு செய்யாதீங்க. சொதப்புனா  பேதி காபி தான்“ எரிச்சலாய் எச்சரித்தாள் சந்தியா.

 

“அய்யோ..சிஸ்டர். பஞ்ச் பாண்டியன் ஆளுங்களை பாத்த பீதிலே ஆட்டோமடிக்கா கலங்கிகிட்டு இருக்கு. இதுல நீங்க வேற. ஓகே சிஸ்டர். நான் கார்த்திக்கோட  மாமாகிட்ட இது விஷயமா பேசணும். வச்சிடுறேன்.” என்று இணைப்பை துண்டித்து அடுத்த வேலைக்கு ஆயத்தமானான்.

 

டிவை பார்க்க வந்த பாண்டியன்  தாயை பார்த்து வருந்தியவனாய், “என்ன ஆத்தா காலை இப்படி புண்ணாக்கி வச்சிருக்க. கண்ணை திறந்து நடக்க மாட்டியா? டாக்டர்ட்ட கூட்டுப் போகவா?” என பாசத்தை கோபமாக வெளிப்படுத்தி கேட்க,

 

“அதெல்லாம் காலைலே காமிச்சாச்சு. நீ ஏன் இம்முட்டு நேரம் தூங்கிபுட்ட? உடம்புக்கு எதுவும் செய்யுதாயா?“ பரிவுடன் கேட்டாள்  வடிவு. “அதான்  ஆத்தா எனக்கும் மர்மமா இருக்கு. ஒரு நாளும் இம்முட்டு நேரம் தூங்கியது கிடையாது. உடம்புக்கெல்லாம் ஒன்னும் இல்ல. பசி தான் வயித்தை கிள்ளுது. சாப்பிட்டு வந்துடுறேன்.” என கிளம்பினான் பாண்டியன்.

 

“அதுக்கு முன்னாடி உனக்கு  முக்கியமான விஷயம் சொல்லணும். நாம மோசம் போயிட்டோம்யா.....உனக்கு சந்தியாவை குடுக்க மாட்டானாம் அந்த பட்டாளத்துக்காரன். “ பதை பதைத்தாள் வடிவு.

 

“என்னது? “ கோபமாய் கர்ஜித்தான் பாண்டியன்.

 

மெரிக்காவின் பாஸ்டன் நகரின்  லோகன் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினான் கார்த்திக். ஞாயிறு அதிகாலை வந்திறங்கி, விமான நிலையத்தில் வாடகைக் காரை எடுத்து சூர்யா வீட்டிற்கு செல்ல நினைத்தவனின் கால்கள் அவன் பேச்சைக் கேட்காமல் வேறு திசையில் அழுத்தியது..

 

காரை ஓட்டிய படியே பேசுவதற்காக காரில் அமைக்கப் பட்டிருந்த அவுட்லெட்டில் போனை இணைத்தவன், நிரஞ்சனை அழைத்தான். அவன் அழைப்பை எடுத்தவனிடம்,

 

“ஹாய் நிரு. நேத்து தமிழ் டியூஷன் எப்படி போச்சு? பீலிங் நெர்வஸ் ன்னு ட்வீட் பண்ணியிருந்த?”

 

“ம்... மது ஹேட் எ குட் லாப்...நல்லா சிரிச்சது” என்று  அலுத்துப் போய் சொன்னான் நிரஞ்சன்.

 

கார்த்திக் அதை கேட்டு சிரித்து விட்டு, “ப்ளீஸ் தமிழ்ல பேசு. நானும் சிரிக்கணும்” , கிண்டலடிக்க,

 

“ஐ டோன்ட் ஹேவ் லிங்விஸ்டிக் ஸ்கில்ஸ் (மொழித் திறன்) லைக் யு டு ” என்றான் நிரஞ்சன்.

 

“உன் கொஞ்சு தமிழ்ல பேசு. ஐ ஆம் சோ டவுன் டுடே...ப்ளீஸ் நானும் சிரிக்கிறேன்” என்று கெஞ்சினான் கார்த்திக்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.