(Reading time: 26 - 51 minutes)

 ன்னை  பிடிச்சதுனாலத்தான் இப்படியெல்லாம் பண்ணேன் .. ஆனா உன் உணர்வுகளுக்கு மதிப்பு தர கூடாதுன்னு நினைக்கல .. எந்த உறவில் அதிக சுந்ததிரம் இருக்கோ  அந்த உறவுதான் உண்மையாகவும் இயல்பாகவும் இருக்கும் .. நமக்குள்ள என்ன உறவுன்னு கேட்காத .. மே பி இப்போ அதை பத்தி பேசாம இருக்குறதுதான் நமக்குள்ள இருக்கும் குட்டி குட்டி பனித்திரையை நீக்கும்னு .நெனைக்கிறேன் . நீ முடிஞ்சா நோர்மல்லா  அப்பபோ பேசு ..அது போதும் .. ஒரு நல்ல பொண்ணு மனசை நான் கஸ்டபடுத்த விரும்பல... சோ இதுவரை நடந்த எல்லாத்துக்கும் சாரி .. "

" ம்ம்ம் இட்ஸ் ஓகே "

" பிரான்ஸ் ??"

" பிரண்ட்ஸ் ஆ ??"

" ஆமா ஏன் ?"

" இப்போ பிரண்ட்ஸ் நு சொல்லி அப்பறம் மாறிட்டா என்ன பண்ணுறது ?? "

" இந்த உலகத்துல இருக்குற அழகான உறவுகளில் நட்பும் ஒன்னும் நிலா... சொல்லப்போனால் அதுதான் நல்ல உறவுகளுக்கு அஸ்திவாரம்.. நல்ல உறவு நட்பில் ஆரம்பிச்சு எங்க போயி முடிஞ்சாலும் அது சரியாகத்தான் இருக்கும் .. சோ அதை பத்தி இப்போவே யோசிக்கனுமா ?? "

" நல்லா பேசுறிங்க "

" பட் நீதான் நல்லா  பேசல "

" ஏன் ??"

" பின்ன சண்டை போடுறதுக்கு முன்ன கூட நீ வா போன்னு  அழகா பேசின..இப்போ என்ன திடீர் மரியாதை ?"

" அது ......... "

" இந்த அது இது எது ப்ரோக்ராம் எல்லாம் வேணாம்... சாதரணமா எப்போதும் போலவே பேசு "

" சரி அப்போ என்ன கேள்விக்கு பதில் சொல்லு "

" என்ன??? "

" காப்பி நிஜம்மாவே நல்ல இருந்துச்சா ? "

" ஆமா ஏன் ? "

" நான் அதை குடிச்சு பார்த்தேன் ...."

" எது நான் குடிச்சதையா ?? ஹே வாவ் "

" அய்யே நெனப்புதான் உனக்கு .. நீதான் ஒரு சொட்டு மிச்சம் வைக்காமல் காலி பண்ணிட்டியே .. ப்ளாஸ்க்  ல ஊத்தி வெச்சதை குடிச்சென் .. "

" ஹா ஹா ஹா ஹா .. எப்படி இருந்துச்சு ? "

" உன் மூஞ்சி மாதிரி "

" என் மூஞ்சி என்ன உப்பு காப்பி மாதிரியா இருக்கு ??"

" பதில் சொல்லு மது "

" மதுவா ??"

" ஆமா.. நீதானே பிரண்ட்ஸ் நு சொன்ன ? எனக்கு பிரண்டா இருக்கணும்னா சில ரூல்ஸ் இருக்கு .. ரூல் நம்பர்1 .. நான் என் பிரண்டை எனக்கு புடிச்ச நேம் ல தான் கூப்பிடுவேன் .. சோ இனி எனக்கு உன் நேம் மதுதான் "

" ஹா ஹா சரி தாயே .. ரொம்ப லேட்டாச்சு .. போயி தூங்குறியா ?? "

" நீ முதல்ல பதில் சொல்லு .. அப்பறமா தூங்குறேன் .. "

" ஹா ஹா .... நீ நேத்து நைட் ஷிப்ட்  முடிஞ்சு வந்து கொஞ்சம் தூங்கி அங்கிள் கூட பார்ட்டி வந்தது எனக்கு தெரியும்..காரில் கூட உனக்கு லேசா தூக்கம் வர்ற மாதிரி இருந்ததை கவனிச்சேன் .. அந்த டயர்ட்லயும்  உன் அம்மா தூங்குராங்கன்னு  நீ எனக்காக காப்பி போட்டு தந்தியே, அதை பத்தி தப்பா சொல்ல எப்படித்தான் மனசு வரும் சொல்லு ? "

" ஹா ஹா .. ஹே இவ்ளோ உருக்கமா பேசினால் நான் அப்படியே உருகிடமாட்டேன் " என்றாள்  உள்ளளவில் உருகியபடி ..

