(Reading time: 32 - 63 minutes)

ந்த சில நாட்களாக ஸ்ருதி சிறிது மாறிவிட்டிருந்தாள் என்றாலும், இந்த சிரிப்பை பார்த்து எத்தனை நாளாகி விட்டது என்று சிவாவிற்கு கண்ணில் தண்ணியே வந்து விட்டது.

காதல் என்றால் முன்பு போல் ஒரு காத தூரத்திற்கு ஓடாமல், காதல் திருமணங்கள் இப்போது சகஜமான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஒரு புறம் இது நல்லது தான் என்றாலும், எல்லாவற்றிற்கும் மறுபுறம் ஒன்று இருக்கும் என்பதை போல் காதல் என்ற பெயரில் ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதும், தற்போது பெண்கள் ஆண்களை ஏமாற்றுவதும் நடந்துக் கொண்டு தானிருக்கிறது.

இது எல்லாவற்றையும் மீறி அவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தாலும், அது அவர்களின் காதலுக்கு கிடைத்த முழு வெற்றியாக கருத முடியாது. காதல் என்பது திருமணத்தோடு முடிந்து விடும் ஒன்றல்ல, அதன் பிறகு தான் முழுமையான காதல் ஆரம்பிக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் காதலிப்பவர்களின் காதல் பெரும்பாலும் அவர்களின் திருமணத்திலேயே முடிந்து விடுகிறது.

காதல் என்பது புரிதலாக இல்லாமல் பிடித்தமாக இருக்கிறது. பிடித்தம் என்பது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் புரிதல் அப்படி இல்லை. ஆனால் இதை புரிந்துக் கொள்பவர் தான் இப்போது இல்லை.

(சரி அதை விடுங்க. நம்ம கதைக்கு வாங்க.)

“ராஜா ராணி படம் பார்த்தியா ஸ்ருதி”

“ம்ம்ம். பார்த்தேனேக்கா”

“எனக்கு அதுல ஆர்யா நஸ்ரியா பேர் பிடிக்கும், உனக்கு”

“எனக்கு நயன்தாரா ஆர்யா பேர் தான் பிடிக்கும்ப்பா. அதுவும் கிளைமாக்ஸ்ல ரொம்ப”

“ஏன் ஸ்ருதி கதைல மட்டும் எல்லாத்தையும் ஏத்துப்ப, அதுவே நம்ம லைப்ல நடந்தா ஏத்துக்க மாட்டியா. உன்னை உடனே மேரேஜ் பண்ணிக்கோன்னு யாரும் போர்ஸ் பண்ணலை, பட் நார்மலா இருக்கலாம் இல்ல”

அதுவரை உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த ஸ்ருதியால் இப்போது பேச முடியவில்லை. அவளுக்கு இனியா சொல்ல வருவது புரிந்தது. ஆனால் சொல்வதைக் காட்டிலும், அதை ஏற்றுக் கொள்வது கடினம் அல்லவா. எனவே அமைதியாக இருந்தாள்.

“நம்ம ஒரு விஷயம் செய்யறோம்னா அதுக்கான விளைவுகளை பேஸ் பண்ண நமக்கு தைரியம் இருக்கணும் ஸ்ருதி.”

“ஆனா அக்கா”

“இந்த விசயத்துல உன் மேல தான் மிஸ்டேக்கா”

“இல்லக்கா. நான் என்ன பண்ணேன்”

“அப்ப தப்பு செஞ்ச ஒருத்தன் உன் முன்னாடி தைரியமா வந்து நிக்கும் போது, நீ ஏன் பயப்படுற.”

ஸ்ருதி யோசிக்க ஆரம்பித்தாள். இனியா அவள் யோசிப்பதற்கு நேரம் கொடுத்து அமைதியாக இருந்தாள்.

“ஆனா அக்கா. என்னால என் பிரண்ட்ஸ கூட பேஸ் பண்ண முடியலை, நான் லவ் பண்ணது எல்லாருக்கும் தெரியும், யாராச்சும் என்னை கிண்டல் பண்ணா என்னால தாங்கிக்க முடியாது” என்றவளின் கண்களில் விழி நீரும், உடலில் சிறு நடுக்கமும் வந்தது.

அதற்குள் அவள் அண்ணன் சிவா வந்து அவளருகே அமர்ந்து அவள் தலையை தடவிக் கொடுத்தான்.

இனியா கோபமாக “ஏன் சார். இப்ப அவளுக்கு என்ன ஆகிடுச்சி. அதுக்குள்ளே வந்து அவளுக்கு ஆறுதல் சொல்றீங்க” என்றாள்.

சிவாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“அவளுக்கு ஒன்னும் இல்லை. அவ லவ் பண்ணது தப்பு இல்லைன்னாலும், ஒரு வகைல தப்பானவன சூஸ் பண்ண தப்புக்காக இப்ப அவ கஷ்டப்படுறா, ஆனா இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்ல, அவளுக்கு ஒண்ணுன்னா அவளுக்கு துணையா இருக்க நீங்க இருக்கீங்க. பட் அது பெரிய விசயத்துக்கு தான் இருக்கணும், அவளோட பிரண்ட்ஸ பார்த்தே அவ பயப்படறதுக்கு எல்லாம் நீங்க என்ன செய்ய முடியும், லெட் ஹெர் பேஸ்” என்றாள் சிறிது கடினமாக.

