(Reading time: 26 - 51 minutes)

"டடே .. அங்க என்ன சத்தம் " - லக்ஷ்மிநாராயணன் ..

" வாங்க வாங்க .. இப்போ நீங்க மட்டும்தான் பாக்கி "

" நீங்களும் ஏதாச்சும் சொல்லிடுங்க .. நான் நிம்மைதியா வேலைய பார்க்குறேன் " என்று சலித்து கொண்டார் லக்ஷ்மி ..

" ஹா ஹா ஹா .. அப்பா அம்மாவை நம்பாதிங்க .. எல்லாம் ஏக்டிங்.. இவ்வளவு நேரம் என்னை நல்லா வம்பிளுத்துட்டு நீங்க வந்ததும் சோகமாய் பேசுறாங்க .. இருந்தாலும் ரொம்பதான் செல்லம் கொஞ்சுறாங்க "

" என் புருஷன் நான் கொஞ்சிகிறேன் .. உனக்கென்னடி ? " என்று சட்டென கேட்டு விட்டார் லக்ஷ்மி .. இதுதான் சமயம் என அவரை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தார் நாராயணன் ..

" இந்த ஒரு பார்வையாலதானே நானும் பாழானேன்

பாக்காதே பாக்காதே " என்று முகில்மதி பாடி இருவரையும் சீண்டினாள் ..

" ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு டீ " என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தவர் நிறுத்தியது மீண்டும் அந்த பாடல் ...

" பார்க்காதே பார்க்காதே

அயய்யோ  பார்கதே "

"அடியே " என்று குரல் கொடுத்த லக்ஷ்மியிடம்

" ஐயோ அம்மா இப்போ நான் இல்லை .. என் போன் அடிக்கிது " என்று அலறிக் கொண்டே போனை எடுத்தாள்  முகில்மதி ..

" மதி "

" அண்ணா " என்று அழைத்த தங்கச்சிக்கு வாயெல்லாம் பல் .. பின்ன போன் பண்ணது நம்ம ஷக்தியாச்சே!

" எப்படி இருக்க டா ?"

" நல்ல இருக்கேன் அண்ணா ...நீங்க ? "

" எனகென்ன மா .. நல்லா இருக்கேன் .. ஆமா நீ என்ன பண்ணுற இப்போ ? "

" படிச்சுகிட்டு இருக்கேன் அண்ணா .. எக்ஸாம் வரபோகுது .. "

" ஓ ..சரி அப்போ படிச்சு முடிச்சதும் மிஸ் கால் பண்ணுமா ? "

" அட  பரவாலே அண்ணா .. என்னன்னு  சொல்லுங்க .. "

" என் ரூம் கீ உன்கிட்ட தானே இருக்கு ? "

" ஹா ஹா .. என்ன அண்ணா மிஸ்திரி பாக்ஸ் ல இருந்து  கிபிட் எடுக்கணுமா ? "

" ஹஹ .. ஆமா டா "

( வைட் வைட் .. அதுக்கு முன்னாடி நான் மிஸ்திரி பாக்ஸ் பத்தி சொல்லுறேன் .. ஷக்தி இந்தியா விட்டுடு துபாய் போக முடிவு பண்ண அந்த ஒரு மாத காலம் அவன் லைப் ல அவனால மறக்கவே முடியாத நாட்கள் .. அப்போதான் வீட்டில் இருக்குற எல்லாருக்கும் குட்டி குட்டி பரிசுகள் வாங்கி  அதை தன்னுடைய ரூம்ல மறைச்சு  வெச்சிருந்தான் .. அவன் துபாய் சேர்ந்த ஆரம்ப நாட்களில் யாராச்சும் ரொம்ப சோகமா இருக்கும்போது நம்ம முகிழ்மதியின் உதவியில் சக்தியின் கிபிட் அவங்களை வந்து சேரும் .. 4 வர்ஷதுக்கும் சேர்த்த கிப்ட்  வாங்கி வெச்சான் ??? நோ நோ நோ .. வர்ஷத்துக்கு ஒரு தடவை இந்தியா வரும்போதும், அப்பபோ கதிர் கிட்ட சொல்லியும் குட்டி குட்டி கிப்ட்  வாங்கி வெச்சது நம்ம ஷக்தி .. )

" ஒரு நிமிஷம் இருங்க அண்ணா " என்ற மதி அவனின் அறையை திறந்து சென்றாள் ..

