(Reading time: 32 - 63 minutes)

ய் நான் பாவம் டீ” என்றான் இளவரசன், ஆனால் கையை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டான்.

“பேசாதீங்க”

“ஹேய்”

“அப்படியே இருக்கணும். நான் போற வரைக்கும் அசையக் கூடாது”

“இதெல்லாம் அநியாயம்”

“அசையக் கூடாது”

“அசையல, வாய் மட்டும் தான் பேசுது”

கோபமாக திரும்பியவள் அவன் இருந்த நிலைமையை பார்த்து சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு “நான் சொல்ற வரைக்கும் அசையக் கூடாது. வீட்டுக்கு வெளியில இருந்துட்டு என்ன வேலை பார்க்கறீங்க.” என்று முறைத்தாள்.

“சாரி டீ செல்லம். ப்ளீஸ்”

“நான் போறேன். பாய். நான் வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுவேன். அது வரைக்கும் அசையக் கூடாது. ராஸ்கல்” என்று கூறி விட்டு சென்று விட்டாள்.

அவள் போன பிறகு அந்த நிலையில் இருந்து விடுபடலாம் என்று எண்ணினான், ஆனால் ஏனோ அப்படி செய்ய முடியவில்லை. மனதில் சிரித்துக் கொண்டே அப்படியே இருந்தான்.

அவன் கடவுளிடம் வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவள் போன் செய்யும் வரை யாரும் அவனை பார்த்து விடக் கூடாது என்று.

வீட்டிற்குள் சென்ற இனியாவை பிடித்து வைத்துக் கொண்டு அவள் தாய் பேசிக் கொண்டிருந்தார். இனியாவால் அவனுக்கு போன் செய்ய இயலவில்லை.

என்னென்னவோ சொல்லி அவள் தப்பிக்க பார்த்தாலும் முடியாமல் போனது. சிறிது நேரத்திற்கு பிறகு “அம்மா தலை வலிக்குது. காபி தரீங்களா. நான் போய் ரிபிரெஷ் ஆகிட்டு வரேன்.” என்ற சொல்லில் அவள் தாயிடம் இருந்து தப்பித்து, திரும்ப வெளியே காம்பவுண்டிற்கு வெளியே ஓடி வந்து பார்த்தாள்.

அவன் இன்னும் அதே நிலையில் தான் இருந்தான்.

இருந்தாலும் அவனுக்கு நிறைய பொறுமை தான் என்று நினைத்துக் கொண்டு அவனுக்கு போன் செய்தாள்.

அவன் மொபைல் அடிக்கவும் ரிலாக்ஸ் ஆகி போனை எடுத்து “ராட்சஷி” என்றான்.

“போடா”

“திமிரு டீ. பார்த்துக்கறேன்”

“இளா ஒரு நிமிஷம் திரும்பி பாருங்களேன்”

“ஏன்”

“உங்க முகத்தை இப்ப பார்க்கணும் போல இருக்கு”

“ஹேய்” என்றவாறு திரும்பினான்.

“வவ்வ வவ்வ” என்று அவனுக்கு ஒழுங்கு காண்பித்து விட்டு ஓடி விட்டாள்.

போனில் அவன் “ஹேய் ஹேய்” என்று கத்திக் கொண்டிருந்தான்.

ஓடி சென்ற இனியா ஹாலிற்கு ஓடவும், அவள் தாய் வரவும் சரியாக இருந்தது.

அவள் ஓடி வருவதை பார்த்து அதிர்ந்த லக்ஷ்மி “என்னடி. ஏதோ தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு இப்படி ஓடி வர” என்றுக் கேட்டார்.

என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள் “இல்லம்மா என்னவோ சத்தம் கேட்டுது” என்றாள்.

“அதுக்கு எதுக்கு டீ நீ இப்படி ஓடி வந்த”

“சரி. காபி கொடுங்கம்மா. தலை வலிக்குது. நான் அப்படியே போய் ரிபிரெஸ் ஆகி வந்துடறேன்”

“இதை சொல்லிட்டு தான் முதல்ல போன, அப்புறம் வந்து பார்த்தா வெளியில இருந்து ஓடி வர” என்று அவரின் வார்த்தைகள் அவளை பின் தொடர்ந்தன.

அவள் அவளின் அறைக்கு சென்று போனில் காதை வைத்தால் அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

“சிரிக்காதீங்க”

“அப்படி தான் டீ சிரிப்பேன். ராட்சஷி எப்படி நீ என்னை அப்படியே விட்டுட்டு போன”

“ஹாஹஹா. உங்களுக்கு வேணும். வீட்டுக்கு வெளியில இருந்துட்டு என்ன வேலை பார்த்தீங்க நீங்க. சோ உங்களுக்கு அந்த பனிஷ்மெண்ட் சரி தான்.”

“ஓ அப்படியா. உன் பனிஸ்மென்ட் ஏத்துக்கறதுக்கு நான் தயார் தான் மா. ஆனா திரும்ப அப்படி செஞ்சிக்கறேன். ஓகே வா”

“யூ யூ.”

“ஹேய் அது அப்படி இல்லை டா. முன்னாடி ரெண்டு வார்த்தையை விட்டுட்ட பாரு. அது ஐ லவ் யூ. ஓகே வா. இதை தானே நீ சொல்ல வந்த”

“ப்ராட்”

“ஹாஹஹா”

ன்று காலையில் எழுந்ததும் இனியாவிற்கு ஏனோ மனம் சந்தோசமாக இருந்தது. அவளின் உற்சாகத்திற்கான காரணம் அவளுக்கே தெரியவில்லை.

முதல் வேலையாக இளவரசனுக்கு போன் செய்தாள்.

அவனோ உறங்கிக் கொண்டிருந்தான். இவள் நம்பரை பார்த்த உடனே ஆன் செய்து “என்ன மேடம்க்கு காலைலேயே என் நினைப்பு”

“இன்னைக்கு என்னவோ என் மூட் ரொம்ப நல்லா இருக்கு”

“ஓஹோ. என்ன காரணமாம்”

“அதெல்லாம் தெரியலை. பட் மூட் நல்லா இருக்கு”

“அப்ப மேடம் நான் கேட்ட ட்ரீட் தரலாம் இல்ல”

“போங்க இளா. அன்னைக்கு எல்லாரும் வெளியில போனோம். வீட்டுல அக்காவே பெர்மிஷன் கேட்டுட்டா. நாம மட்டும் தனியா போகணும்னா என்னால அம்மா கிட்ட பெர்மிஷன் கேட்க முடியாது”

“சரி போ. போனை வை. உன் மூட் நல்லா இருக்குன்னு ஏன் காலைலயே என் மூட் ஸ்பாயில் பண்ற. தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவாங்க, என் வாழ்க்கைல ஒன்னும் நடக்க மாட்டுதே”

“ஓ நான் பேசினா உங்க மூட் ஸ்பாயில் ஆகுதா. அது சரி. பார்த்துக்கறேன். நீங்க சொன்னீங்க இல்ல ஒரு கவுன்டிங், அதே மாதிரி நானும் ஒரு கவுன்டிங் வச்சிருக்கேன்”

“ஹேய் வாரே வா. இப்ப தான் நீ என் ஆளு. பார்த்தியா என் காத்து உன் மேலயும் அடிக்க தானே செய்யும்”

“உதை படவா. நீங்க சொன்ன கவுன்டிங்க்கு ஆப்போசிட் கவுன்டிங் இது. உங்களை பழிவாங்க எனக்கு தெரியும். அப்ப பார்த்துக்கறேன்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.