அவள் அண்ணனை இனியா கடிந்து பேசியதில் ஸ்ருதி அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

“உன் ப்ரண்ட்ஸ் உன்னை அப்படி என்ன பண்ணிடுவாங்க ஸ்ருதி”

“கிண்டல் பண்ணுவாங்க” என்று கூறுவதற்கு அவளுக்கு குரலே எழும்பவில்லை.

“என் பிரண்ட்ஸ்னு இல்லை, கிளாஸ் மேட் எல்லாரும் இருக்காங்க இல்ல, இன்னும் என்னை பிடிக்காதவங்க இருப்பாங்க இல்ல, எல்லாருக்கும் என் லவ் மேட்டர் தெரியும்”

“ஓகே. ஜெனரலா உன்னை பிடிக்காதவங்க உன்னை கிண்டல் பண்ணா நீ என்ன பண்ணுவ.”

“அதைக் கண்டுக்க மாட்டேன், இல்லன்னா திரும்ப நானும் ஏதாச்சும் சொல்லிட்டு போயிடுவேன்”

“ஹ்ம்ம். இப்பவும் அதையே செய். அப்புறம் என்ன சொன்ன, உன் பிரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்களா. நம்மளோட உண்மையான பிரண்ட்ஸ் எப்பவும் நம்மளோட கஷ்டத்துல நமக்கு துணையா தான் நிப்பாங்க, நம்மளை கிண்டல் பண்ணி நம்மளை வருத்தப் பட வைக்க மாட்டாங்க, இந்த நேரத்துல நீ உன்னோட உண்மையான நண்பர்களை தெரிஞ்சிக்கலாம்.”

“நீ முதல்ல நான் எந்த தப்பும் பண்ணலைன்றதை உன் மனசுல வச்சிக்க. யாராச்சும் ஏதாச்சும் கேட்டாலும், ஆமா லவ் பண்ணேன், என் வீட்டுலையே மேரேஜ் பண்ணி வைக்க எல்லாம் ஏற்பாடு பண்ணாங்க, அப்புறம் அவன் சரியில்லைன்னு தெரிஞ்சி மேரேஜ் நிருத்திட்டும், என்ன இப்பன்னு கேளு. யார் என்ன சொல்ல முடியும்”

ஸ்ருதியின் முகத்தில் ஏதோ பிரகாசம் தெரிவதை போல் இருந்தது.

“சரி நல்லா யோசி. எல்லாருக்கும் பழைய ஸ்ருதி தான் வேணும். ஓகே” என்றவாறு கிளம்பி விட்டாள்.

வெளியே வந்த சிவாவிடம் “சாரி அண்ணா, ஸ்ருதி கிட்ட ஏற்கனவே அன்னைக்கு ரொம்ப கோபமா பேசிட்டேன். இருந்தாலும் அவளுக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் தேவைப்பட்டது. ஆனா அவளை நேரடியா திட்ட முடியாது, அதான் உங்க கிட்ட கோபமா பேசிட்டேன்” என்றாள்.

சிவா சிரித்துக் கொண்டே “பரவால்லம்மா. அதிலையும், முதல்ல அண்ணன்னு சொல்லிட்டு சாரி கேட்டா எப்படி திட்ட முடியும்” என்றவாறே சிரித்தான்.

சிறிது தூரம் சென்றும் இளவரசனின் முகத்தில் சிரிப்பு இருந்து கொண்டே இருந்தது.

“என்ன சிரிப்பு”

“நீ ஏண்டி சிவாவை வெளுத்து வாங்கின”

“ஐயோ இளா. நான் வேணும்னே செய்யலை. அது ஒரு ப்ளோ-ல வந்துடுச்சி”

“என்னவோ சொல்ற. ஆனா நம்ப முடியலைப்பா”

“நம்பாகட்டி போங்க. ஆனா அவரை திட்டனதுல ஒரு தப்பும் இல்லை”

“ஏய் என்ன இப்படி பேசற, அவன் ஸ்ருதியை எப்படி பார்த்துக்கிட்டான் தெரியுமா, ஸ்ருதி மேல ரொம்ப அபெக்ஷன் வச்சிருக்கான் இனியா”

“அந்த அபெக்ஷன் தான் இளா பொண்ணுங்களை வீக் ஆக்கிடுது”

“இந்த மாதிரி ஒரு இன்சிடென்ட் நடந்தா யாருக்கா இருந்தாலும் வருத்தம் இருக்க தான் செய்யும், அதுலையும் எல்லா வீட்டுலையும் அந்த பொண்ணை புரிஞ்சிக்கிட்டு இப்படி நடக்க மாட்டாங்க, உடனே அவசர அவசரமா ஒருத்தனை பிடிச்சி கல்யாணம் பண்ணி வைக்க தான் பார்ப்பாங்க. அந்த விதத்துல உங்க பிரண்ட் கிரேட் தான். பட் அந்த பொண்ணு என்ன பீல் பண்ணுவா தெரியுமா, இந்த அளவுக்கு நம்மளை பார்த்த்துக்கறாங்களே, நாம இப்படி பண்ணிட்டோமேன்னு கஷ்டமா இருக்கும், அதை விட அவங்க வீட்டுல கொடுக்கற பாசம் அதிகமாக அதிகமாக அதை ஏத்துக்க முடியாம, இதுக்கு நம்மளை பனிஷ் பண்ணியிருக்கலாம்ன்னு குற்ற உணர்வு தான் அதிகமாகும். இதை எல்லாம் ஹான்டில் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.