(Reading time: 26 - 51 minutes)

"க்தி வைட் .. முதலில் ஹீரோவுக்கு உன் மைண்ட்ல இருக்குற இலக்கணத்தை மாத்து .. "

" ம்ம்ம்?"

" வசதியான வாழ்க்கை உள்ளவங்கதான் ஹீரோவா ??? பணம் சந்தோஷத்தை தந்திடாது ஷக்தி .. எல்லாம் இருக்குற ஒருத்தன் மத்தவங்களை சந்தோஷமா வச்சுருக்கறது பெரிய விஷயம் இல்லை .. தன்னுடைய சிட்டிவேஷன் சரி இல்லாதபோதும் தன்னை சுத்தி உள்ளவங்களை சந்தோஷமா வச்சிருபதுதான்   பெரிய விஷயம் ..."

" ம்ம்ம் அப்பறம் ?? "

" அதுவும்  நீ .. நீ எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா ? நீ என் பக்கத்துல இருந்து என்னை சந்தோசம் வச்சுகிட்டா நான் அதை பெருசா எடுத்திருக்கவே மாட்டேன் .. ஆனா நீ என் பக்கத்துல இல்ல . ஆனா என்னை நல்ல தெஇர்ஞ்சு வச்சிருக்குற ... என்னை சந்தோஷப்படுத்துற .. அதானே பெருசு ?? நீ என் பக்கத்துல இல்லைதான் . பட் உன்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டாலே நான் நாள் முழுக்க சந்தோஷமா இருப்பேன் .. இந்த மேஜிக் உன்னால மட்டும்தான் பண்ண முடியும் ஷக்தி .. உன்னால மட்டும்தான் முடியும் .. யு ஆர்  தி ரியல் ஹீரோ .. "

" ஹே அம்மு ... ரிலாக்ஸ் டா.. ஏன் உணர்ச்சிவச படுற ... சாரி .. சும்மாதான் அப்படி உன்னை சீண்டி பார்த்தேன் "

" போடா .. லுசு . உனக்கென்ன தெரியும் உன்னை பத்தி .. எனக்குதான் எல்லாம் தெரியும் .. அண்ட் நீயே உன்னை பெரிய சிடுமூஞ்சினு பில்ட் அப் கொடுக்காத .. உன்னை விட சீனியர் சிடுமூஞ்சி எல்லாம் எனக்கு தெரியும் .. ஒரு தடவை என் காலேஜ்க்கு வந்து பாரு .. அப்போ தெரியும் உனக்கு .. என் லெக்சரர் எல்லாரும் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ராகம் "

" ஹா ஹா ஹா ... "

" ஹ்ம்ம்ம்ம் "

" அம்மு "

" ம்ம்ம்?"

" ஒரு பாட்டு பாடேன் "

" என்ன திடீர்னு "

" சும்மாதான் .. சரி விடு வேணாம் "

" ஏய் ஏய் .. ஓகே பாடுறேன் ,, நீ பாட்டுக்கு போனை வெச்சிடாதெ ..."

" ம்ம்ம்ம் அது .... பாடு "

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத

மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?

உடலும் அல்லாத உருவம் கொள்ளாத

கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்..

உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்லை

இனி இந்த ஊன் உயிர் எனதில்லை

தடையில்லை சாவிலுமே உன்னோட வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை காதல் தானா ?

" சூப்பர் அம்மு "

" ஹீ ஹீ "

(அவங்க ரெண்டு பெரும் இன்னும் கொஞ்ச நேரம் சண்டை போட்டு கொஞ்சிகட்டும் .. நம்ம அன்பெழிலன் சார் கொஞ்சம் வேளையில் பிசியா இருக்காரு .. சோ  நாம கதிர்- காவியா  ரெண்டு போரையும் பார்ப்போம் ..வாங்க..எப்பவுமே கடிகாரத்தை ரிவர்ஸ் ல திருப்புவோம்ல .. போர் எ செஞ்ச்  அதை முன்னாடி திருப்புங்க பார்ப்போம் )

மாலை மணி 6.30 ... ஆபீசிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வீடு திரும்பி கொண்டிருந்தனர் .. காவியதர்ஷினி மட்டும் தன் வேலையில் மூழ்கி இருந்தாள் ...

