(Reading time: 26 - 51 minutes)

"ம்பி இதோடு அஞ்சு தடவை  நீ சொல்லிட்ட பா .. அவ்ளோ நல்லவா இருக்கு ? " என்று ஆச்சர்யப்பட்டார் ..

" நிஜமாகத்தான் சார் .. " என்றவன் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடைபெற்றான் .. விழியாலே விடைக் கொடுத்தாள் அவனின் சரிபாதி ( அஹெம் அஹெம்எ ஐ மீன் வருங்காலத்துல )

அவனது வருங்கால மாமனாரோ

" உங்க கூட பேசினதுல டைம் போனதே தெரில பா .. ஒரு நாள் பகல் நேரமா வாங்களேன் .. பாக்யமும் உங்க கிட்ட பேசலாம்ல .. அவளுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும் .. "

" அவளுக்கும் நா ? உங்க மகளுக்கும் பிடிச்சிருக்கா ? " என்பது போல அவளை பார்த்து பார்வையால் கேட்டான் .. ஏனோ அவனின் பார்வை வீச்சில் அவளுக்கு நாவெழவில்லை .. கன்னங்கள்தான் " கள்வனே உன்னால் நான் சிவந்து விட்டேன் .... இனி என்ன ஏக்க பார்வை ?? நிம்மதியாய் சென்று வா " என்று அவனை புன்னகைக்க வைத்து வழியனுப்பியது ..

காரில் வானொலியை உயிர்பித்தவனுக்காக , சூழ்நிலைக்கு ஏற்ற பாடலே ஒலித்தது ..

யாரோ  இவள் யாரோ இவள்

கண்டே மனம் திக்காதோ

சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே

தொண்டை குழி விக்காதோ

என்னென்ன பேச ? எப்படி பேச ?

ஒத்திகை  பார்த்தேனே

நீ புன்னகை பூத்தால்

பத்திரமாக சேமித்து வைப்பேனே

இன்று பூமியில் பூக்கும்

வானவில் வண்ணம்  கண்முன்னே  கண்டாச்சு

அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளும் சேர்த்தால்

உன்முகம் உண்டாச்சு

நிலாவின் வீட்டில் ,

அவன் அமர்ந்து இருந்த இடத்தை பார்த்துக்கொண்டே பொறுமை உணவு உண்டு கொண்டிருந்தாள் நிலா.. மனம் முழுதும் மதி மதி மதி !மகளின் முகத்தை பார்த்துகொண்டிருந்தவரோ சமைலயறைக்கு  சென்று அவள் கலக்கி  பிளாஸ்கில் வைத்திருந்த மீதமிருந்த காப்பியை குடித்தார் ..

" நிலா .. "

" என்னப்பா "

" மதியழகனுக்கு உன்னை ஏற்கனவே தெரியுமாடா ? "

" அது .. அது ..... ஏன் பா கேட்குறிங்க ? " ... மகள் பதில் சொல்லாமல் கேள்வி கேட்பதை மனதில் குறித்து கொண்டார் மனோ ..

" ஒரு வேளை  அவருக்கு உன்னை தெரிஞ்சிருந்தா உன் உணர்வுகள்  மீது அவர் அக்கறை உள்ளவரா  இருக்கலாம் .. அப்படி இல்லை உன்னை தெரியதுனா, அவர் நாகரீகம் பார்த்து பேசி இருக்கலாம் .. "

" ஷாபா ... அப்பா .. ஏன் இந்த பில்ட் அப் ?? "

" உன் காப்பியை நீயே குடிச்சு பாரு "

தன் தந்தையை செல்லமாய் முறைத்துக் கொண்டே காபியை குடித்தவள், அதை வாயில் வைத்த வேகத்திலே துப்பிவிட்டாள்..

" அயே உப்பு "

" தெரிஞ்சா சரி .. என்னமா இது உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாதா ? "

" அப்பா இந்த அட்வைஸ் எல்லாம் நீங்க தராதிங்க .. பாக்கியம் கேட்டாலாவது  ஒரு நியாயம் இருக்கு ..நான் எப்போ கிச்சன் பக்கம் போனாலும் உனக்கேதுக்குமா இந்த சிரமம் எல்லாம்? அப்படி இப்படின்னு செல்லம் கொஞ்சிட்டு இப்போ அந்தர் பல்ட்டி அடிக்கரின்களா? "

" ஹா ஹா ஹா "

" போங்கப்பா நீங்க மோசம், மதி பாருங்க எதையுமே காட்டிக்காமே சமத்தா குடிச்சிட்டு போயிட்டாரு .. "

" நானும் அதைதான் சொல்றேன் நிலா... அவர் ஏன் அப்படி போயிருப்பாரு ? " என்று கேட்ட தந்தை ஏதும் அறியாதவர் போல " குட் நைட் பேபி " என்றுவிட்டு நகர்ந்தார் ..

" குட் நைட்டா ? என் தூக்கத்தை திருவிட்டு சென்றுவிட்டானே அந்த கள்வன் .. இனி எப்படித்தான் தூங்க போறேனோ "

" ஏன் இப்படி பண்ணான்.. காப்பியை மிச்சம் வைக்காமல் குடிச்சு ? கடவுளே .. என்னாலே இதை வாயில வைக்க முடியல... காதலிச்ச சூடு சொரணை இருக்காதுன்னு சொல்வாங்களே .. அது இது தானா ? "

" காதலா ? அடிப்பாவி முடிவே பண்ணிட்டியா ?"

" இது காதல் இல்லன்னா வேறென்ன செல்லம் ? எது வேணும்னாலும் பொய் சொல்லும் ..ஆனால் அவன் பார்வை ?? "

" ச்ச்ச ... அவன் போன் நம்பர் கூட இல்லையே .."

" இருந்திருந்தா  மட்டும் ??"

ப்படி அவளுக்குள்ளேயே  பல கேள்விகள் அலைஅலையாய் எழ, அவளின் செல்போன் சிணுங்கியது..

"ஹலோ ...?"

"நான் மதி பேசுறேன் .. "

"ம்ம்ம் சொல்லுங்க ? "

"என்னை மன்னிச்சிரு நிலா "

"ஹேய் .. என்ன திடீர்னு .."

"நீ பேசினதை எல்லாம் யோசிச்சு பார்த்தேன் "

"நான் கொஞ்சம் அதிகப்படியாத்தான் பேசிட்டேன் "

"பட் அதுல தவறு இல்லம்மா "

"...."

 உன்னை ஹர்ட் பண்ணனும்னு எதுவும் பன்னல .. நான் உனக்கு தொல்லையாகவும் இருக்க நினைக்கல .."

"அது ...."

"இரு நான் சொல்லி முடிச்சிடுறேன் .. "

"ம் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.