(Reading time: 60 - 120 minutes)

ம்...ஹொவ் டு யு நோ?”

 

“அதான்ன  வெனாமஸ் வேர்ட்ஸ்ன்னு  நீ சொன்னது.”

 

“ம்…எஸ். ஐ அம் சோ ப்ரோக்கன். நான் சென்னை வரலை. நீ தனியா சமாளிச்சுடுவ தானே?”

 

“என்னை காழைன்னு சொல்லுது. இப்போ நீ?”

 

“காழையா? யு மீன் முரட்டுக் காளை? “ என்று கேட்டு விழுந்து விழுந்து சிரித்தவன் பின், “நோ வே...நீ சாப்ட் காளை. நான் சொன்னது கோழை… ஐ மீன் கவர்ட் ” சொல்லி மீண்டும் சிரித்தான்.

 

“வாட்டவர்...நான்  நீ வந்தா சென்னை வருது. இல்லாட்டி நோ”  என்று உறுதியாக சொன்னான் நிரஞ்சன்.

 

“நிரு ப்ளீஸ்...டோன்ட் சே நோ….உன்கிட்ட சொல்லியிருக்கேன் தான எங்களுக்கும் மது அப்பா வீட்டு ஆளுங்களுக்கும் ப்ரச்சனைன்னு. மது அப்பாவும் அவரு அக்காவும் சேந்துகிட்டு மது பேர்ல உள்ள சொத்துக்காக அவளுக்கு கார்டியன்ஷிப் எடுக்க எவ்வளோ ட்ரை பண்ணாங்க. சொத்துக்காக கொலையும் செய்வாங்கன்னு பயந்தது கூட  ஒரு காரணம் பாட்டி, அவளை பொத்தி பொத்தி வளத்ததுக்கு. மம்மி தான் எங்க தாத்தாவோட  பொலிடிக்கல் பவர் வைச்சு மூவ் பண்ணி மதுவை லீகலா ப்ரிச்சனை வராம மீட்டுக் குடுத்தாங்க. மது அப்பா வீட்டு ஆளுங்க கைக்கு சொத்து வர விடலைன்னு மம்மி மேல ஏகப்பட்ட கோபத்தில இருக்காங்க. அப்பப்போ ஏதாவது பேசி வம்பு பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இந்த மாதிரி சிக்கல் இருக்கிறதுனால தான் எங்க ஊரு பக்கம் உங்களை மீட் பண்ண ஏற்பாடு செய்து தரலை. சென்னைன்னா மாமாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா போதும். பாத்துப்பாங்க. உனக்கு இதை விட பெட்டர் சான்ஸ் கிடைக்காது. ப்ளீஸ் என்னால முடியாட்டினா நீ கண்டிப்பா போ. நான் எல்லாமே ரெடி பண்ணிட்டேன். ”  என்றான் கார்த்திக்.

 

“சோ ஸ்கேரி. மதுக்கு இவ்வளவு ஆபத்து இருக்குது?” பயத்துடன் கேட்டான் நிரஞ்சன்.

 

“மது உயிருக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அவ பேர்ல நேரடி சொத்து இல்லாத படி டாடி பாத்துக்கிட்டாங்க. மேஜர் ஆகிட்டா. சோ நோ ப்ராப்ளம். அந்த கடுப்புல தான் மம்மிகிட்ட  வம்பு இழுக்குறாங்க. சென்னைக்கு நான் வந்தாலும் வராட்டினாலும் நீ போ. இது உன் லைப்” என்று அவனுக்கு தெளிவு படுத்தி விட்டு கட்டளையிட்டான்   கார்த்திக்.

 

“என் லைப். அதான் கார்த்திக்  வரணும்ன்னு  நினைக்குது” என்று நிரஞ்சன் பிடித்த பிடியை விடாமல்.

