(Reading time: 32 - 63 minutes)

ஹேய் உன் வாய்ஸ் சரி இல்லை. நீ ஏதோ வில்லங்கமா பண்ண போற மாதிரி இருக்கு. ஆனா நீ என்ன பனிஷ் பண்ற அளவுக்கு நான் என்னடி பண்ணேன்”

“நீங்க என்ன பண்ணலை. நான் இதெல்லாம் நோட் பண்ணலைன்னு நினைச்சீங்களா. முதல்ல காதல் பண்ணாதீங்கன்னு பாட்டு பாடறீங்க, அடுத்து காதல் கசக்குதைய்யான்னு பாட்டு ப்ளே பண்றீங்க. அதுவும் எல்லார் முன்னாடியும். என்ன இதெல்லாம், நார்மலா நல்லா பேச வேண்டியது, ஒரு சின்ன பிரச்சனைன்னா உடனே இப்படி எல்லாம் சொல்ல வேண்டியது, காதல் கசக்குதா ஐயாவுக்கு. சரி சரி. அப்ப என்ன ஏன் அவுட்டிங் கூப்பிடறீங்க”

“ஹேய் இனியா செல்லம். காலைலயே ஏன் மா உனக்கு இந்த கொலை வெறி, எதை எதையோ பேசி இப்ப ஏன் இப்படி வந்து நிக்கற”

“இத்தனை நாள் கேட்காம இருந்தேனேன்னு சந்தோச படுங்க. பட் மிஸ்டர் இளவரசன் இதுக்கு எல்லாம் உங்களுக்கு பனிஷ்மெண்ட் கண்டிப்பா இருக்கு” என்றாள் சிரித்துக் கொண்டே.

“ஏதோ உன் சிரிப்பு எனக்கு வில்லத்தனமா கேட்குது டீ”

“பின்ன இருக்காத பின்ன. நான் இருக்கும் போது என்னை பார்த்துட்டே காதல் கசக்குதய்யான்னு பாட்டு கேட்டீங்க இல்ல. அதனால யோசிச்சி உங்களுக்கு ஒரு சூப்பர் பனிஸ்மென்ட் வச்சிருக்கேன்”

“ஹேய் ஹேய் இரு. உன் வில்ல சிரிப்புல இருந்தே எனக்கு ஏதோ ஆப்புன்னு தெரியுது. வெயிட். நான் உண்மைய சொல்லிடறேன். அந்த சாங் ப்ளே பண்ணேன், ஓகே, பட் நான் நிஜமா அந்த சாங் கேட்டுட்டு இல்லை டீ”

“என்னது, என்ன சொல்றீங்க. அப்ப ஏன் அந்த சாங் போட்டீங்க. என்ன சாங் கேட்டீங்களோ அதையே ப்ளே பண்ண வேண்டியது தானே, நீங்க ஏதோ சீட் பண்ற மாதிரி இருக்கு. சோ பனிஸ்மென்ட் கன்பார்ம் தான்”

“ஹேய் பொறு டீ. நான் குஜராத் போயிருந்தப்ப ஒரு நாள் நைட் ட்வெல்லோ கிளாக் போன் பண்ணி பேசினியே நியாபகம் இருக்கா.”

“ஆமா பேசினோம். அதுக்கென்ன”

“அன்னைக்கு நம்ம பேசின ரெகார்ட் தான் உங்க அக்கா வீட்டுல கேட்டுட்டிருந்தேன். அதுக்கு முதல் நாள் நீ ஏதோ லூஸ் மாதிரி பேசி வச்ச, அதுல கொஞ்சம் எனக்கு கோபம் தான், ஆனா அதை உன் கிட்ட காமிக்க முடியல, எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலே இப்பல்லாம் அந்த ரெகார்ட் கேட்கறது தான் வேலை. என்னவோ அன்னைக்கு உன் வாய்ஸ்ல என் மேல இருந்த அபெக்ஷன் அவ்வளவு தெரிஞ்சிருக்கும். சரி அதை கேட்டு என்னை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்ன்னு அதை கேட்டுட்டு இருந்தா இந்த சந்துரு சகுனி போட்டு கொடுத்து என் மானம் எல்லார் முன்னாடியும் போக இருந்துச்சி, அதான் அப்படி வேற சாங் மாத்தி ப்ளே பண்ணேன், உன்னையும் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு”

இனியா ஏதும் பேசவில்லை.
“ஹலோ ஹலோ”

“இருக்கேன்”

“அப்ப பேசறதுக்கென்ன”

“ம்ம்ம். எப்படியும் என்னை வெறுப்பேத்த தானே அந்த சாங் ப்ளே பண்ணீங்க. அதனால உங்களுக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் இருக்கு” என்று சிரித்தாள்.

