(Reading time: 36 - 72 minutes)

ந்த நேரத்தில் தான் அவரைப் பார்த்த மனோ…. அவசரமாக அருகிலிருந்த தலையணைக்கு அவன் தூக்கம் கலையா வண்ணம் மித்ரனை மாற்றியபடியே….

“சாரி அத்த…..தூங்கிட்டேன்….வாங்க…” என வரவேற்றாள்.

இவள் குரல் காதில் விழவும் நின்ற களஞ்சியமோ இவர்கள் புறம் திரும்பாமலே “இல்லமா ரெஸ்ட் எடுங்க…..அப்றமா வர்றேன்….” என மறுத்தார்.

இதற்குள் மித்ரனிடமிருந்து முழுவதும் விடு பெற்றிருந்தவள் எழுந்து அவரிடமாக விரைந்தாள்.

எது எப்படியோ அவர் வந்தது மித்ரன் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள அல்லவா….தாய் மனம் தவிக்கும்தானே…..தவிக்குதோ இல்லையோ…..சொல்லி ஆக வேண்டும் இவள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

குருராஜாஜனின் "உனக்காக மண்ணில் வந்தேன்" - Romantic fantasy love story 

படிக்க தவறாதீர்கள்...

“அவங்களுக்கு சின்னதா ஆக்சிடெண்டாம் அத்த…. கொஞ்சம் அடி பட்றுக்குதான்….பட் பயப்பட ஒன்னுமில்லன்னு டாக்டர் சொல்றாங்க…..சீக்கிரம் ரெக்கவர் ஆகிடுவாங்க…. வீட்டுக்கு வர்றப்ப ஃபீவர் இருந்துச்சு அதான் டாக்டர வர சொன்னேன்……இப்ப டெம்பரேச்சரும் இல்ல….தூங்கிட்டாங்க…..நீங்க எதுக்கும் வொர்ரி பண்ணிக்காதீங்க…… இப்ப உள்ள வாங்க…”

இவள் சொல்லச் சொல்ல இவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த களஞ்சியம் முகத்தில் ஆயிரம் எண்ண ரேகைகள்….

“இல்லமா…. அவன் தூங்கட்டும்….  இப்ப அவன் தூங்குறப்ப நீயும் தூங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ…..”

அவர் சொல்ல இவள் பதிலென்று எதுவும் சொல்லாமல் மௌன சம்மதத்துடன் நிற்க

“நீங்க தூங்குறீங்கன்னு எனக்கு தெரியாதுமா…..இன்பா இங்க இருக்கான்னதும் யோசிக்காம வந்துட்டேன்” என ஏனோ தன் செயலுக்கு விளக்கம் சொன்னார் களஞ்சியம்.

‘ஓ மை காட்….அண்ணி பத்தி யோசிக்காம எப்படி தூங்கிட்டேன்…. கேட் பக்கம் இருக்கேனாங்களே….அப்பவே வந்துறுப்பாங்க….. தூங்குறத பார்க்கவும் அவங்களும் எழுப்பலை போல…. இப்டி தூங்குறத அவங்க வேற பார்த்தாச்சா….’ எல்லாம் தாண்டி கடைசி நினைவில் கன்னம் சிவக்கிறது சின்ன பெண்ணிற்கு….

“எது வேணும்னாலும் எப்பனாலும் என்னய கூப்டுமா…. இன்பாவும் இங்கதான் இருக்கா…..அவள கேட்டாலும் சரிதான்…..டாக்டரோ மெடிசினோ இல்ல வேற எதுனாலும் உடனே இங்க வந்துடும்…..”

“சரி அத்த….”

“நம்ம வீட்டு ஆட்களை தவிர யாரும் இங்க வரமாட்டாங்கமா…..நீ கதவை பூட்டி வைக்கனும்னு கூட எதுவும் இல்ல…..சாத்தி வச்சிறுந்தா கூட போதும்….”

‘இது கதவை சாத்தியாவது வைன்னு இன்டைரக்டா சொல்றதோ….?’ இப்படி எண்ணம் ஓடினாலும் இதற்கும் சம்மதமாக தலை ஆட்டி வைத்தாள் மனோ.

