(Reading time: 32 - 63 minutes)

நான்கு நாட்களுக்குப் பிறகு இளவரசன் இனியாவின் ஹாஸ்பிடலிற்கு வெளியே காத்திருந்தான்.

இனியா ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் நேரத்தில் இளவரசன் போன் செய்திருந்தான்.

“என்ன சார் அதிசயமா இருக்கு”

“என்ன அதிசயமா இருக்கு”

“இல்ல. நீங்க இந்த டைம்ல கூப்பிடுறீங்களே. இந்த டைம்ல பொதுவா நீங்க உங்க ஆபிஸ்ல ரொம்ப பிஸியா இல்ல இருப்பீங்க. அதான்.”

“ஏய் ரொம்ப ஓட்டாதே டீ. எங்க. என் பிஸி செடுயூல் எல்லாம் உன்ன பார்க்கறதுக்கு முன்னாடி, என்னைக்கு உன்ன பார்த்தேனோ அதுக்கு அப்புறம் நான் எங்க ஒழுங்கா வேலை செஞ்சேன்”

“நீங்க தானே, சொன்னாங்க சொன்னாங்க.”

“பிபிசி ல தானே, கரெக்ட்டா சொல்வாங்க”

“சரி. நான் கிளம்ப போறேன். அதனால வச்சிடவா”

“கிளம்பு. அதுக்கு ஏன் வைக்கற”

“ஹலோ. நான் என் ஸ்கூட்டில போகணும், வண்டி ஓட்டிட்டே எப்படி பேசறதாம்”

“சரி வாயடிக்காத, உன் வண்டி வரைக்கும் வெளிய வர வரைக்கும் பேசு”

“ம்ம்ம். அந்த ரெண்டு நிமிசத்துல என்ன ஆகிட போகுதோ தெரியலையே”

“ஏய் ஏய் இந்த வார்த்தை எல்லாம் நீ சொல்லக் கூடாது. இளா இளா ப்ளீஸ் ரெண்டு நிமிஷம்னு கேட்டவ தானே நீ” என்று அவள் கேட்டதை போல் சொல்லி காண்பித்தான்.

“ஹலோ ஹலோ சிக்னல் கிடைக்கல இளா”

“ம்ம்ம். கிடைக்காது டீ”

சிரித்துக் கொண்டே வெளியே வந்தவள் வெளியே அவள் வண்டியின் பக்கம் அவன் நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தாள்.

போனை காதிலேயே வைத்துக் கொண்டே “என்ன நீங்க இங்க என்ன பண்றீங்க” என்றாள்.

“ஹேய் முதல்ல போனை வச்சிட்டு பேசு. நேர்ல வந்தவன் கிட்ட போன்ல பேசற”

அப்போது தான் அதை கவனித்தவள் சிறிது அசடு வழிந்து விட்டு திரும்ப வீரமாக “அது இருக்கட்டும். இங்க என்ன பண்றீங்க” என்றாள்.

“உனக்கு சிக்னல் கிடைக்கல இல்ல, அதான் நேர்லயே வந்துட்டேன்” என்றவாறு உல்லாசமாக சிரித்தான்.

“என்ன சார் ரொம்ப சந்தோசமா இருக்கறாப்ல இருக்கு”

“ஹ்ம்ம். மேடம பார்க்க வந்திருக்கேன் இல்ல, அதான்” என்றவாறு கண்ணடித்தான்.

உடனே இனியா சுற்றும் முற்றும் பார்த்தவாறு “என்ன இளா. பப்ளிக்ல இப்படி” என்று கண்டித்தாள்.

“ஏய் இப்ப அப்படி என்ன நான் பண்ணிட்டேன். ஹ்ம்ம் சொல்லு சொல்லு”

“ஹ்ஹ்ம்ம். இது சரி வராது. நான் கிளம்பறேன், நீங்க இங்கேயே தனியா நில்லுங்க”

“ஓகே ஓகே கூல். நாம இப்ப ஸ்ருதி வீட்டுக்கு போக போறோம்.”

“இல்ல இளா. இன்னொரு நாளைக்கு போகலாம். நான் வீட்டுல ஏதும் சொல்லலை”

“ஆனா நான் சொல்லிட்டேனே”

“என்ன. நீங்க சொல்லிட்டீங்களா”

“ம்ம்ம். நான் அத்தை, மாமா ரெண்டு பேர் கிட்டவும் பெர்மிஷன் வாங்கிட்டேனே”

“ஓஹோ” என்றவளின் குரல் மாறியது.

“என்னடா”

“இல்ல. அன்னைக்கு நான் அங்க ரொம்ப எமோசனலா பிஹேவ் பண்ணிட்டேன். அதான் ஒரு மாதிரி இருக்கு”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை டா. எனக்கென்னவோ அது சரியா தான் இருக்கும்னு தோணுது. இப்ப ஸ்ருதியோட பிஹேவியர்ல சேன்ஜஸ் இருக்குன்னு சிவா சொன்னான். சோ டோன்ட் வொர்ரி. ஓகே.”

“ஹ்ம்ம். என்ன சேன்ஜஸ் தெரியுதாம். வெளியில எங்கயாச்சும் போறாளா”

“இல்ல. வீட்டை விட்டு வெளியில எங்கயும் போகல. பட் முன்னைக்கு இப்ப அவ முகத்துல யோசனை தெரியுதாம், முன்ன எல்லாம் விரக்தி தான் அவ முகத்துல தெரியும். இப்ப கொஞ்சம் நல்லா கூட பேசறாளாம்”

“ஓ ஓகே.”

 வர்கள் ஸ்ருதியின் வீட்டிற்கு சென்ற போது ஸ்ருதியின் தாய் தான் அவர்களை வரவேற்றார். உடனே சிவாவும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

ஸ்ருதியின் அறைக்கு சென்ற போது அவள் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

இனியாவை பார்த்த அவள் கண்களில் ஏதோ அதிர்வு தோன்றுவதை போல் இருந்தது. அதை பார்த்த இனியாவிற்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அதைக் காணாதவளாக அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.

“ஹாய் ஸ்ருதி. எப்படியிருக்க”

பேச்சு வராமல் தவித்தவளாக “ம்ம்ம். நல்லாயிருக்கேன்” என்றாள்.

“சரி. என்ன படிச்சிட்டிருக்க”

“தி ஸ்கை இஸ் பாலிங், சிட்னி ஷெல்டன் புக்”

“ஓ. எப்படி இருக்கு.”

“ரொம்ப இண்டரெஸ்ட்டா இருக்கு. நிறைய மர்டர் நடந்திருக்கு. யார் செஞ்சதுன்னே தெரியலை. அதான் ஒரே அடியா படிச்சி முடிச்சிடனும்ன்னு தீவிரமா படிச்சிட்டிருக்கேன்”

ஸ்ருதி அவளை அறியாமலேயே இனியாவின் பேச்சில் ஒன்றி விட்டாள்.

மெதுமெதுவாக ஸ்ருதியிடம் க்ளோஸாக பேச ஆரம்பித்து விட்டனர்.

இனியா ஏதோ ஜோக் சொல்ல ஸ்ருதி சிரித்த சிரிப்பில் அங்கிருந்த எல்லோருமே அதிசயித்து விட்டனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.