 

கார்த்திக்காவது  மற்றவர்களுடன் தன் தேவைக்கு தகுந்து பேசுவான், பழகுவான். நிரஞ்சன் சட்டென்று பழகும் ரகம் கிடையாது. தனது சுயநலத்திற்காக அவன் எட்டு வருடக் காதலை கரை சேர்க்கும் முயற்சியில் பின் வாங்குகிறோமோ என்ற குற்ற உணர்ச்சி மனதை அரிக்க, அவனிருந்த மனநிலையில்,

 

“நிரு,  நான் ரிலாக்ஸ் ஆக டைம் வேணும். அடுத்த வீக்கென்ட்க்குள்ள சொல்லிடுறேன். “, என்று நிரஞ்சனை சமாதானப் படுத்தும் குரலில். பின் அவர்கள் தங்கள் மென்பொருள் வேலைகளை துரிதமாக ஆரம்பிப்பதை பற்றி பேசினர். கார்த்திக்கின் ஓய்வு நேரங்களை ஒரு நொடி விடாமல் பயன் படுத்தினால் தான் சிக்கல் இல்லாமல் அவர்கள் நினைத்த நேரத்தில் அதை வெளியிட முடியும் என்று அவர்கள் முன்னரே போட்டிருந்த திட்டப்படி வேலையை ஆரம்பிக்க முடிவு செய்தனர். போனை வைக்கும் முன்,

 

“நிரு, இந்த தடவையாவது மதுகிட்ட கொஞ்சம் மனுஷங்களை பத்தி பேசு… இல்லாட்டி பர்ட்ஸ் எப்படி அதோட ஜோடி சூஸ் பண்ணுதுன்னு இந்த மாதிரி அவளுக்கு பல்பு எரியுற மாதிரி ஏதாவது சொல்லு”, கெஞ்சினான்  கார்த்திக்.

 

“முந்தி ட்ரை பண்ணது. மது அதுக்கும்  சில்லியா ஏதாவது கேக்குது..நாம ஏன் அதை சொன்னது என் கையால நானே கன்னத்தில் போட்டுக்குது. ஆஞ்சு  வயசு பேபிகிட்ட இது பத்தி சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணும்” என்றான்  விரக்தியாய்…

 

“ஆஞ்சை நீ விடமாட்டியா….அ எழுத்து மேல உனக்கு என்ன கோபம்? அஞ்சு வயசுன்னு சொல்லு. சரி விஷயத்துக்கு வருவோம். அவள் இந்த மாதிரி எல்லாம் எக்ஸ்போஸ் ஆகலை நிரு. அவளுக்கு நீ அஞ்சு வயசு பிள்ளைக்கு சொல்லி குடுக்கிற மாதிரியே சொல்லி குடு. தப்பில்லையே. அவளும் வளரணும் தானே” என தன்னால் முடிந்த ஊக்கத்தை அளித்தான் கார்த்திக்.

 

நிரஞ்சனிடம் பேசி முடித்த போது நன்றாக விடிந்திருந்தது. நியூ ஜெர்சி மாகாண எல்லைக்குள் நுழைந்தான். அப்போது ஒரு சிறு ப்ரேக் எடுத்து காலை உணவை முடித்தவன், மணியை பார்த்தான். ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு மணி நேரப் பயணம் பாக்கி உள்ளது என அவனது ஜிபிஎஸ் எந்திரமாய் பெண் குரலில் சொல்ல, மறுபடியும் காரை ஓட்ட ஆரம்பித்தவன், இப்போது சிவாவை அழைத்தான். அவன் போனை எடுக்கவில்லை. பின் மதுவை அழைத்தான். போனை எடுத்த மது பொது விசாரிப்புக்கு பின்,

 

“காதி யு நோ வாட் அன்பு இல்லம் போனேன். ஹர்ஷினி இன்னக்கு…” என ஒரு அரை மணி நேரம் ஹர்ஷினி புகழ் பாட,

 

“யேய்..மொட்டை போதும். நேத்து ஹாஸ்பிட்டல் போனியா? என்ன சொல்றா உன் பேய்? பார்ம்க்கு வந்துட்டாளா?”, கேட்டான் கார்த்திக்.

 

“சந்தியா என் பிரண்ட். பேய் இல்லை. உனக்கு தான்  பேய்” என்றாள் மது.

