(Reading time: 36 - 72 minutes)

நான் அழல மனு….நீங்க பேசாதீங்க…” மனோவுக்குமே இப்போது பதற்றம் குறைந்து சற்று இயல்பாய் இருப்பது போல் ஒரு ஃபீல்

சற்று நெரத்தில் கீழே க்ரவ்ண்ட் ஃப்ளோரில்  ஏதோ சத்தம்… மனோ எழுந்து இந்த ரூம் வாசலை அடையும் போதே படியேறத் தொடங்கி இருந்த அகதன் பார்வையில் படுகிறான்….அவனோடு ஒரு டாக்டர்.

அடுத்து அகதனுக்கு விஷயம் சொல்லி…..

“ஹாஸ்பிட்டல் போயிருக்கார்தானே மாப்ள…அவர் மெடிகல் ரிப்போர்ட் அவர் கொண்டு வந்த லக்கேஜ்ல இருக்கனுமே மகி” என அவன் சொன்ன பிறகே அவளுக்கு உறைக்க, அதை தேடி எடுத்துப் படித்துவிட்டு

 மித்ரனை பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரிடம் கொடுத்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்...

அவன் ஷோல்டர்ல உள்ள காயம் புல்லட் கைய உரசிகிட்டு போனதால வந்ததுன்னு ரிப்போர்ட்ல பார்க்கவும், இப்போது வந்திருந்த தைரியம் திரும்பவும் ஆட்டம் கண்டாலும்….இப்ப பயப்படுறதை விட முக்கியம் அவனைப் பார்த்துக்கிறது என்ற அறிவின் அதட்டலுக்கு அடங்கிப் போனாள்.

“இது நார்மல் ஃபீவர்தான்….பயப்படுற மாதிரிலாம் எதுவும் இல்ல…..கொடுத்துறுக்க மெடிசினையே கன்டின்யூ செய்யட்டும்…..இப்ப டெம்ரேச்சர் டவ்ண் ஆறதுக்கு கூட இதையும் சேர்த்துக்கோங்க….…..” என டாக்டர் விடை பெற்ற பின்புதான் மனோவுக்கு சற்று சமநிலை வந்தது தன்னவன் விஷயத்தில்.

டாக்டர் கையோடு கொண்டு வந்திருந்த பாரசெட்டமாலை மித்ரனுக்கு  கொடுத்தவள்

“நீயே போய்…எதாவது ஒரு நார்மல் மெடிகல் ஷாப்ல..இந்த பாரசெட்டமால்ஸ் வாங்கிட்டு வா….” என இன்னும் தேவைப் படும் மாத்திரைகளை வாங்க அகதனை அனுப்பி வைத்தபின்

‘இன்பா இன்னும் வரலையே’ என்ற நிலையை பெரிதாக உணர தொடங்கினாள் அடுத்து.

தான் படுத்திருக்கும் கட்டிலுக்கு அருகில் நின்று பயத்தோடு யோசித்துக்கொண்டு நிற்கும் மனைவியைப் பார்த்த மித்ரனோ, அவள் கையைப் பற்றி இழுத்து தன் அருகில் அமர வைத்தவன், அவள் மடியில் உரிமையாய் படுத்து, முன்பு போல அவள் கையை எடுத்து தன் மீது வைத்துக் கொண்டான்.

“என்னாச்சு மனு....வேற எதுவும் ப்ரச்சனையா…?” அவன் தான்.

அவனிடம் சொல்லவா வேண்டாமா என்றிருக்கிறது இவளுக்கு….. வலியோடு பேசும் அவன் வாயில் சென்று நிற்கிறது இவள் பார்வை…..டாக்டர் வந்துட்டு போயிருக்காரே தவிர டெம்பரேச்சர் வேற அவனுக்கு அப்படியேதான் இருக்கு….

