(Reading time: 26 - 51 minutes)

"மா இவங்க உங்களுக்கு ரொம்ப  வேண்டியவங்களா ? "

ஒரு கணம் அவளை திரும்பி பார்த்தவன், ஆத்மார்த்தமாய்

" என் உயிர் டாக்டர் " என்றான் ...

" ஆல் தி பெஸ்ட் " என்று சிரித்தவர் நட்புடன்  அவன் தோளில்  தட்டி கொடுத்து விட்டு சென்றார்.. அவரை வழியனுப்பிவிட்டு தேன்நிலாவின் அருகில் அமர்ந்து அவள் நெற்றியில் வருடித் தந்தான் மதியழகன் ...

" சாரி குட்டிமா .. என்னால தானே உனக்கு இப்படி ??? ப்ளீஸ் சீக்கிரம் குணமாகி என்னோடு சண்டை போடுடா .. அப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கும் .. உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு டா.... படத்துல, கதையில , சம்டைம்ஸ் என் பிரண்ட்ஸ் காதலில் உருகினா கூட நான் சிரிப்பேன் .. இதென்ன முட்டாள்தனம்னு ... ஆனா இப்போதான் எனக்கு அது புரியுது நிலா... இதில் எந்த முட்டாள்தனமும்  இல்லை .. என்னை இப்படி உணர வெச்சது நீதான் செல்லம் ... சீக்கிரம் குணமாயிடு .. " என்றவன் அவளின் வலது கரத்தை தன்  கைகளுக்குள் பொத்திவைத்து அவள் விழி திறப்பதற்காக காத்திருந்தான் .. ( நிலா கண்விழிப்பாங்களா ? இதை அடுத்த எபிசொட் ல சொல்றேன் .. நோ நோ அப்படி முறைக்க கூடாது .. வாங்க நாம சிவகங்கைக்கு போவோம் )

சிவகங்கை,

" ஏண்டி கப்பல் கவிழ்ந்த  மாதிரி உட்கார்ந்து இருக்க ? எக்ஸாம்  எல்லாம் நல்லாதானே பண்ணே நீ ? "

" ...."

" கேள்வி கேட்குறேன் எங்கயாச்சும் பதில் சொல்றாளா ? "

" ..."

" இருடி அந்த தோசை கரண்டிய எடுத்துட்டு வரேன் "

" ஐயோ அம்மா ..ஏன்மா நீங்க வேற இப்படி பண்ணுரிங்க நானே  சோகத்துல இருக்கேன் " என்றாள்  மித்ரா..

" என் சின்னபொண்ணுக்கு என்னடா கவலை " என்றபடி அங்கு வந்தார் தேவசிவம் .. அவருடன் வந்த வைஷ்ணவியும் மித்ராவின் அருகில் அமர்ந்து நெற்றியைத்  தொட்டு பார்த்து

" காய்ச்சல் ஒன்னும் இல்லையே " என்றாள் ...

" ப்ச்ச்  காய்ச்சல் இல்லக்கா .. என் காலை பாரேன் " 

தன் பாதத்தை அவளிடம் காட்டினாள்  மித்ரா .. ( ஷக்தி வரார்நு  தெரிஞ்ச அந்த நாளுக்கு பிறகு அக்கா  தங்கை இருவரும் நல்லா  ராசி ஆகிட்டாங்க என்பதை நானா இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன் .... ஹீ ஹீ )

" என்னடா .. காயம் எதுவும் இல்லையே "

" மக்கு அக்கா .. காயம் இல்லை .. என் வலது கால் கொலுசு காணோம் பாரு "

" அட ஆமா .. நான் கூட வ்பேஷன்னு நீதான் ஒரு கால் கொலுசை கலட்டி வச்சுட்டியோன்னு நெனைச்சேன் .."

" நான் என்னைக்காவது இந்த கொலுசை கலட்டி நீ பார்த்து இருக்கியா ? "

" அப்படி என்ன சீக்ரட் இந்த கொலுசுக்கு மித்ரா ? " - தேவசிவன் ..

" அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா ..சும்மாதான் " என்று மழுப்பினாள் மித்ரா .. அவளுக்கு உதவும் விதமாய் ரூமில் இருந்த செல்போன் சிணுங்க, " இருங்க வரேன் " என்று அங்கிருந்து ஓடினாள்  மித்ரா ..

" ஹலோ "

" ஹேய் அத்தை பொண்ணு "

" ஹேய் இருடா ஒரு நிமிஷம் .. "

" ஓகே ஓகே "

" இப்போ சொல்லு ஷக்தி .. "

" எங்க போன  ஒரு நிமிஷம்னு சொல்லிட்டு ? "

" இல்ல நீயாகவே என்னை அத்தை பொண்ணுன்னு கூப்பிட்டியே .. அதான் .. எப்பவும் நானாக கெஞ்சினால்தான் சாருக்கு அப்படி கூப்பிட மனசு வரும் ? "

" ஹஹஹ .. நீதான் ' ஐ எம் செட் ' நு பேஸ்புக் ல மெசேஜ் பண்ணின .. அதான் .. "

" ஹ்ம்ம்ம்ம் ஆமாடா "

" என்னாச்சு ? "

" என் கொலுசு தொலைஞ்சு போச்சு "

" ...

"" இருக்கியாடா ? "

" லூசாடி நீ ? "

" ஏன் ? "

" பின்ன இதான் உனக்கு சோகமா ? "

" ஹே ஷக்தி நான் எத்தவை வருஷமா அந்த கொலுசை போட்டிருக்கேன் தெரியுமா ? "

" என்ன நீ பிறந்ததுல இருந்தா ? "

" விளையாடதே ஷக்தி .. "

" சரி எங்க தொலைச்ச? "

" மடையா மடையா ... எங்க தொலைச்சென்னு எனக்கு தெரிஞ்சா நானே கண்டு புடிச்சிருக்க மாட்டேனா ? "

" ஹீ ஹீ "

" இந்த இளிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லடா உனக்கு "

" சரி என் பாசமலர் வீட்டில் இருக்கலா ? "

" நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் .. நீ என்ன பேசுற ? உனக்கு உன் தங்கச்சிகிட்ட பேசணும்னா அவளுக்கே கால் பண்ணு "

" அடடா .. ஏண்டி எண்ணையில போட்ட அப்பளம் மாதிரி பொறியுற ? எஸ் ஓர் நோ சொல்லு நான் போனை வெச்சிடுறேன் "

" இருக்கா "

" ஓகே நான் அப்பறமா கூப்பிடுறேன் பாய் "

" எரும மாடு .. எங்கயாச்சும் என் பீலிங்க்ஸ் புரிஞ்சுக்குரானா ? அவனுக்கு அவன் தங்கச்சிதான் முக்கியம் .. சி போடா கழுதை " என்று நன்றாக வசைப்பாடினாள்  மித்ரா ... ( எல்லாம் மனசுக்குள்ளத்தான் )

அதே நேரம் ஷக்தியின்  வீட்டில்,

" ஏண்டி .. அதான் உன் அண்ணா  துபாய் போயாச்சுல இன்னமும்  இந்த ரூம் வாசலை விட மாட்டியா நீ ? " என்றார் திவ்யலக்ஷ்மி ..

" அம்மா, நீங்க என்ன பொண்ணை  கட்டிக்கொடுத்து  அனுப்பின அம்மாவை மாதிரி பேசுறிங்க ? என் அண்ணா இங்க இருந்தாலும்  எங்க இருந்தாலும் நான் இப்படித்தான் .. சரி சரி எக்சம்கு படிக்கணும் டிஸ்டர்ப் பண்ணாதிங்க .. "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.