 

“சரி, என் பேய் என்ன சொன்னா?”, கேட்டான் கார்த்திக்.

 

“நானும் அவளும் அன்பு இல்லத்தில பெண் குழந்தைகளுக்கு  தீபாவளிக்கு பட்டு பாவாடை எடுத்து கொடுக்க ப்ளான் பண்ணியிருக்கோம். நம்ம கம்பெனி வழியா ஸ்பான்சர் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். உனக்கு ஓகே தான?”

 

“இப்போதைக்கு அது உன் கம்பெனி. உன் முடிவு. ஆனா, பசங்களை அம்போன்னு விட்டுவீங்களா? ஆண் பிழைப்பு இப்படி ஆகணுமா? என் பேய் தான் கழட்டி விட்டான்னா ... நீயுமா” கேட்டான்.

 

“அதான்ன, பாவம் பசங்க. ஆமா சந்தியா தான் இந்த ஐடியா கொடுத்தா. ஆனா பசங்களை விட்டுட்டா ”

 

“பொண்ணுன்னா பேயும் இரங்கும். பையன்னா  பேயும் இறக்கி விட்டுடும்” என்றான் விரக்தியாக.

 

“காதி, நீயே ஏதாவது ஐடியா கொடேன். பசங்களுக்கு ஏதாவது பண்ணலாம்”, கெஞ்சலாய்   ஆசையை வெளியிட ,

 

“ம்ம்….” என தான் யோசிப்பதை குரலில் காட்டி, சில நொடி தாமதத்திற்கு பின் , “எல்லாருக்கும் கேன் ஓப்பனர் வாங்கி கொடுக்க சொல்லு என் பேய்யை”, வம்புகென்றே  சொன்னான்.

 

“அது எதுக்கு?”, புரியாமல் கேட்டாள் மது.

 

“நீ சொல்லிப் பாரு தெரியும். சரி வேற என்ன பொதுச் சேவை எல்லாம்  பண்ணி நம்ம கம்பெனி கஜானாவை காலி பண்ண திட்டம் போட்டிருக்கா என் பேய்?” அந்த ‘என்’ என்னை விட்டு விடு என கதறும் அளவுக்கு அழுத்தம் கொடுத்து சொன்னான்.

 

“நீ ஏன் இன்னும் சந்தியாவை பத்தியே  கேக்குற? அதான் பழி வாங்கும் படலத்தை விட்டுட்ட தான?” , மூளைக்குள் விளக்கு எரிந்து  மதுவிற்கு சந்தேகம் வந்து விட்டது.

 

“இல்லை. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டேன்”, சாவகாசமாக சொன்னான் கார்த்திக்.

 

“என்னாச்சு டாம் க்ரூஸ்க்கு ? மறுபடியும் நம்பியராகியாச்சா”, நக்கலடித்தாள்.

 

“இப்போவும்  டாம் க்ரூஸ் தான். ஆனா, ஆண்டி ஹீரோ”

 

“சந்தியா ரொம்ப ஷார்ப். உனக்கு தான் நோஸ் கட் கிடைக்கும். வீணா ட்ரை பண்ணாத” நடந்தது எதுவும் தெரியாமல் வெகுளியாய்  மது எச்சரித்தாள்.

 

மது சொன்னவுடன் சூடு கண்ட பூனையான  அவன் மனது அதற்கு மேல் அவளைப் பற்றி கேட்காமல், “அதை விடு. உன் தமிழ் மாணவன் என்ன சொல்றான்?” என நிரஞ்சன் பேச்சை ஆரம்பித்தான்.

 

அதை கேட்டவுடன் “ஹ….ஹா….” என சிரிக்க ஆரம்பித்த மது, “அய்யோ….நிரு தமிழ்ல கொலை பண்ணிக்கிட்டு இருக்கான். பாவம் ஜீரா” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

“நீ...யும்” என இழுத்து விட்டு “ பாவம்  தான்”, என்று அவளுக்காக கரிசனப்பட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.