(Reading time: 32 - 63 minutes)

வ பீல் பண்ணுவாளேன்னு அவளை பூ மாதிரி பார்த்துக்கறதை விட, அதை அவங்களே மறந்த மாதிரி அந்த பொண்ணுக்கு வழக்கத்தை விட அவளுக்கே தெரியாம வொர்க் அதிகம் பண்ணலாம், அது மூலமா அவ கவனத்தை திசை திருப்பலாம். நாம செய்யற எதையும் அவ நோட்டிஸ் பண்ணாம இருக்கற மாதிரி நாம செய்யணும். அதை விட்டுட்டு அவ கண்ணுல இருந்து தண்ணி வரர்துக்குள்ளே இவர் ஓடி வந்தா என்ன சொல்றது.”

“இதெல்லாம் வழக்கமா செய்யும் போது அவளுக்கு ஒன்னும் தெரிஞ்சிருக்காது, ஆனா இப்ப அவளோட குற்ற உணர்வை தான் அது அதிகப் படுத்தும். ஜெனரலாவே எங்க மேல ரொம்ப கேர் கொடுத்து தான் நீங்க எல்லாம் எங்களை பயமுறுத்தி வச்சிருக்கீங்க, சென்சிடிவா ஆக்கி வச்சிருக்கீங்க”

அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த இளவரசன் “நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான் இனியா. முன்னாடி அவ போயிட்டிருந்த எந்த கிளாஸும் இப்ப அவ போறதில்லை. அதைப் பத்தி சிவா என் கிட்ட சொல்லும் போது எனக்கும் அது சரி தான்னு பட்டுச்சி. அவளை ப்ரொடெக்ட் பண்றோம்னு நினைச்சிட்டு அவளை எதையும் பேஸ் பண்றதுக்கு தைரியம் இல்லாதவளா ஆக்கிட்டோம்.” என்றான்.

“அப்பாடி. இப்பவாச்சும் இந்த மரமண்டைக்கு புரிஞ்சிது”

“ஏய் என்ன சொன்ன மர மண்டையா”

“ம்ம்ம்” என்றவாறே கண்ணடித்தாள் இனியா.

அதுவரை நார்மலாக இருந்த இளவரசன் இப்போது வேறு மாதிரி சிரித்தான்.

“என்ன சிரிப்பெல்லாம் ஒரு விதமா இருக்கு.”

“ம்ம்ம்.புரிஞ்சா சரி” என்றவாறு காரை ஓரமாக நிறுத்தி விட்டு அவள் புறம் சாய்ந்தான்.

அது வரை பேசிக் கொண்டிருந்த இனியா அமைதியாகி ஜன்னல் ஓரம் சாய்ந்தாள்.

அவனும் அவள் புறம் சாய ஒரு நிலைக்கு மேல் தாங்க இயலாமல் அவனை தள்ளி விட்டு சிறிது மூச்செடுத்து “என்ன” என்றாள்.

இளவரசன் சிரித்துக் கொண்டே “இல்ல, ஒருத்தி மூச்சு விடாம இவ்வளவு நேரம் லெக்சர் கொடுத்திட்டிருந்தா, அவளை தேடறேன்” என்றான்.

“வவ்வ வவ்வ”

“என்னடி இப்பல்லாம் உன்ன பார்க்கவே முடியலை”

“ஹலோ நாலு நாள் முன்னாடி தான் நாம குயின்ஸ் லேன்ட் போயிட்டு வந்தோம். அதுக்குள்ளே இப்படி சொல்றீங்க”

“ஹேய் என்ன அநியாயமா பேசற. நாலு நாள் டீ”

“இளா ஜஸ்ட் நாலு நாள். எங்க சொல்லுங்க பார்ப்போம்”

“உனக்கு இருக்கு. ஜோக்ஸ் அபார்ட். திரும்ப நாம எங்கயாச்சும் போலாம் இனியா.”

“என்ன விளையாடறீங்களா”

“நோ நோ. நான் சீரியஸா தான் கேட்கறேன்”

“இளா விளையாடாதீங்க. டைம் ஆச்சு. நீங்க வண்டியை எடுங்க”

“ஒரு நாள். எனக்காக டைம் ஸ்பென்ட் பண்றேன்னு சொல்லு. வண்டியை எடுக்கறேன்”

“நோ வே”

“அப்ப நானும் வண்டியை எடுக்க மாட்டேன்”

“ஐயோ என்ன இது. நீங்க இப்படி எல்லாம் பண்றீங்க”

“கேட்டதுக்கு பதில் சொல்லு”

“சரி பார்க்கலாம்”

“ஓகே எப்ப சொல்லு, நாளைக்கு, நாளைன்னைக்கு”

“ஹோல்ட் ஆன் ஹோல்ட் ஆன். பொங்கல் வர போகுது சார். பொங்கல் ஹாலிடேஸ் வரப் போகுது. சோ என்னால இப்ப லீவ் போடவே முடியாது. அப்புறம் பார்க்கலாம். இப்ப நீங்க ஏதும் பிளான் பண்ணாதீங்க”

“சோ ஸாட். போடி. இந்த பொங்கல் இப்ப யாரு வர சொன்னது”

“ரொம்ப சலிச்சிக்காதீங்க. வண்டியை எடுங்க”

அவளை முறைத்துக் கொண்டே வண்டியை எடுத்தான்.

அவள் வீட்டின் வெளியில் வண்டியை நிருத்தியவனை கேள்வியாக நோக்கி “என்ன வீட்டுக்குள்ளே வரலியா” என்றாள்.

“ஏண்டி நீ வேற. அன்னைக்கு நடந்த விசயத்துல, அத்தை முகத்தை என்னால பார்க்கவே முடியலை”

“ஹாஹஹா” என்று சிரித்துக் கொண்டே அவள் இறங்க முற்பட,

“ஒரு ரெண்டு நிமிஷம் இருந்துட்டு போ, ப்ளீஸ்” என்றான்.

அவளும் சரியென்று இருக்க, அவள் கையைப் பிடித்தவன் “உன்னை பார்க்காம இருக்கவே முடியலை டீ, நீ என்னடான்னா என்னை கண்டுக்கவே மாட்டற” என்றான் ஏக்கத்துடன்.

ஏதும் பேசாமல் அமைதியாக அவன் கண்களையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

பின்பு அவனை பார்க்க இயலாமல் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“இனியா”

“ம்ம்ம்”

“என்னைப் பாரு”

ஆனால் அவள் திரும்பவில்லை.

அவள் கையை பிடிக்க அவன் முயற்சிக்க அவளோ அவளின் கைகளை வேறு புறம் இழுத்துக் கொண்டாள்.

இந்த முயற்சியில் அவன் அவளருகில் சென்று விட்டான்.

அவளின் அருகாமை ஏதோ செய்ய அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

பதறியவளாக இனியா அவனை தள்ளி விட்டாள்.

அவன் திரும்ப அவள் புறம் வர, இனியா “ஸ்டேச்சூ(statue)” என்றாள்.

அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க “ஸ்டேச்சூ” என்றாள்.

அவன் ஒரு வழியாக புரிந்துக் கொண்டு அப்படியே சிலை போல் இருந்தான்..

இறங்கி செல்ல எத்தனித்த இனியா ஒரு நிமிடம் நிதானித்து அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

அவனோ அவளை பிடிக்க வந்த கையை அப்படியே வைத்துக் கொண்டிருந்தான்.

அவனை ஓரக் கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு அமைதியாக இருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.