‘எதுக்கும் இன்னொரு டைம் இன்பாவ கூப்ட்டு பார்க்கலாம்…..அடுத்து சொல்லிட வேண்டியதான்….’ அருகிலிருந்த மொபைலை தான் அசையாமல் கை மட்டுமாக நீட்டி எடுத்து இன்பாவை அழைத்தாள்.

முதல் ரிங்லயே இன்பா லைனில் வந்தாள்.

“வந்துட்டுதான் இருக்கேன் மனோ….. பக்கத்துல வந்துட்டேன்…. என்னப்பத்தி பயப்படாதமா நீ……தம்பி எப்டி இருக்கான்…? டாக்டர் வந்தாச்சா…? ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டீங்களா…..எந்த ஹாஃஸ்பிட்டல்…..நானும் அங்கயே வந்துடுறேன்….” ஆறுதலும் படபடப்புமாய் அவள்.

இன்பா பத்திய தவிப்பு மீண்டுமாய் சற்று இறங்குகிறது மனோவுக்கு…

“இல்லண்ணி…..வீட்லதான் இருக்கோம்…பட் நீங்க உடனே வீட்டுக்கு வந்துடுங்க ப்ளீஸ்…..” மித்ரனுக்கு பெருசா ஒன்னுமில்லன்றப்ப திரும்பி எங்கயும் போய்டுவாளோ இன்பா என்றிருக்கிறது இவளுக்கு.

“இதோ இப்ப வந்துடுவேன்பா…. நம்ம வீட்டு கேட் பக்கம் வந்துட்டேன் ” பதற்றம் குறைந்த நட்பு குரலில் இன்பா கொடுத்த உறுதி மொழியில் இவளின் பதற்றமும் தணிய….. தெளிந்த முகத்துடனேயே பேச்சை முடித்தாள்.

இவளை ஒரு பார்வை பார்த்த மித்திரனோ இப்போது ஒன்றும் கேட்காமல் கண் மூடிக் கொண்டான். இவள் அவன் முடியை ஆசையாகவே கலைக்க தொடங்கி இருந்தாள்.

மீண்டும் மனோ ஏதோ அரவம் உணர்ந்து கண் திறக்கும் போதுதான் அவளுக்கு மெல்ல புரிகிறது அவள் தன்னைமீறி தூங்கி இருக்கிறாள் என….. அவன் இன்றி தூக்கம் தொலைத்து தவித்தவள் அல்லவா…..

அவசரமாய் அவனைப் பார்த்தாள்…. இவள் மடியில் தலை வைத்து, தன்  கன்னம் மீது அவள் கை வைத்து, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் அவன்….. மெடிசின்… ட்ராவல்….டயர்ட்னஸ் உபயம்.

அடுத்துதான் அசைவு தெரிந்த அறை வாசலை திரும்பிப் பார்த்தாள். அவசரமாக திரும்பிக் கொண்டிருந்தார் களஞ்சியம்.

வெளியே வேலையாக சென்றிருந்த களஞ்சியம் அப்போதுதான் வீடு வந்தவர் விஷயம் கேள்விப்பட்டு  இவர்கள் இருந்த இடத்திற்கு வந்தால்…… இப்படி ஒரு கோலத்தில் இளையவர்களை கண்ட பின் என்ன செய்யவென தெரியவில்லை ஒரு நொடி அவருக்கு….

தார்கிகா வந்து கத்திவிட்டு போன நொடியிலிருந்து ‘மித்ரன் மனோவ கட்டாயபடுத்தியா கல்யாணம் செய்துருக்கான்? அதான் அவன் மேல கோபத்தில மனோ ஸ்விஸ் கூட போகலையோ?’ என அவரை குடைந்து கொண்டிருக்கும் வேதனை இந்த காட்சியில்  குளிர்தண்ணி கொட்டிய நெருப்பாய் குளிர்ந்து போனாலும்….

பிள்ளைகளை இப்படிப் பார்க்க தர்மசங்கடப் படும்தானே பெற்ற மனம்…..சட்டென திரும்பிவிட்டார்….’அப்றமா வந்து பார்க்கலாம்’ என.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.