(Reading time: 36 - 72 minutes)

முதலில் ஜூசை குடிக்க கொடுத்தாள்….. மறுப்பேதும் சொல்லாமல் ஸ்ட்ரா என்பதால் வலியின் முக சுழிப்பு இன்றியே அதை உறிஞ்சினான் அவன்…..

ஆனால் அடுத்து அவன் படுக்கவும் கர்சீஃபை நனைத்து அவன் நெற்றியில் இவள் வைக்க, அவனோ அடுத்த நிமிடம் அதை எடுத்துப்போட்டுவிட்டு தனக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்து தன் மீது வைத்துக் கொண்டான்.  அவளின் கையை எடுத்து  தன் நெற்றியில் வைத்திருந்தான்.

இதென்ன பிடிவாதம்…இப்டின்னா எப்டி டெம்ரேச்சர் குறையும்…. என இவளுக்குள் ஒன்று டீச்சர் வேலைப் பார்த்தாலும்…. இன்னொன்றோ இவள் கையை அவன் மீதிருந்து அசைக்க கூட அனுமதிக்கவில்லை….. அவனுக்கு இத்தொடுகை தேவை என்ற நினைவு……இவளுக்கும்தான்.

இப்போது  பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவளை மிகவும் நெருங்கி படுத்துக் கொண்டான் அவன். இத்தனைக்கும் கண் திறக்கவே இல்லை அவன்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சுச்சியின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்... 

படிக்க தவறாதீர்கள்...

சில நொடி  அவன் முகத்தையே பார்த்திருந்த மனோவுக்கு உள்ளுக்குள் ஏதோ உந்த…. அவன் தேவை என ஏதோ புரிய…..மெல்ல அவன் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள்…..

இப்போது கண் திறந்து அவளை ஒரு நொடி  பார்த்தான் அவன். பின் வாகாக ஒரு புறமாய் திரும்பிப் படுத்தவன்……இன்னும் தன் நெற்றியிலிருந்த அவள் கைமீது தன் கையை வைத்துக் கொண்டு மீண்டுமாய் கண் மூடிக் கொண்டான்…..

மனோகரிக்கு உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்கிறது…..அவன் தோள்பட்டையில் பார்த்த அந்த காயம் அவளுக்கு ஏதேதோ கிலியை உண்டு செய்கிறது…… மடியிலிருக்கும் அவன் சூடு அவள் மீதிறங்கி வாதித்துக் கொண்டு இருக்கிறது….. ‘ஹை டெம்பரேச்சர்…..இவ்ளவு ஊண்ட்ஸ்…. எதுவும் செப்டிக் ஆகி இருக்குமோ’ என என்னவெல்லாமோ எக்குதப்பாய் தோன்றி பயம் காட்டுகிறது….

ஆனாலும் இப்போது  அவனுக்குள் இறுக்கம் குறைவது இவளுக்கு மெல்ல மெல்ல புரிய…… அதுவாக சென்று மெல்லமாய் மென்மையாய் அவன் தலை முடியை கலைத்து கோத ஆரம்பித்தது அவள் மறுகை.

 இப்போதும் கண் திறக்கவில்லை எனினும் அவன் முகத்தில் வந்து பரவுகிறது ஒரு இலகு நிலை…..  கரையத் தொடங்கினாள் மனோகரி….

 “மனுப்பா என்னாச்சு…? எதுவும் ஆக்சிடெண்டா…?”  டாக்டர் வர்றப்ப என்ன விஷயம்னு சொல்லவாது தெரியனுமே… சின்னதாய் கூட அவனுக்கு தொந்தரவாய் தெரிந்துவிடக் கூடாதென வருடும் குரலில் தான் கேட்டாள் கணவனை.

ஆனாலும் அதிலும் அவள் தவிப்பு தானாக தெரிகிறதே….

ஆமோதிப்பாய் சற்றாய் தலையசைத்தான்.…. “எனக்கு ஒன்னுமில்ல மனு” லிப்ஃஸோட வலியத்தாண்டி அவன் பேசுகிறான் என்பது இவளுக்குப் புரிகிறது…

“அச்சோ….வாய திறந்து பேசாதீங்க நீங்க….” அவன் வலி உணர்ந்து பதற்றமாய் தடை சொன்னவள்…

ஹாஸ்பிட்டல் போய்டுத்தான் வந்திருக்கிறான்னு  தெரியுது….. ஆனா அப்றமும் ஃபீவர் இருக்குதே… என்ற புரிதலில்

“மெடிசின்லாம் எடுத்துக்கிட்டீங்கதானே…?” என்றாள் அடுத்த கேள்வியாக. எதற்கு வருகிறது என்றே தெரியாமல் அழுகையின் சாயல் குரலில்.

மீண்டும் ஆமாம் என்பது போல்  தலை அசைத்தவன்…..

“அப்றம் எ..” என மூன்றாவது கேள்வியை கேட்க தொடங்கி இருந்த இவள் உதடுகள் மீது,  பேசாதே எனும்படியாக….தன் வலக்கை ஆட்காட்டி விரலை உயர்த்தி  மென்மையாய் வைத்தான்….

“சரி எதுவும் கேட்கலை மனுப்பா…”

ஃபீவர் அதிகமா இருக்றதால பேசுறதை கவனிக்க கூட அவனுக்கு கஷ்டமா இருக்கு போல…. இவள் இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே இவள் இதழ்கள் மீது வைத்த தன் விரலை எடுத்து தன் உதடுகளில் ஒற்றிக் கொண்டான் அவன்….இவள் சற்றும்  எதிர்பாரத செயல்…….

இருந்த அத்தனை தவிப்பும் துடிப்பும் மறந்து போக அவன் சிறு செயலில் சிலீர் என்கிறது இவள் சரீர பாகம்.

‘இத்தன ஃபீவர்லயும்….’ என இவள் ஏதோ நினைக்க தொடங்க அது என்ன  என்பதே நினைவிலின்று நீங்கிப் போனது அடுத்த நொடி….

ஏனெனில் இப்போதோ அவன் நெற்றியிலிருந்த  இவள் கையை எடுத்து அதன் உள்ளங்கை பாகத்தில் இதழ் பதித்து எடுத்திருந்தான் அவன். முதல் முத்தம். அவன் முகத்தில் அவனது ட்ரேட் மார்க் குறும்பு…..

ஹாஃப் செகண்டில் ஜிவ் என்ற உணர்வும்……என்ன இவன்.. என்ற நினைவும் இவளுள் அங்கங்கு அதகளமாய் ஏறி இறங்கினாலும்….

‘அச்சோ லிப்ஸ்ல ஸ்டிச் போட்றுக்கப்ப என்ன செய்றான் இவன்…..’ என்பதுதான் முக்கியமானதாக பட்டது அவளுக்கு…..

“எனக்கு ஒன்னும் இல்லன்னு சொல்றேன் மனு….” அதற்குள் அடுத்துமாய் சொன்னவன் வாய் மீது தன் கையை தானே வைத்திருந்தாள் மனோ…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.