" உனக்கென்ன மேல நின்றாய்   நந்தலாலா" என்று அவளின் செல்போன் அடிக்கடி சிணுங்கியது .. செல்போன் திரையை பார்த்தவள் கோபமும் இயலாமையும் போட்டிபோட  அதை சைலண்டில்  போட்டுவிட்டு வேலையை தொடர்ந்தாள்.. அந்நேரம் வீட்டிற்கு செல்ல எத்தனித்த ரிஷியும் அவளை பார்த்தும் அங்கேயே நின்றான் ... இந்த ஒரு வாரமாக அவனும் அவளை  கவனித்து கொண்டுதான் இருந்தான்... 8 மணிக்கு  ஆரம்பிக்க வேண்டிய வேலைக்கு அவள்  காலை 7 மணிக்கே வந்துவிடுவாள் . மாலை அனைவரும்  சென்ற பிறகுதான் வீடு திரும்பினாள் ... " ஏன் இப்படி உழைக்கிறாள் ? " இந்த கேள்வியை பலரும் கேட்டும் பதில் இல்லை .. ஒரு பெருமூச்சுடன் அங்கு வந்து நின்றான் ரிஷி ...

" ஹாய்  அண்ணா "

" ஹாய்  காவி .. வீட்டுக்கு போகலையா டா ?"

" ஹ்ம்ம் இன்னும் டைம் இருக்கு அண்ணா "

" உன்னை தேட மாட்டாங்களா ? "

" யாரு ??"

" ..."

" தேட யாரும் இல்லை எனக்கு "

" சாரி காவி " என்றான் நிஜமான வருத்தத்துடன் ..

" அட விடுங்கண்ணா .. நீங்க கெளம்பலையா ? "

 அவன் பதில் சொல்வதற்குள் மீண்டும் செல்போன்  சிணுங்கியது .. அதை கட் செய்தவள் அவன் முகம் பார்க்க

" யாருடா ? " என்று வினவினான் ரிஷி ..

" ராங் கால் "

" ஆர் யு அல்ரைட் ?"

" எஸ் "

" என்னமோ போடா.. எதையும் மனசு விட்டு சொல்ல மாட்டுற நீ " என்றவன் சுற்றி பார்த்தான் ,,யாரும் இல்லை .. கதிரின் அறையில் மட்டும் விளக்கு எரிந்தது .,.. மீண்டும் அவளின் செல்போன் சிணுங்கியது ...அவள் முகத்தையே யோசைனையாய் பார்த்தான் ரிஷி ...

" காவி .. "

" என்னண்ணா ? "

" ஒன்னு சொன்ன தபா எடுத்துக்க மாட்டியே "

" ம்ம்ம்ம் மாட்டேன் "

" கதிரேசன் ரொம்ப நல்லவன் காவியா "

" அதான் எனக்கும் தெரியுமே "

" இல்லடா... என்ன சொல்ல வரேன்னா அவன் ரொம்ப நல்லவன் ... இங்க யாரை நீ கண்ணை மூடிகிட்டு நம்பலாம்னு நீ என்னை கேட்டா நான் அவனைத்தான் கை காட்டுவேன் .. உனக்கேதோ ப்ரோப்ளம் இருக்கு ..பட் நீ சொல்லல .. அவன் இங்கதான் இருக்கான் .. ஒருவேளை உனக்கு ஏதும் உதவி தேவைபட்டா தயங்காமல் அவனை கேளு .. சரியா "

" ம்ம்ம்ம் "

" நான் அவன் கிட்டயும் சொல்லிட்டு போறேன் ... "

" தேங்க்ஸ் அண்ணா "

" அண்ணனுக்கே தேங்க்ஸ் ஆ .... சரிடா பாய் "

" பாய் "

ரிஷி காவியாவிடம் சொன்னதுபோலவே, கதிரிடம் அவளை பற்றி சொல்லிவிட்டு சென்றான் .. கதிரே " நம்ம மச்சான் திடீர்னு திருப்பாச்சி படம் ஓட்டுறானே " என்று நினைத்து சிரித்து கொண்டான் .. அன்று அவனுக்கும்  வேலை அதிகம் இருந்ததால் 7.30 மணி வரை அங்கு இருந்தான் .. காவியாவிற்கு அப்போதுதான் மெசேஜ் வந்தது

"I AM WAITING OUTSIDE "

அதை கண்டதும் என்ன செஇவதெண்டுர் புரியாமல் பதற்றமாய் இருந்தாள்  அவள் ..அதே நேரம் தனதறையிலிருந்து  வெளிவந்த கதிரும் அவளைப் பார்த்தான் .. காவியாவும் அவனைப் பார்த்தாலே தவிர எஹ்டும் பேசவில்லை.. ஒரு கணம் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் அங்கிருந்து சென்றான் .. காவியாவிற்கு கண்ணீர் அருவியாய் பெருகியது..

" இவனும் சென்றுவிட்டானா ?? இப்போது நான் என்ன செய்வேன் ?? வெளியில் அவன் இன்னும் நிற்பானே " என்று என்று எண்ணி மீசை மீது சாய்ந்து அழுதாள் ... அப்போது ............

(என்ன ஆச்சுன்னு அடுத்த வாரம் சொல்றேன் ... ஹீ ஹீ )

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:777}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.