" என்ன பரிசு அண்ணா ? "

" ப்ளூ கலர் பெட்டி இருக்கும்ல அதை திற ..."

" இது மித்ரா அண்ணிக்காக  நீங்க வாங்கி வெச்ச கிப்ட்ஸ்  தானே ? "

" ஆமாடா .. அதில் ஒரு குட்டி பிங்க் கலர் பேக் இருக்கும் அதை எடு "

" என்ன அண்ணா சத்தம் வருது ... பூனைக்குட்டி ஆ "

" ஆஹா , இந்த மித்ரா கூட சேர்ந்து என் தங்கச்சியும் மக்கா மாறிட்டா போல "

" அண்ணா .. போங்கண்ணா "

" ஹா ஹா இதுக்கு மேல தூரமா போக முடியாது செல்லம் "

" அண்ணா .. எப்போ வரிங்க நீங்க ? "

" அதெல்லாம் சஸ்பென்ஸ் .. ரொம்பதான் போங்க .. எப்படியும் மித்ராஅண்ணிக்கு  தெரியும் .. நான் அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேனே "

" ஹா ஹா அதையும் பார்ப்போம் .. சரிடா .. இதை உன் கிட்ட நான் கொடுக்க சொன்னேன்னு சொல்லி கொடு ... அதுக்கு பிறகு அவளை போன் பண்ண சொல்லு .. உனக்கு கிப்ட் "

" அண்ணா வழக்கம் போல எனக்கு சேரவேண்டிய கிட்ப்ஸ்  நீங்க நேருல வந்துதான் தரன்னும் "" ஓகே செல்லம் "

" சரிண்ணா  வச்சிடுறேன் "

இங்க நம்ம பாசமலர்கள் கொஞ்சிகிட்டு இருக்கும்போது நம்ம ஹீரோயின் என்ன பண்ணாங்கன்னு பாப்போம் வாங்க ..

அந்த ஒற்றை கால் கொலுசை மெல்ல வருடினாள்  மித்ரா.. " அப்படி என்னதான் இருக்கு அந்த கொலுசுல ? "

அவள் புலம்பி தீர்த்த அனைவருமே அவள் முன் வைத்த கேள்வி அது ... முகத்தில் மேன்மை பரவ, ஒரு மந்தகாச புன்னகையுடன் நடந்ததை நினைத்து பார்த்தாள் ..

நான்கு வருடங்களுக்கு முன்பு, அப்போது அவளுக்கு பதினெட்டு வயது .. ஷக்திக்கு  இருபது வயது .. ( வாவ் .. எனக்கு இருவது உனக்கு பதினெட்டு ..ஹஹஹஹ )

மாடிப்படியில் இருந்து மெல்ல இறங்கி வந்தாள்  மித்ரா.. அவள் போட்டிருந்த நீண்ட பாவாடையை லேசாய் உயர்த்தி, படிக்கட்டுக்கு வலிக்குமோ என்பது போல மெல்ல அடி வைத்து வந்தவளை பார்த்து சிரித்தான் ஷக்தி ..

" என்னடி பண்ணுற ? "

" ப்ச்ச்ச் கொலுசு டா "

" ஹஹஹ .. அதை எல்லாரும் பார்க்கனும்னு தத்தி தத்தி நடக்குரியா ? "

" இல்லடா .. அடிகடி கால் கொலுசு நழுவுது ... "

" லூசு .. அதை டைட் பண்ணு "

" ட்ரை  பண்ணேன் முடில ... "

" ஹஹ சரி அப்படியே உட்காரு "

" எதுக்கு "

" நான் ஹெல்ப் பண்றேன் உட்காரு " என்றவன் கீழே அமர்ந்து அவளின் பாதம் பற்ற போனான் .. சட்டென  காலை விளக்கி கொண்டாள்  மித்ரா ..

" என்னடீ "

" வேணாம் மாமா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.