" வெள் நானும் நீ உருகனும்னு சொல்லல ,.. நிஜத்தை தான் சொன்னேன்.. நாளைக்கு உனக்கு லீவ் தானே .. நல்லா  நிம்மதியா தூங்கி எழு .. குட் நைட் .. "

" குட் நைட் மது " என்று சொல்லி போனை வைத்தாள்  நிலா.. அவன் குரலில் இருந்த தெளிவும் கனிவும் அவளை கொஞ்ச கொஞ்சமாய் கரைத்தது .. இனிய நினைவுகளுடன் நிம்மதியாய் தூங்கினாள்  தேன்நிலா ....

மழையில் நனையாதது காலம்

வெயிலில் ஒதுங்காதது காலம்

ஏழைக்கு இறங்காதது காலம்

செல்வந்தனுக்கும் வளையாதது காலம்

ந்த காலச்சக்கரம் யாருக்கும் காத்திருக்கவில்லை .. சரியாய் ஒரு வாரம் கழித்து,

கண்கள் திறக்க  முடியாமல் அரற்றி கொண்டிருந்தாள் தேன்நிலா ... ஏனோ தன்னிரக்கத்தில் லேசாய் கண்கள் குளமாகியது .. அப்படி என்ன நடந்துருச்சு ?? ஒன்னும் இல்ல நம்ம நிலா மேடமுக்கு பீவர் .. பொதுவா நிலா கொஞ்சம் இயல்புக்கு மாறாக  அதிக நேரம் தூங்கினாலோ  அல்லது அமைதியாய் இருந்தாலோ

" என்னாச்சுடா " , " ஏதும் வேணுமா ? " ," உடம்புக்கு என்ன பண்ணுதுடா ? " என்று நம்ம பாக்கியம் மனோ இருவரும் பாச மழை பொழிஞ்சிடுவாங்க ... ஆனா இன்னைக்கு இப்படி காய்ச்சலாக இருந்தும் பக்கத்தில்  அவர்கள் இல்லை .. உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தார்கள் .. மதியும் இரண்டு மூன்று நாட்களாக அவளிடம் பேசவில்லை .. நேற்று அவன் " ஹாய் " என்று அனுப்பிய மேசெஜிர்கு " சார்  ரொம்ப பிசி போல .. நெனைச்சா பேசுவிங்க இல்லன்னா காக்க  வைப்பிங்க .. இட்ஸ் ஓகே நீங்க உங்க வேலைய பாருங்க .. யாரும் இனி கிட்ட பேச வேணாம்... " என்று பதில் அனுப்பினாள் ... உடனே அவனிடமிருந்து  மெசெஜொ  காலோ வரும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது .. அவனும் பதில் அனுப்பவில்லை .. அவனை திட்டிக்கொண்டு  படுக்கையில் விழுந்தவள் தான் ... தூக்கம் போதவில்லையா ? பெற்றோரின்  ஞாபகமா அல்லது மதியின் நினைவா ? எல்லாமே அவளை காய்ச்சலுக்கு தள்ளியது .. சட்டென யாரோ கால்லிங் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது ... அப்பா அம்மா வந்துட்டாங்க போல, என்று நினைத்தவள் " அவர்களிடம் சாவி இல்லையா ? " என்பதை கூட யோசிக்காமல் சீக்கிரம் கட்டிலில் இருந்து எழ எத்தனித்தாள்.. எப்படித்தான் அந்த மாடிப்படியில் இருந்து மாகி விழாமல் இறங்கி வந்தாலோ, இருக்கும் ஷக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி கதவை திறந்தவள், கண்களை கசக்கி மீண்டும் பார்க்க, அங்கு நின்று கொண்டிருந்தான் மதியழகன் ..

" மது .. மது .. " என்றவள் அவன் மீதே மயங்கி சாய்ந்தாள் ....

" நிலா ... நிலா ..... என்னடா ஆச்சு ? "

" ம்ம் ..   ஆங் .. " என்ற அரற்றியவளை  அலேக்காக தூக்கி அருகில் இருந்த அறையில் படுக்க வைத்தான் ..

" ச்சா .. என்ன இப்படி காய்ச்சலா கொதிக்குது ?? அங்கிள் ஆன்டி வீட்டில் இல்லையா ? " என்றவன் சட்டென தன செல்போனில் தனக்கு தெரிந்த டாக்டரை அழைத்தான் ..

" இந்த மருந்தெல்லாம் 3 டேஸ்  கொடுங்க மிஸ்டர் மதியழகன் .. நத்திங் டூ வரி .. சீக்கிரம் சரி ஆகிடும் .. எதாச்சும்னா எனக்கு  கால் பண்ணுங்க " என்றார் டாக்டர் மகரந்தன் .. ( இவரை ஞாபகம் இருக்கா ? பாவம் எப்போ பார்த்தாலும் இந்த ஹீரோயின் நோய்வாய்ப்பட்டா ஹீரோ கிட்ட மாட்டிகிறதுக்குன்னே  இவர் டாக்டருக்கு படிச்சாரு போல.. ஹஹஹஹஹ )

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.