“அடிப்பாவி”

“ஹாஹஹா”

அதற்குள் இனியாவிற்கு செகண்ட் லைனில் கால் வரவே “இளா, அக்கா கால் பண்றாங்க. நான் அப்பறம் கூப்பிடறேன்” என்று கூறி விட்டு வைத்து விட்டாள்.

“சொல்லுக்கா”

“என்ன டீ. காலைலேயே உன் அவர் கூட பேசிட்டிருக்கியா.”

“இல்லையே”

“எல்லாம் தெரியும். இப்ப தான் உன் மாமா அவருக்கு போன் போட்டார், அங்கயும் வெயிட்டிங்ல போச்சி, நீயானா பரவால்ல எடுத்திட்ட, அவர் கண்டுக்காம பேசிட்டிருக்காரே”

“அது சரி, மாமா ஏன் அவருக்கு பண்ணார்”

“அது என்று தடுமாறிய ஜோதி, ஏதோ கேட்கணும்ன்னு சொன்னாரு டீ. எனக்கு மறந்துடுச்சி”

“சரி. நீ என் கிட்ட சொல்ல வந்ததாவது உனக்கு நியாபகம் இருக்கா”

“அது ஏன் இல்லாம. நாம இன்னைக்கு ஒரு பங்ஷனுக்கு போறோம். உன் மாமா ரிலேஷன் வீட்டு பங்ஷன். சோ நீயும் என் கூட வர”

“போக்கா. என் சண்டேவை என்னை என்ஜாய் பண்ண விடு. மாமா கூட போயிட்டு வா”

“உன் மாமா வந்தா நான் ஏன் உன்னை கூப்பிடறேன். ஒழுங்கா என் கூட வர. சொல்லிட்டேன். இன்னைக்கு ஈவ்னிங் பங்ஷன். நீ கொஞ்ச நேரத்துல கிளம்பி என் வீட்டுக்கு வந்துடு, நாம ஒன்னா போயிடலாம்”

“என்னவோ போ. என் சண்டே உன்னால வேஸ்ட்டா போயிடுச்சி”

“ரொம்ப சலிச்சிக்காம வந்து சேர்”

சிறிது நேரத்தில் இனியா கிளம்பி கீழே வந்த உடனே ராஜகோபால் “என்னம்மா அக்கா உன்னை வர சொன்னாளாமே, நான் அந்த பக்கம் தான் போறேன், வா உன்னை விட்டுட்டு போயிடறேன்” என்றார்.

“இல்லப்பா. நானே போயிக்குவேன்”

“இல்லம்மா. வரும் போது அவளே கூட்டிட்டு வராளாமாம். அதனால வண்டி எடுத்துட்டு வர வேண்டாம்ன்னு சொன்னா”

“சரிப்பா. நான் இன்னும் சாப்பிட கூட இல்லை”

“உன் அக்கா உனக்கு அங்கே ஏதோ ஸ்பெஷலா செஞ்சி வச்சிருக்காளாம். உன்னை அங்கே வர சொன்னா”

என்னவோ சரியில்லை என்று இனியாவிற்கு தோன்றியது. இருந்தாலும் எதையும் யோசிக்காமல் கிளம்பி விட்டாள்.

அங்கு சென்றால் ஏதோ ஜோதியின் ப்ரண்ட் ஒரு பெண் பியுடிசியன் கோர்ஸ் படிக்கிறாளாம். அதை பழக என்று ரிக்வெஸ்ட் செய்து அவர்கள் இருவருக்கும் பேசியல் செய்து விட்டாள்.

அவள் நன்றாக தான் செய்தாள் என்றாலும், இதெல்லாம் தேவையா என்று இனியாவிற்கு சிறிது கடுப்பாக இருந்தது.

ஆனால் ஜோதியோ பங்ஷனிற்கு வேறு போகிறோம் இருக்கட்டும் என்று செய்து கொண்டாள்.

“சேலை கட்டிக்க டீ”

“ஐயோ போக்கா. சேலை எல்லாம் கட்ட சொன்னா நான் உன் கூட வரவே மாட்டேன்”

“அடிப்பாவி, சரி விடு. சுடிலயே வா”

மாலை நான்கு மணிக்கே கிளம்பும் படி ஜோதி அவசரப் படுத்தினாள்.

“என்னக்கா இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்ற”

“ஆமாம் டீ. ஐந்து மணிக்கு பங்ஷன். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்”

“என்னவோ போ. இவ்வளவு சீக்கிரம் போய் என்ன பண்ண போறோம்”

கார் போய் நின்ற இடத்தை பார்த்த இனியா “என்னக்கா, நம்ம அப்பாவோட சங்க அசோசியேஷன் பில்டிங்லயா பங்ஷன். யாராச்சும் ஆடிட்டர் வீட்டு பங்ஷன்னா தானே இங்க வைக்க பெர்மிஷன் தருவாங்க”

“ஏதும் பேசாத, உள்ளே வா. பேசிக்கலாம்” என்றவாறே விடுவிடுவென்று உள்ளே நுழைந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.