இன்பாவும் அகதனும் எப்போது வேண்டுமானாலும் வருவார்கள் என்ற நினைவில் மித்ரன் அவனாக இவள் மடியில் படுத்த போது…..ஒரு ரெண்டு நிமிஷத்துல எந்திரிச்சிடப் போறோம் என நம்பிக் கொண்டு கதவை மூடாமல் அமர்ந்தவள் அப்படியே தூங்கிப் போயிருக்கிறாள்…..

‘அட கடவுளே அகி வேற வந்திருப்பானே…..’ என இப்போது உறைக்கிறது இவளுக்கு….

‘அச்சோ அவனும் பார்த்தாச்சா இந்த ஆனந்த சயனத்த…..’ தன் கையால் நெற்றியில் அடித்துக் கொண்டவள்  சிவந்தாள்…. ‘டேய் மனுப்பையா இப்டி என் மானத்த வாங்கிறியேடா…’   

‘போடா அகி….நீயாவது எழுப்பி விட்றுக்கலாம் என்னை……என் மாமியர் வரைக்கும் மானம் மார்ச் ஃபாஸ்ட் போட்டு போயிட்டு…..’ இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே உறைக்கிறது…

எது எப்படியானாலும் இந்த நிலையில் கதவை திறந்து வைத்துவிட்டு செல்லும் ஆள் அகதனோ இன்பா அண்ணியோ கிடையாது….. இவளை எழுப்ப வேண்டாம் என நினைத்திருந்திருக்கலாம் ஆனால் கதவை மூடியாவது வைத்துவிட்டுப் போயிருப்பார்களே….

ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக அகதன் இன்னும் வராமல் கூட இருக்கலாம்…..ஆனால் அண்ணி வந்தாச்சு போலயே……அப்றம் என்னாச்சு….?

எதுனாலும் இப்ப இவ அண்ணிய போய் பார்த்தாக வேண்டும்…. ஆனால் அதற்கு மித்ரனை தனியேவிட்டு போக வேண்டுமே……. அடுத்த அறைக்குத்தான் எனினும் அவனை அவள் பார்வை தொடா தொலைவில்விட இவளால் முடியாது……

சற்று நேரம் அங்கு நின்று தவித்தவள் ஒருவாறு தன்னை தானே சமாதானபடுத்திக் கொண்டு  அரை மனதாக அடுத்த அறைக்குப் போனாள்….அதுவும் தன்னவன் தூங்கும் அறையை பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு….

ங்குதான் இவளும் இன்பாவும் சேர்ந்து தங்குவது வழக்கமாகி இருந்தது இத்தனை நாளில்.  இவர்கள் அறையைப் போல அங்கும் திறந்து தான் இருந்தது கதவு….

“அண்ணி” என்றபடி இவள் எட்டிப் பார்க்கும் போது, படுக்கையில் முட்டு கூட்டி அமர்ந்து அதற்குள் முகம் புதைத்திருந்த இன்பா, எழுந்து இவளை நோக்கி வந்த படியே “வா மனோ” என வரவேற்றாள்.

“எந்திரிச்சாச்சா……இப்ப அவனுக்கு எப்டி இருக்கு….?” பரிவாய் கேட்டவள் வந்து இவள் இரு கைகளையும் பற்றினாள்.

“ரொம்ப பயந்துட்ட போல….. “ இன்பாவின் இந்த குரலில் நிச்சயம் அக்மார்க் பாசம் இருந்தது.

“அவனுக்கெல்லாம் ஒன்னும் ஆகாது…...” உணர்ந்து சொன்னாள் மனோவின் அண்ணி.

‘இவ்ளவு பாசமுள்ளவங்க இவள ஏமாத்திட்டு வெளிய போறாங்க…’ என்றது மனோவின் அனலிடிகல் ப்ரெய்ன்.

“அவங்களுக்கு இப்ப ஃபீவர் இல்ல…..தூங்கிட்டு இருக்காங்க…. “ பதில் சொன்ன மனோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.