(Reading time: 32 - 63 minutes)

ங்கு எல்லோரும் இருக்கின்றனர் என்று எல்லாம் அவன் அறிவு அவனுக்கு உணர்த்திக் கொண்டு தான் இருந்தது. ஆனால் அவனால் அவன் பார்வையை விளக்கவே இயலவில்லை.

“ஹலோ ஹலோ” என்று ஜோதி தான் சொடுக்கு போட்டாள்.

பார்வையை திருப்பியவாறே “என்ன நடக்குது இங்க” என்றான் இளவரசன்.

இப்போது சந்துரு, பவித்ரா, ஜோதி மூவரும் சேர்ந்து “சர்ப்ரைஸ்” என்று கத்தினர்.

அவனாலும் அவ்வளவு சீக்கிரம் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் மனம் மட்டும் மகிழ்ச்சியில் மிதந்தது. விட்டால் இனியாவை தூக்கி ஒரு சுற்று சுற்றி விடுவான். ஆனால் எங்கே என்று பெருமூச்சி விட்டான்.

“சரி சரி. மாப்பிள்ளை சார்க்கு ரூம் அங்கே இருக்கு. கூட்டிட்டு போங்க. பொண்ணு இன்னும் கொஞ்சம் ரெடி ஆகணும். அதுவும் இல்லாம எல்லாரும் வர ஆரம்பிப்பாங்க” என்று ஜோதி அதட்டினாள்.

அவனுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது. எப்படி இவர்கள் இந்த அளவுக்கு ஏற்பாடு செய்தும் தான் ஏதும் தெரியாமல் முட்டாள் போல் இருந்தோம் என்று எண்ணிக் கொண்டான்.

இனியாவை பார்த்தவாறே வெளியேறி விட்டான்.

ந்த இடமே நிச்சயதார்த்தம் போல அல்லாமல் திருமணம் போல் களைக் கட்டியிருந்தது.

மாலையில் குறித்துக் கொடுத்திருந்த சுப நேரத்தில் தட்டை மாற்றிக் கொண்டனர்.

லக்ஷ்மி ராஜகோபாலும் கொடுக்க ராஜலக்ஷ்மி வாங்கிக் கொண்டார்.

யார் தட்டை மாற்றுவது என்ற பேச்சு வந்த போது இளவரசன் அவன் அம்மா தான் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக கூறி விட்டான். எல்லோரும் அதை சந்தோசமாக ஏற்றுக் கொண்டனர்.

இருந்தாலும் ராஜலக்ஷ்மிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் ராஜகோபால் பேசி சரி செய்து விட்டார்.

நிச்சய சேலையை கொடுக்க இனியா போய் அந்த சேலையை கட்டிக் கொண்டு வந்தாள்.

பின்பு இருவரையும் அமர வைத்து எல்லோரும் நலங்கு வைத்தனர். இளவரசன் என்ன முயற்சி செய்தும் அவளிடம் பேச முடியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் வந்து நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.

பவித்ரா இனியா பக்கத்திலும், சந்துரு இளவரசன் பக்கத்திலும் நின்றுக் கொண்டிருந்தனர்.

ஒருவர் நலங்கு வைக்க வந்த போது சந்தன கிண்ணம் எங்கே என்று தேடிக் கொண்டிருந்த போது இளவரசன் “ஏய் என் கிட்ட சொல்லவே இல்ல பாத்தியா” என்றான்.

அதற்குள் சந்தனக் கிண்ணம் கிடைத்து அருகே வந்தே அந்த பாட்டி “காலம் பூரா பேச தானே போறீங்க. இங்க பாரு ராசா” என்று அவனின் கன்னத்தில் தடவினார்.

அதற்கு மேல் இனியாவிற்கு வெட்கம் தாங்காமல் தலையை குனிந்துக் கொண்டாள்.

இளவரசனுக்கு அவளை பார்க்க பார்க்க சந்தோஷம் பூரித்துக் கொண்டு வந்தது.

தான் விரும்பியது கிடைத்த பெருமிதம் அவன் பார்வையில் தெரிய, அவளோ வெட்கப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இவை அனைத்தையும் போட்டோ விழுங்கிக் கொண்டிருந்தது.

பக்கத்தில் இருந்த சந்துரு, பவித்ராவின் பார்வைகளையும் சேர்த்து.

கடைசியாக நலங்கு வைத்து முடித்த பிறகு, எல்லோரும் வந்து அவர்களுடன் போட்டோ பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு குரூப் சென்று அடுத்தவர் வருவதற்குள் இளவரசன் அவள் காதோரமாய் சென்று பேசி அவளை வெட்கப் பட வைத்தான்.

இவர்களின் சந்தோசத்தில் பவித்ரா அங்கில்லாததை யாரும் கவனிக்கவில்லை. அந்த இருவரை தவிர, ஆனால் அவர்களும் பவித்ராவை தடுக்கவில்லை.

இனியா இளவரசன் இங்கு சந்தோசமாக இருந்த நேரத்தில், பவித்ரா கண்ணீரோடு வெளியேறிக் கொண்டிருந்தாள்.    

தொடரும்

En Iniyavale - 30

En Iniyavale - 32

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.